என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Kargil"
- கார்கலில், 10 கி.மீ., ஆழகத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
- மேகாலயாவில், 12 கி.மீ., ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
லடாக்கின் கார்கில் மற்றும் மேகாலயாவின் கிழக்கு காரோ மலை பகுதியில் லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.
கார்கில் பகுதியில் லேசான நில அதிர்வு ரிக்டர் அளவில் 3.8 ஆக பதிவாகியுள்ளது. இது 10 கி.மீ., ஆழகத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதேபோல், மேகாலயாவின் கிழக்கு காரோ மலை பகுதியில் லேசான நில அதிர்வு ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவாகியுள்ளது. மேலும், 12 கி.மீ., ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
- பாகிஸ்தான் ஆக்ரமித்துள்ள காஷ்மீர் இரு பகுதிகளாக உள்ளது
- கார்கில் பாதையை திறந்து விடுங்கள் என கோஷமிட்டனர்
இந்திய ராணுவத்தின் மிக உயர்ந்த பதவி வகித்தவர், நான்கு நட்சத்திர அந்தஸ்து பெற்ற ஜெனரல். விஜய் குமார் சிங் (72).
ஜெனரல். வி.கே. சிங், தனது பதவிக்காலம் முடிந்த பிறகு, ஆளும் பா.ஜ.க. அரசால் அமைச்சராக பதவியில் அமர்த்தப்பட்டவர். இவர் தற்போது சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சரவையில் அமைச்சராக உள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் பா.ஜ.க. சார்பாக நடந்து வரும் பரிவர்த்தன் சங்கல்ப யாத்திரையில் கலந்து கொண்டு பல மத்திய அமைச்சர்களும் உரையாற்றி வருகின்றனர். இந்த யாத்திரையின் ஒரு பகுதியாக அம்மாநில டவுஸா மாவட்டத்தின் தலைநகர் டவுஸாவில் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஜெனரல். வி.கே. சிங் கலந்து கொண்டார்.
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்குமிடையேயான உறவு குறித்து கேட்கப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.
1947 முதல் பாகிஸ்தான் ஆக்ரமித்துள்ள காஷ்மீர் (PoK) பகுதியில் மொத்தம் சுமார் 40 லட்சம் மக்கள் தொகை கொண்ட இப்பிராந்தியத்தில் 97 சதவீதம் பேர் இஸ்லாமியர்கள். இது, ஆஸாத் காஷ்மீர் மற்றும் கில்கிட்-பல்டிஸ்தான் என இரு பகுதிகளாக உள்ளது. சில நாட்களுக்கு முன் கில்கிட்-பல்டிஸ்தான் பகுதியில் ஸ்கர்டு (Skardu) டவுனில் பாகிஸ்தானின் புது சட்டங்களுக்கெதிராக ஒரு பேரணி நடைபெற்றது. அது பாகிஸ்தான் அரசுக்கெதிரான பேரணியாக மாறி, இந்தியாவின் கார்கில் பகுதிக்கு செல்லும் பாதை திறந்து விடப்பட வேண்டுமென போராட்டத்தில் ஈடுபட்ட ஷியா பிரிவினர் கோஷமிட்டனர்.
"பாகிஸ்தான் ஆக்ரமித்துள்ள காஷ்மீர் (PoK) பகுதி, தானாக இந்தியாவுடன் இணைந்து விடும். சிறிது காலம் காத்திருங்கள்" என இச்சம்பவம் குறித்த கேள்விக்கு பதிலளித்த வி.கே.சிங் தெரிவித்தார்.
இவரது கருத்தை மகாராஷ்டிர மாநிலத்தின் சிவ சேனா (உத்தவ் பிரிவு) கட்சியின் சஞ்சய் ராவத் வரவேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வருவதே தீபாவளி பண்டிகையின் அர்த்தம்.
- ஆயுதப் படைகளில் பெண்களை இணைத்துக்கொள்வது நமது பலத்தை அதிகரிக்கும்.
கார்கில் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி தீபாவளியை கொண்டாடினார். அவர்களுடன் ஒன்றாக நின்று புகைப்படம் எடுத்து கொண்டார். வீரர்களுக்கு தன் கையால் இனிப்புகளை வழங்கினார். அதன்பின் ராணுவ வீரர்களீடையே உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-
பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வருவதே தீபாவளி பண்டிகையின் அர்த்தம். கார்கில் போர், பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. கார்கிலில் நடந்த போரில் நமது படை, பயங்கரவாதத்தை முறியடித்தது.
ராணுவ வீரர்கள் என்னுடைய குடும்பத்தினர். உங்களுக்கு மத்தியில் இருக்கும்போது தீபாவளி பண்டிகை இனிமையானதாகவும், அர்த்தமுள்ளதாகவும் இருக்கிறது. கார்கில் போரை நான் நினைத்து பார்த்திருக்கிறேன். என்னுடைய கடமைதான் என்னை அப்போது கார்கிலுக்கு அழைத்து வந்தது. வெற்றியின் ஓசைகள் எங்கும் எதிரொலித்த அந்தக் காலத்தின் பல நினைவுகள் உள்ளன. மக்கள் அன்று கொண்டாடப்பட்ட தீபாவளியை இன்னும் நினைவில் வைத்திருக்கிறார்கள்.
கடந்த எட்டு ஆண்டுகளாக, புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது, எல்லைப் பகுதிகளில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தி, படைகளில் பெண்களுக்கு பணி அளிப்பது போன்ற சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது. ஆயுதப் படைகளில் பெண்களை இணைத்துக்கொள்வது நமது பலத்தை அதிகரிக்கும். ஒரு தேசத்தின் எல்லைகள் பாதுகாப்பாகவும், பொருளாதாரம் வலுவாகவும், நம்பிக்கை நிறைந்த சமூகமாகவும் இருக்கும் போதுதான் ஒரு நாடு பாதுகாப்பாக இருக்கும்.
நாட்டிற்குள் இருக்கும் எதிரிகள் மற்றும் வெளியே இருக்கும் எதிரிகளை இந்தியா வலிமையுடன் கையாள்கிறது. பயங்கரவாதம், நக்சலிசம் மற்றும் பயங்கரவாதத்தை நாட்டிற்குள் இருந்து வேரோடு பிடுங்க நடவடிக்கை எடுக்கப்பட்ட்டு வருகிறது. இந்தியா ஒருபோதும் போரை முதல் விருப்பமாக பார்க்கவில்லை. நாம் எப்போதும் இறுதி முயற்சியாக போரைப் பார்த்திருக்கிறோம். நாம் உலக அமைதிக்கு ஆதரவாக இருக்கிறோம். ஆனால் வலிமை இல்லாமல் அமைதியை அடைய முடியாது.
எங்கள் ஆயுதப் படைகளுக்கு வியூகங்களும் வலிமையும் உள்ளன. யாரேனும் நம் மீது தீய நோக்கத்தோடு பார்வையை செலுத்தத் துணிந்தால், அதற்குத் தகுந்த பதிலடி கொடுப்பது எப்படி என்பது நமது முப்படைகளுக்கும் நன்றாகத் தெரியும். தேசத்தின் பாதுகாப்பிற்கு ஆத்மநிர்பர் பாரத் மிக முக்கியமானது ஆயுதங்கள் மற்றும் அமைப்புகளில் வெளிநாட்டு சார்பு குறைவாக இருக்க வேண்டும்.
இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
- தீபாவளி பண்டிகையை எல்லையில் பணிபுரியும் ராணுவ வீரர்களுடன் கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார் பிரதமர் மோடி
- கடந்த ஆண்டு ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் தீபாவளியை கொண்டாடினார்.
கார்கில்:
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. மக்கள் புத்தாடை உடுத்தி, இனிப்புகளை வழங்கி, பட்டாசு வெடித்து தீபாவளியை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
பிரதமர் மோடி ஆண்டு தோறும் தீபாவளி பண்டிகையை எல்லையில் பணிபுரியும் ராணுவ வீரர்களுடன் கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். 2014-ம் ஆண்டு சியாச்சின் பகுதியில் ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி தீபாவளியை கொண்டாடினார். 2015-ம் ஆண்டு பஞ்சாப் எல்லையிலும், 2016-ம் ஆண்டு இமாச்சலபிரதேச எல்லையிலும் பணியாற்றிய ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி தீபாவளியை கொண்டாடினார்.
2017-ம் ஆண்டு ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பணிபுரியும் வீரர்களுடனும், 2018-ம் ஆண்டு உத்தரகாண்டில் பணியாற்றும் வீரர்களுடனும், 2019-ம் ஆண்டு ஜம்மு-காஷ்மீரில் பணியாற்றும் வீரர்களுடனும் தீபாவளியை கொண்டாடினார். 2020-ம் ஆண்டு ராஜஸ்தான் எல்லையில் வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடிய பிரதமர் மோடி கடந்த ஆண்டு ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் தீபாவளியை கொண்டாடினார்.
இந்நிலையில், பிரதமர் மோடி இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை லடாக் எல்லையில் உள்ள ராணுவ வீரர்களுடன் கொண்டாடினார். கார்கில் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி தீபாவளியை கொண்டாடினார். பின்னர் அவர்கள் மத்தியில் உரையாற்றினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்