என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Karanampet"
- திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ.க. செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
- அரசு மதுபான கடைகளில் விலை அதிகம் வைத்து மதுபானம் விற்பதை தடுக்க வேண்டும்.
பல்லடம் :
திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ.க. செயற்குழு கூட்டம் நடைபெற்றது. பொதுச்செயலாளர் கே. சி. எம். பி. சீனிவாசன் தலைமை வகித்தார். வர்த்தகர் அணி செந்தில்குமார், பொருளாதார அணி மனோகர் ,ஒன்றியத் தலைவர் ரமேஷ், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஒன்றிய பொதுச் செயலாளர் கார்த்திகேயன் வரவேற்றார். இந்தக் கூட்டத்தில்,அரசு மதுபான கடைகளில் விலை அதிகம் வைத்து மதுபானம் விற்பதை தடுக்க வேண்டும், காரணம்பேட்டை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளுக்கும் நீர் பாசன வசதி ஏற்படுத்தி தர வேண்டும், விசைத்தறி தொழிலை பாதுகாத்திட வேண்டும் , காரணம் பேட்டை சிக்னலில் போக்குவரத்து காவலர் நியமிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்தக் கூட்டத்தில்,திருப்பூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் 12-ம் வகுப்பு தேர்வில் 2 இடம் பிடித்த காரணம்பேட்டையை சேர்ந்த பாலசண்முகத்திற்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது.பல்லடம் நகர பா.ஜ.க செயற்குழு கூட்டம் நகர தலைவர் வடிவேலன் தலைமையில் நடைபெற்றது. இதில் மகளிர் அணி மாநில செயலாளர் சுதா மணி, திருப்பூர் வடக்கு மாவட்ட துணைத்தலைவர் வினோத் வெங்கடேஷ், மற்றும் நிர்வாகிகள் மணிவேல், மனோகரன், பன்னீர் செல்வகுமார், நகர்மன்ற உறுப்பினர்கள் சசிரேகா ரமேஷ், ஈஸ்வரி, உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல பல்லடம் வடக்கு ஒன்றிய பா.ஜ.க. செயற்குழு கூட்டம் ஒன்றிய தலைவர் பூபாலன் தலைமையில் நடைபெற்றது.
இதில் மாநில செயற்குழு உறுப்பினர் நாச்சிமுத்து, விவசாய அணி ரமேஷ்,மற்றும் குருமூர்த்தி,உள்ளிட்ட பா.ஜ.க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- கொங்கு மண்டலத்தின் பாரம்பரிய கலையான வள்ளி கும்மியாட்ட கலையை பாரம்பரிய சீருடைகளை அணிந்து கும்மியாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.
- 50க்கும் மேற்பட்ட தீர்த்த கலசங்களுடன் ஊர்வலமாக வந்து கூப்பிடு பிள்ளையார் கோவிலில் சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றது.
பல்லடம் :
பல்லடம் அருகேயுள்ள காரணம்பேட்டை கூப்பிடு பிள்ளையார் கோவிலில், கூப்பிடு பிள்ளையார் கலை வள்ளி கும்மி ஆட்டம் குழுவின் 5-வது அரங்கேற்ற விழா நடைபெற்றது. கொங்கு மண்டலத்தின் பாரம்பரிய கலையான வள்ளி கும்மியாட்ட கலையை பாரம்பரிய சீருடைகளை அணிந்து சிறுமிகள்,பெண்கள் ஆடிய வள்ளி கும்மியாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. கும்மியாட்ட ஆசிரியர்கள் பெரியசாமி, கலையரசி, முருகன் -வள்ளி கதையுடன் இடையிடையில் நாட்டுப்புற பாடல்களும் பாடி கும்மி ஆட்ட குழுவினரை உற்சாகப்படுத்தினர்.கோடங்கிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் காவி. பழனிச்சாமி, கூப்பிடு பிள்ளையார் அறக்கட்டளை நிர்வாகி சின்னச்சாமி மற்றும் ஏராளமான பொதுமக்கள் கும்மி ஆட்டத்தை கண்டு களித்தனர்.முன்னதாக 50க்கும் மேற்பட்ட தீர்த்த கலசங்களுடன் ஊர்வலமாக வந்து கூப்பிடு பிள்ளையார் கோவிலில் சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்