search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kanthuvatti"

    • மதுரையில் கந்துவட்டி வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
    • ஆபாசமாக பேசி வட்டி கேட்டு மிரட்டியுள்ளார்.

    மதுரை

    மதுரை காமராஜர் தெருவை சேர்ந்தவர் செல்வி (45). இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரிடம் ஒரு லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் வட்டிக்கு வாங்கினார்.

    இந்த தொகைக்கு மாதம் ரூ.12 ஆயிரம் வட்டியாக ஒவ்வொரு மாதமும் செலுத்தி வந்தார். 2 மாதமாக வட்டியை செலுத்த முடியவில்லை.

    ஆத்திரமடைந்த ஆறுமுகமும், உறவினர் பூரணமும் செல்வி வீட்டுக்கு சென்று ஆபாசமாக பேசி வட்டி கேட்டு மிரட்டினர்.

    இதுகுறித்து செல்வி கீரைத்துறை போலீசில் புகார் செய்தார். போலீசார் 2 பேர்மீதும் வழக்குப்பதிவு செய்து கந்துவட்டி சட்டத்தில் ஆறுமுகத்தை கைது செய்தனர்.

    • கந்துவட்டி வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
    • ஆத்திரம் அடைந்த ஆறுமுகம், பூரணம் என்பவருடன் சேர்ந்து செல்வியின் வீட்டுக்கு வந்து அவரை அடிக்க பாய்ந்தார்.

    மதுரை

    மதுரை காமராஜர்புரம், கக்கன் தெருவைச் சேர்ந்த முத்துராமலிங்கம் மனைவி செல்வி (45). இவர் அதே பகுதியில் வசிக்கும் ஆறுமுகம் (58) என்பவரிடம் ரூ.1.85 லட்சம் கடன் வாங்கினார். இதற்காக அவர் மாதம்தோறும் ரூ.12 ஆயிரம் செலுத்தி வந்தார்.

    2 மாதங்களாக செல்வி வட்டி செலுத்தவில்லை. ஆத்திரம் அடைந்த ஆறுமுகம், பூரணம் என்பவருடன் சேர்ந்து செல்வியின் வீட்டுக்கு வந்து அவரை அடிக்க பாய்ந்தார்.

    இதுகுறித்து செல்வி கீரைத்துறை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆறுமுகத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கந்துவட்டி குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்த வேண்டும் என பா.ம.க. வலியுறுத்தியுள்ளது.
    • ஏழை அப்பாவி தொழிலாளர்கள் காப்பாற்றப்படுவார்கள்.

    சிவகாசி

    விருதுநகர் மத்திய மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் டேனியல், விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகருக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் சிவகாசி பகுதியில் கந்து வட்டிக்காரர்கள் தரும் தொல்லை அதிகளவில் உள்ளது. இது குறித்து புகார் கொடுக்க பாதிக்கப்பட்டவர்கள் அச்சம் அடைந்துள்ளனர். அதனால் சிவகாசி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் தொழிலாளர்களை வஞ்சித்து வரும் கந்துவட்டி கும்பல் குறித்து யாரும் புகார் அளிக்க முன்வருவதில்லை.

    அதனால் மாவட்ட போலீஸ் நிர்வாகம் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து புகார்கள் வாங்க மாவட்ட அளவில் அல்லது தாலுகா அளவில் சிறப்பு முகாம்களை நடத்த வேண்டும். இதில் கொடுக்கப்படும் மனுக்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நேரடி பார்வையில் விசாரணை நடத்த வேண்டும். அப்போது தான் கந்து வட்டிக் காரர்களின் பிடியில் இருந்து ஏழை அப்பாவி தொழிலாளர்கள் காப்பாற்றப்படுவார்கள்.

    துப்புரவு பணியில் ஈடுபட்டு வரும் பல தொழிலாளர்களின் ஏ.டி.எம். கார்டுகளை கந்துவட்டி கும்பல் பறித்து கொண்டு வட்டி வசூல் செய்வதாக தகவல் வருகிறது. இதை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×