என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Karaiyar Sorimuthu Ayyanar Temple"
- பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது.
- பக்தர்கள் தாமிரபரணி ஆற்றில் புனித நீராடி விட்டு சாமி தரிசனம் செய்தனர்.
புரட்டாசி மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி, பாபநாசம் காரையார் சொரிமுத்து அய்யனார் கோவிலில் நேற்று சிறப்பு பூஜை நடந்தது. மகாலிங்க சுவாமி, சொரிமுத்து அய்யனார், சங்கிலி பூதத்தார், பேச்சியம்மன், பட்டவராயன், தூசி மாடன், தளவாய் மாடன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது. பக்தர்கள் கோவில் முன்பு ஓடும் தாமிரபரணி ஆற்றில் புனித நீராடி விட்டு, நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
இதற்காக நேற்று காலை முதலே கோவிலுக்கு பக்தர்கள் மோட்டார் சைக்கிள், கார் மற்றும் அரசு பஸ்களில் வந்து குவிந்தனர். இதனால் பாபநாசம் பணிமனையில் இருந்து சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன.
சொரிமுத்து அய்யனார் கோவிலை சுற்றி மண்டபம் அமைப்பது மற்றும் கோவில் திருப்பணிக்காக ரூ.12 கோடி ஒதுக்கியதாக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தெரிவித்தார். ஆனால் இதுவரை அதற்கான பணிகள் எதுவும் தொடங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
கோவிலில் பக்தர்கள் செல்லும் பாதையில் உள்ள ஆஸ்பெஸ்டாஸ் சீட்டால் ஆன மேற்கூரை உடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. எனவே அசம்பாவிதம் எதுவும் நடப்பதற்கு முன்பாக சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- 26-ந்தேதி முதல் 30-ந் தேதி வரை தனியார் வாகனங்கள் இந்த கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை.
- ஆடி அமாவாசை திருவிழா வருகிற 28-ந்தேதி நடக்கிறது
காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா வருகிற 28-ந்தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது. கொரோனா பரவல் காரணமாக 2 ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்கள் பங்கேற்புடன் நடைபெறவுள்ள இந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையொட்டி முன்னேற்பாடுகளை செய்துள்ள மாவட்ட நிர்வாகமும், வனத்துறையும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. தற்போது பாபநாசம் சோதனைச்சாவடியில் இருந்து காரையாறு வரை 14 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. இதனால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வரை சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று, இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் தனியார் வாகனங்களில் சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் தங்களது பொருட்களை கோவிலில் இறக்கி வைத்து விட்டு, சாமி தரிசனம் செய்த பின்னர் இரவில் தங்காமல் வாகனங்களில் கீழே இறங்கி வந்து விட வேண்டும். கோவிலில் வாகனங்களை நிறுத்த அனுமதி கிடையாது.
மேலும் ஏற்கனவே அறிவித்தது போன்று நாளை (திங்கட்கிழமை) பக்தர்கள் தனியார் வாகனங்களில் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு தங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அங்கு வாகனங்கள் நிறுத்துவதற்கு அனுமதி இல்லை.
நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) முதல் 30-ந் தேதி வரை தனியார் வாகனங்களில் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு செல்வதற்கு அனுமதி இல்லை. தனியார் வாகனங்களை அகஸ்தியர்பட்டியில் விட்டு விட்டு, அரசு பஸ்களின் மூலமே பக்தர்கள் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்ய வேண்டும்.
இந்த தகவலை களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குனர் செண்பகப்பிரியா தெரிவித்துள்ளார்.
- கடந்த 2 ஆண்டுகளாக ஆடி அமாவாசை திருவிழாவுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
- 26-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
பாபநாசம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில் அமைந்துள்ளது. கோவிலில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசை திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். கோவிலில் இந்த ஆண்டு ஆடி அமாவாசை திருவிழா வருகிற 28-ந்தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது.
கொரோனா பரவல் காரணமாக கோவிலில் கடந்த 2 ஆண்டுகளாக ஆடி அமாவாசை திருவிழாவுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்த ஆண்டு ஆடி அமாவாசை திருவிழாவுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு உள்ளதால், கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கோவில் அருகில் பக்தர்கள் குடில்கள் அமைத்து தங்கியிருந்து வழிபடுவார்கள்.
இதையொட்டி காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் முன்னேற்பாடு பணிகள் செய்வது குறித்து சேரன்மாதேவி உதவி கலெக்டர் ரிஷப் ஆய்வு மேற்கொண்டார். அங்கு பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்வது குறித்து அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். முன்னதாக பாபநாசம் வனத்துறை அலுவலகத்தில் உதவி கலெக்டர் ரிஷப் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு, காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு வருகிற 26-ந்தேதி முதல் 30-ந்தேதி வரையிலும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் அரசு பஸ்களில் மட்டும் செல்வதற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
தனியார் வாகனங்களில் செல்ல அனுமதி கிடையாது. தினமும் 120 அரசு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. பிளாஸ்டிக், புகையிலை பொருட்கள், மதுபாட்டில்கள் எடுத்து செல்ல அனுமதி இல்லை. பக்தர்கள் முக கவசம் அணிந்து செல்ல வேண்டும். மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தலைமையில், 5 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 15 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 545 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
மேலும் களக்காடு, அம்பை, தூத்துக்குடி, கன்னியாகுமரி வன கோட்டங்களில் இருந்து வனத்துறை ஊழியர்கள் 250 பேர் மற்றும் தன்னார்வலர்களும் இணைந்து வனப்பகுதியில் கண்காணிப்பு பணி மேற்கொள்ள உள்ளனர். ஆடி அமாவாசை தினத்தன்று பாபநாசத்தில் தர்ப்பணம் கொடுப்பதற்காக மோட்டார் சைக்கிள்களில் வருகிறவர்கள் பழைய பாபநாசம் சாலையில் தங்கள் மோட்டார் சைக்கிள்களை விட்டு விட்டு பாபநாசத்துக்கு நடந்து சென்று தர்ப்பணம் செய்ய வேண்டும்.
தனியார் பேருந்துகள் பாபநாசம் செல்வதற்கு அனுமதி இல்லை. இவ்வாறு அவர் கூறினார். அம்பை கோட்ட வனத்துறை துணை இயக்குனர் செண்பகபிரியா, துணை போலீஸ் சூப்பிரண்டு பிரான்சிஸ், தாசில்தார் ஆனந்த் பிரகாஷ், வனச்சரகர்கள் ஸ்டாலின், கருப்பையா, கிருத்திகா (பயிற்சி) மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
- கடந்த 12-ந் தேதி முதல் சாலை புதுப்பிப்பு பணிகள் தொடங்கியது.
- அகஸ்தியர் அருவிக்கும் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையில் காரையாறு அணை, சொரிமுத்து அய்யனார் கோவில், அகஸ்தியர் அருவி உள்ளிட்ட சுற்றுலா தலங்களும், பழங்குடி இன மக்கள் வசித்து வரும் மயிலாறு காணி, அகஸ்தியர் காணி குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளும் உள்ளது.
பாபநாசம் வனச்சோதனை சாவடியில் இருந்து காரையாறு அணை வரை சுமார் 14 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை சேதமடைந்து காணப்பட்ட நிலையில் கடந்த 12-ந் தேதி முதல் சாலை புதுப்பிப்பு பணிகள் தொடங்கியது. இதனால் இந்த சாலை பணிகள் நேற்று வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இதனால் சுற்றுலா பயணிகள், பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் சாலைப்பணிகள் முழுமையாக நிறைவடையாமல் இருப்பதால் இந்த தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது.
அதாவது வருகிற 24-ந் தேதி வரை அகஸ்தியர் அருவி, சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு செல்ல தடையை நீட்டித்துள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கோவிலுக்கு வரும் பக்தர்கள் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில் கொண்டு வரக்கூடாது.
- இந்த கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா வருகிற 28-ந்தேதி நடக்கிறது.
நெல்லை மாவட்டம் காரையார் காணிக்குடியிருப்பு சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை திருவிழா வருகிற 28-ந்தேதி நடக்கிறது. விழாவை முன்னிட்டு கோவில் வளாகத்தில் நேற்று காலை 9.15 மணிக்கு கால்நாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக கோவிலில் மகாலிங்க சுவாமி, சொரிமுத்து அய்யனார், சங்கிலி பூதத்தார், பட்டவராயன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. நிகழ்ச்சியில் கோவில் பொறுப்பாளர் சங்கராத்மஜன், கோவில் நிர்வாக அதிகாரி முருகன், உதவியாளர் பசுபதி உள்பட திரளான பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
வழக்கமாக இக்கோவிலின் ஆடி அமாவாசை திருவிழாவிற்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருவது வழக்கம். கொரோனாவால் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு விழா நடப்பதால் அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விழாவையொட்டி வருகிற 26-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அகஸ்தியர்பட்டியில் இருந்து நாள் ஒன்றுக்கு 120 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. பக்தர்கள் மீண்டும் தங்கள் ஊர்களுக்கு செல்ல காணிக்குடியிருப்பில் இருந்து இரவு 7 மணி வரை பஸ்கள் இயக்கப்படும். தேவைப்பட்டால் இரவு 9 மணி வரை பஸ்கள் இயக்கப்படும். கோவில் வளாகத்தில் பக்தர்களின் வசதிக்காக கோவில் நிர்வாகத்தின் சார்பில் தற்காலிகமாக மொத்தம் 400 சுகாதார வளாகங்கள் கட்டுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தவிர்ப்பதற்காக கோவிலின் சார்பில் வைக்கப்படும் கடைகளில் பாலித்தீன், பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனைக்கு நிர்வாகம் தடை விதித்துள்ளது. முக்கியமாக கோவிலுக்கு வரும் பக்தர்கள் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில் கொண்டு வரக்கூடாது. ஓட்டல் மற்றும் கடைகளில் வாழை இலைகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
பக்தர்களின் பயன்பாட்டிற்காக கோவில் மற்றும் அதன் சுற்று பகுதிகளில் 45 தண்ணீர் குழாய்கள் வைக்கப்படுகிறது. ஆடு வெட்டி பக்தர்கள் நேர்த்திக்கடன் செய்யும் போது ஆற்றுத்தண்ணீரில் ஆட்டின் ரத்தம் கலப்பதை தடுக்கும் விதமாக பட்டவராயன் சன்னதிக்கு முன் சிறப்பு மணல் திட்டு அமைக்கப்பட்டுள்ளது. ஆடி அமாவாசை அன்று பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு தேவையான முன்னேற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
- காரையார் சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா 28-ந்தேதி நடக்கிறது.
- வருகிற 17-ந்தேதி கால்நாட்டு விழா நடைபெறுகிறது.
மேற்கு தொடர்ச்சி மலையில் காரையார் அணை, சேர்வலாறு அணை, பிரசித்தி பெற்ற காரையார் சொரிமுத்து அய்யனார் கோவில், அகஸ்தியர் அருவி உள்ளிட்ட சுற்றுலா தலங்களும், பழங்குடி இன மக்கள் வசித்து வரும் மயிலாறு காணி, அகஸ்தியர் காணி குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளும் உள்ளன. இந்த நிலையில் பாபநாசம் வனச்சோதனை சாவடியில் இருந்து காரையார் அணை வரை சுமார் 14 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலை சேதமடைந்து மோசமாக காணப்பட்டது.
அந்த சாலையை சீரமைக்கும் பணி கடந்த சில வாரங்களுக்கு முன்பு தொடங்கியது. இதையடுத்து நேற்று முதல் வருகிற 20-ந் தேதி வரை சாலை புதுப்பிக்கப்பட உள்ளது. இதனால் அந்த சாலையில் வருகிற 20-ந் தேதி வரை போக்குவரத்துக்கு அனுமதிக்க வேண்டாம் என போக்குவரத்து மற்றும் வனத்துறையினருக்கு நெடுஞ்சாலை துறையினர் தெரிவித்தனர். அதன்படி பாபநாசம் வனச்சோதனை சாவடிக்கு மேலே தனியார் வாகனங்கள் அனுமதிக்கப்படாததால், அகஸ்தியர் அருவி, காரையார் சொரிமுத்து அய்யனார் கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்கு பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளதாக வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
எவ்வித முன்னறிவிப்பும் இன்றி சொரிமுத்து அய்யனார் கோவில், அகஸ்தியர் அருவி உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டதால் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். மேலும் பிரசித்தி பெற்ற காரையார் சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா வருகிற 28-ந் தேதி நடக்கிறது. அதற்காக வருகிற 17-ந்தேதி கால்நாட்டு விழா நடைபெறுகிறது. இதில் பக்தர்கள் கலந்து கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்