என் மலர்
நீங்கள் தேடியது "Karaikal teacher"
காரைக்கால்:
காரைக்கால் பழைய ரயிலடி அருகே நடைபெற்ற இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு, சங்க தலைவர் முத்தையா தலைமை தாங்கினார். காரை பிரதேச அரசு ஊழியர் சம்மேளன கவுரவ தலைவர் ஜெய்சிங், தலைவர் சுப்ரமணியன், பொதுச் செயலாளர் ஷேக் அலாவுதீன், ஆசிரியர் கூட்டமைப்பு தலைவர் முத்தமிழ் குணாளன், பொதுச் செயலாளர் காளிதாஸ், தலைமை ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் விஜயராகவன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில், காரைக்காலில் பணியாற்றும் புதுச்சேரி பகுதி பட்டதாரி ஆசிரியர்களிடம் ஜூன் மாதம் சம்பளத்தில் பிடித்தம் செய்த ஊதியத்தை திரும்ப வழங்க வேண்டும், மே மாதம் வழங்க வேண்டிய பஞ்சப்படியை உடனே வழங்க வேண்டும்.
காரைக்கால் பகுதியில் காலியாகவுள்ள ஆசிரியர், தலைமை ஆசிரியர் மற்றும் விரிவுரையாளர் ஆகிய 113 பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும், காரைக்கால் கல்வித்துறையில் உள்ள இரு நிர்வாக பதவிகளான தலைமை கல்வி அதிகார மற்றும் இணை இயக்குனர் பதவிகளில் ஒன்றினை தலைமை ஆசிரியருக்கு வழங்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைள் வலியுறுத்தப்பட்டது. முன்னதாக, சங்க பொதுச் செயலாளர் சிவகுமார் அனைவரையும் வரவேற்றார். முடிவில் சங்க பொருளாளர் சிங்காரவேலு நன்றி கூறினார். #Teacherstruggle