என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Karnataka Cabinet"
- புதிய மந்திரிகளுக்கு கவர்னர் தாவர்சந்த் கெலாட் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
- இன்று மாலைக்குள் மந்திரிகளுக்கு இலாகாக்கள் ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெங்களூரு:
கா்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 135 தொகுதிகளில் வெற்றி பெற்றதையடுத்து புதிய முதல்-மந்திரியாக சித்தராமையா கடந்த 20-ந் தேதி பதவி ஏற்றார். அவரு டன் டி.கே.சிவக்குமார் துணை முதல்-மந்திரியா கவும், 8 பேர் மந்திரிகளாகவும் பதவி ஏற்றனர்.
தொடர்ந்து கர்நாடக சட்டசபை கூட்டம் கடந்த 22-ந் தேதி தொடங்கி 24-ந் தேதி வரை 3 நாட்கள் நடைபெற்றது. இதில் புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். 24-ந் தேதி சித்தராமையா, டி.கே.சிவக்குமார் ஆகியோர் டெல்லி சென்றனர்.
அங்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், கர்நாடக மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா உள்ளிட்டோரை சந்தித்து, மந்திரி சபை விரிவாக்கம் குறித்து ஆலோசனை நடத்தினர்.
சோனியா காந்தி, ராகுல்காந்தியை அவரது இல்லத்தில் சித்தராமையா, டி.கே.சிவக்குமார் ஆகிய 2 பேரும் தனித்தனியாக சந்தித்து பேசினர். ஒட்டுமொத்த எம்.எல்.ஏ.,க்களில், 15 சதவீதம் பேருக்கு மந்திரி பதவி வழங்கலாம் என்பது விதி. அதன்படி, கர்நாடகாவில் 224 எம்.எல்.ஏ.,க்கள் இருப்பதால், 34 பேர் மந்திரி ஆக முடியும். இதில், ஏற்கனவே 10 பேர் பதவியேற்றதால், மீதம் 24 பதவிகள் காலியாக உள்ளன.
இதயடுத்து புதியதாக பதவி ஏற்க உள்ள 24 மந்திரிகளின் பெயர் பட்டியலை காங்கிரஸ் மேலிடம் நேற்று இரவு வெளியிட்டது.
இதை தொடர்ந்து கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் இன்று நடைபெற்றது. புதிய மந்திரிகளுக்கு கவர்னர் தாவர்சந்த் கெலாட் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
புதிய மந்திரிகளாக தினேஷ் குண்டுராவ் (காந்திநகர் தொகுதி), ஈஸ்வர் கன்ட்ரே (பால்கி தொகுதி), லட்சுமி ஹெப்பால்கர் (பெலகாவி புறநகர்), சிவானந்த பட்டீல் (பசவனபாகேவாடி), சரணபசப்பா தர்சானபுரா (சகாப்புரா), எச்.சி.மகாதேவப்பா (டி.நரசிப்புரா), வெங்கடேஷ் (பிரியப்பட்டணா), எஸ்.எஸ்.மல்லிகார்ஜூன் (தாவணகெரே), பைரதி சுரேஷ் (ஹெப்பால்), கிருஷ்ண பைரேகவுடா (பேட்ராயனபுரா),
ரகீம்கான் (பீதர் வடக்கு), எம்.சி.சுதாகர் (சிந்தாமணி), டி.சுதாகர் (இரியூர்), எச்.கே.பட்டீல் (கதக்), செலுவராயசாமி (நாகமங்களா), கே.என்.ராஜண்ணா (மதுகிரி), சந்தோஷ் லாட் (கல்கட்டகி), மது பங்காரப்பா (சொரப்), மங்கல் வைத்யா (பட்கல்), சிவராஜ் தங்கடகி (கனககிரி), ஆர்.பி.திம்மாபுரா (முதோல்), சரண பிரகாஷ் பட்டீல் (சேடம்), என்.எஸ்.போசராஜூ (மான்வி), நாகேந்திரா (பல்லாரி புறநகர்) ஆகியோர் பதவி ஏற்றுக்கொண்டனர்.
விழாவில் முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் மற்றும் எம்.எல்.ஏ.க்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.
இன்று மாலைக்குள் மந்திரிகளுக்கு இலாகாக்கள் ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாருக்கு முக்கியமான 2 இலாகாக்கள் கிடைக்கலாம் என்று அரசு வாட்டாரங்கள் தெரிவித்தன.
- மந்திரிசபையில் 24 இடங்களுக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
- மூத்த தலைவர்கள் மந்திரிசபையில் இடம்பிடிக்க முனைப்பு காட்டுவதாக தகவல்.
கர்நாடக சட்டமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்து இருக்கிறது. முதல்வராக சித்தராமையா, துணை முதல்வராக டிகே சிவக்குமார் பதவியேற்று உள்ளனர். இவர்களுடன் எட்டு மந்திரிகள் பதவியேற்றனர். எனினும், இவர்களுக்கு எந்த துறையும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை.
மந்திரிசபையில் மீதம் இருக்கும் 24 இடங்களுக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இடையே கடும் போட்டி ஏற்பட்டு இருக்கிறது. மூத்த தலைவர்கள் தேஷ்பாண்டே, எச்.கே. பட்டீல் உள்ளிட்டோர் மந்திரிசபையில் இடம்பிடிக்க முனைப்பு காட்டுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கிட்டத்தட்ட 45 எம்.எல்.ஏ.க்கள் மந்திரி பதவி கேட்பது, சித்தராமையா மற்றும் டி.கே. சிவக்குமார் தனித்தனியாக தங்களது ஆதரவாளர்களுக்கு மந்திரி பதவி கேட்பது போன்ற காரணங்களால் யார் யாருக்கு மந்திரி பதிவி வழங்குவது என்ற விவகாரத்தில் காங்கிரஸ் மேலிட வட்டாரத்தில் குழப்பம் ஏற்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில், மந்திரிசபை விரிவாக்கம் செய்வது தொடர்பாக முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டிகே சிவக்குமார் டெல்லி புறப்பட்டு சென்றனர். இருவரும் கட்சி மேலிடத்திடம் மந்திரிசபை விரிவாக்கம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர். அந்த வகையில், விரைவில் மந்திரிசபை விரிவாக்கம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.
கர்நாடக மாநிலத்தில், ஜே.டி.எஸ்-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. குமாரசாமி தலைமையில் மந்திரிசபை அமைக்கப்பட்டபோது, சில மூத்த தலைவர்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு மந்திரி பதவி கிடைக்கவில்லை. இதனால் அவர்கள் அதிருப்தியடைந்தனர்.
அதிருப்தியாளர்களை சமாதானம் செய்யும் வகையில், வருகிற 10-ந் தேதிக்குள் மந்திரி சபையை விரிவுபடுத்தி அதிருப்தியாளர் சிலருக்கு மந்திரி பதவி வழங்க கூட்டணி தலைமை முடிவு செய்திருந்தது.
இந்நிலையில், நாடாளுமன்ற, சட்டசபை இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் தள்ளி வைக்கப்பட்டது. ஆனபோதிலும், காங்கிரஸ் எம்.எல்.ஏ. பி.சி.பாட்டீல், மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்படாதது குறித்து ட்விட்டர் மூலம், தனது அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார்.
இதேபோல், மந்திரி பதவியை எதிர்பார்த்த சிலரும், மந்திரிசபை விரிவாக்கம் குறித்து உடனடியாக அறிவிப்பு வெளியிடவேண்டும் என்று வலியுறுத்தி வருவதாக தெரிகிறது.
அதிருப்தி கோஷ்டியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் சிலர், முன்னாள் முதல் மந்திரி சித்தராமையா, துணை முதல் மந்திரி பரமேஸ்வர் ஆகியோரை நேரில் சந்தித்து, மந்திரிசபையை விரிவாக்கம் செய்ய ஏற்பாடு செய்யுமாறு வலியுறுத்தினார்கள். இல்லையெனில், டெல்லிக்கு சென்று கட்சியின் மேலிட தலைவர்களை இது தொடர்பாக சந்தித்து பேசுவதாகவும் அவர்கள் அப்போது தெரிவித்தனர். இதனால் காங்கிரஸ் கட்சிக்கு புதிதாக தலைவலி ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், நாளை பெங்களூரு வரவுள்ள, காங்கிரஸ் கட்சியின் கர்நாடக மாநில பொறுப்பாளர் வேணுகோபாலிடம், அதிருப்தியாளர்கள் மந்திரிசபை விரிவாக்கம் குறித்து வலியுறுத்த முடிவு செய்துள்ளனர்.
அதன் பின்னர், அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ள அதிருப்தியாளர்கள் திட்டமிட்டு உள்ளனர்.
காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கூட்டணி ஆட்சியில் மந்திரிசபையில் 7 இடங்கள் காலியாக உள்ளன. மந்திரிசபையில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப வேண்டும் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கி வருகிறார்கள். இதனால் மந்திரிசபை விரிவாக்கம் செய்வதை கூட்டணி கட்சி தலைவர்கள் தொடர்ந்து தள்ளிப்போட்டு வந்த வண்ணம் உள்ளனர். ஆனால் வருகிற 10-ந் தேதிக்குள் மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்படும் என்று காங்கிரஸ் தலைவர்கள் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்படுவது எப்போது? என்பது குறித்து பெங்களூருவில் நேற்று முதல்-மந்திரி குமாரசாமியிடம் நிருபர்்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-
மந்திரிசபையில் 7 இடங்கள் காலியாக உள்ளன. அவற்றில் காங்கிரஸ் சார்பில் 6 இடங்களும், ஜனதாதளம்(எஸ்) கட்சி சார்பில் ஒரு இடங்களும் இருக்கிறது. மந்திரிசபையில் காலியாக உள்ள 7 இடங்களையும் நிரப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக காங்கிரஸ் மேலிட தலைவர்களுடன், கர்நாடக தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். நான் கூட, காங்கிரஸ் மேலிட தலைவர்களுடன் மந்திரிசபை விரிவாக்கம் தொடர்பாக பேசி வருகிறேன். மந்திரிசபை விரிவாக்கம் செய்ய கூட்டணி கட்சி தலைவர்களால் முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது. இதனால் வருகிற 10-ந் தேதி அல்லது 12-ந் தேதிக்குள் மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்படுவது உறுதி. ஒரே நேரத்தில் மந்திரிசபையில் காலியாக உள்ள 7 இடங்களும் நிரப்பப்படும்.
கடந்த மாதம் (செப்டம்பர்) மந்திரிசபையை விரிவாக்கம் செய்ய முடிவு எடுக்கப்பட்டது. கூட்டணி கட்சியின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் சித்தராமையா வெளிநாட்டு பயணத்தால் அப்போது மந்திரிசபை விரிவாக்கம் செய்ய முடியாமல் போனது. மாநகராட்சி மேயர் தேர்தல் முடிந்திருப்பதுடன், மேல்-சபைக்கு நடந்த தேர்தலிலும் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன. இதுபோன்ற எல்லா பிரச்சினைகளும் ஒரு முடிவுக்கு வந்திருப்பதால் வருகிற 10-ந் தேதி அல்லது 12-ந் தேதி மந்திரிசபை விரிவாக்கம் நடைபெற உள்ளது. அதே நேரத்தில் 30 எம்.எல்.ஏ.க்களுக்கு வாரிய தலைவர் பதவி வழங்கவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு முதல்-மந்திரி குமாரசாமி கூறினார். #Karnataka #CabinetExpansion #ChiefMinister #Kumaraswamy
கர்நாடக மாநிலத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை இல்லாத நிலையில், காங்கிரசும், மதச்சார்பற்ற ஜனதா தளமும் இணைந்து ஆட்சியமைந்துள்ளன. மஜத தலைவர் குமாரசாமி முதலமைச்சராகவும், காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் பரமேஸ்வரா துணை முதலமைச்சராகவும் பதவியேற்றனர்.
இதையடுத்து அமைச்சரவை விரிவாக்கம், கூட்டணி அமைச்சரவையில் இடம்பெறும் அமைச்சர்கள் மற்றும் அவர்களின் இலாகா தொடர்பாக இரு கட்சிகளிடையேயும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. 34 பேர் கொண்ட அமைச்சரவையில் காங்கிரசுக்கு 22, மஜதவுக்கு 12 என (முதல்வர், துணை முதல்வர் உள்பட) பிரித்துக்கொள்ளப்பட்டது. ஆனால் இலாகா பகிர்வில் இரு கட்சியினரிடையே ஒருமித்த கருத்து எட்டப்படாததால், அமைச்சரவை பதவியேற்பு தாமதம் ஆனது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்