search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Karaikudi accident"

    காரைக்குடி அருகே கார் கவிழ்ந்த விபத்தில் மாணவர் பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #accidentcase

    காரைக்குடி:

    சென்னை வ.உ.சி. நகரைச் சேர்ந்தவர் சரவணன். இவ ரது மனைவி சுமதி (வயது48). இவர் ராமநாதபுரம் மாவட் டம் கீழக்கரையில் உள்ள குலதெய்வம் கோவில் வழி பாட்டிற்காக காரில் புறப் பட்டார்.

    அவருடன் உறவினர் கள் சென்னை திருமுல்லை வாயலைச் சேர்ந்த முருகன் மகன் அஸ்வின் (17) மற்றும் தங்கராஜ், நாகவள்ளி ஆகி யோரும் வந்தனர். சென் னையை சேர்ந்த டிரைவர் ஆனந்தன் காரை ஓட்டினார்.

    இன்று அதிகாலை புதுக்கோட்டை மாவட்டம் அமராவதியை அடுத்த சங்கரபதிகோட்டை அருகே கார் வந்தபோது திடீரென நிலைதடுமாறியது. ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய கார் சாலையில் கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் காரில் சென்ற அஸ்வின், தங்கராஜ், சுமதி, டிரைவர் ஆனந்தன் காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக தேவகோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    ஆனால் வழியிலேயே அஸ்வின் பரிதாபமாக இறந்தார். அவர் பிளஸ்-2 மாணவர் என்பது குறிப் பிடத்தக்கது.

    விபத்து குறித்து சோம நாதபுரம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சின்னச் சாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின் றார்.

    ×