search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Karnataka deputy CM"

    • எச்.டி.குமாரசாமி மக்களவை எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டதை தொடர்ந்து சன்னபட்னா தொகுதிக்கு இடைத்தேர்தல்.
    • சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் அட்டவணையை தேர்தல் ஆணையம் இன்னும் அறிவிக்கவில்லை.

    கர்நாடக மாநிலம் ராமாநகரா மாவட்டத்தில் உள்ள சன்னபட்னா தொகுதியின் பிரதிநிதியான ஜேடி(எஸ்) தலைவரும், மத்திய அமைச்சருமான எச்.டி.குமாரசாமி, சமீபத்தில் நடத்த பாராளுமன்ற தேர்தலில் வெற்றிப்பெற்று மக்களவை எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    இதைத் தொடர்ந்து, சன்னபட்னா தொகுதி காலியானது. இதனால், அந்த தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இருப்பினும், இந்த சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் அட்டவணையை தேர்தல் ஆணையம் இன்னும் அறிவிக்கவில்லை.

    இந்நிலையில், சன்னபட்னா இடைத்தேர்தலில் கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதுகுறித்து, கருத்து தெரிவித்த துணை முதல்வர் டி.கே சிவக்குமார், " கர்நாடகா மாநிலத்தில் உள்ள சன்னபட்னா சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை மறுக்கவில்லை. கட்சி மற்றும் வாக்காளர்களின் முடிவுக்கு கட்டுப்படுவேன்" என்றார்.

    மேலும் அவர், "என்னுடைய இதயத்தில் சன்னபட்னா தொகுதி எப்போதும் உள்ளது. எனக்கு அரசியல் பிறப்பைக் கொடுத்த இடம் சன்னபட்னா தான்.

    எனது சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சன்னப்பட்னா தொகுதியில் நான் நான்கு முறை வெற்றி பெற்றுள்ளேன். அங்குள்ள மக்கள் என்னை ஆசீர்வதித்துள்ளனர்.

    சன்னபட்னாவும் முன்பு சாத்தனூரில் ஒரு பகுதியாக இருந்தது (சிவகுமார் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட பழைய பகுதி). நான் சன்னபட்னாவை விரும்புகிறேன். நான் சன்னபட்னாவுக்கு உதவ விரும்புகிறேன். நான் சன்னபட்னாவை மாற்ற விரும்புகிறேன்.

    இக்கட்டான காலத்திலும் சன்னப்பட்டின மக்கள் எங்களுக்கு சுமார் 80,000 வாக்குகளை (சமீபத்திய மக்களவைத் தேர்தலில்) அளித்துள்ளனர்.

    அங்கு மாற்றத்தை கொண்டு வந்து அங்குள்ள மக்களுக்கு நான் செலுத்த வேண்டிய கடனை அடைக்க வேண்டும். கனகபுரத்தில் நான் செய்ததை விட அதிக வளர்ச்சியை அங்கு செய்ய வாய்ப்பு உள்ளது" என்றார்.

    அவரது சகோதரரும், முன்னாள் எம்.பி.யுமான டி.கே.சுரேஷ், சன்னப்பட்டனத தொகுதியில் போட்டியிடுவாரா என்ற கேள்விக்கு, "அது குறித்து முடிவு செய்யப்படவில்லை. எது எப்படியோ ஆனால் எனக்கே ஓட்டு கேட்கிறேன்" என்றார்.

    சமீபத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பெங்களூரு ஊரக மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த சுரேஷ், சன்னபட்னாவில் களமிறக்கப்படலாம் என்று முன்னதாகவே பேசப்பட்டாலும், அவரை பழிவாங்க சிவக்குமார் களத்தில் இறங்கலாம் என்ற யூகங்கள் தற்போது அரசியல் வட்டாரத்தில் குறிப்பாக பெரும் கட்சியினரிடையே பரவி வருகிறது.

    சிவக்குமார் சன்னபட்னா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றால், அவர் தற்போது பிரதிநிதித்துவப்படுத்தும் கனகபுரா சட்டமன்றத் தொகுதியை சுரேஷுக்காக விட்டுக்கொடுப்பார் என்று கூறப்படுகிறது.

    • நீட் தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்.
    • நீட் தேர்வில் நடக்கும் முறைகேடுகள் மிகவும் தீவிரமானவை.

    நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாட்டில் மட்டுமல்ல தென் மாநிலங்கள், வட இந்தியாவிலும் பலத்த எதிர்ப்பும், சர்ச்சையும் கிளம்பியிருப்பது.

    மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எதிர்க்கட்சிக்கும் ஆளுங்கட்சிக்கும் இடையே நீட் விவகாரத்தால் வார்த்தைப்போர் ஏற்பட்டிருக்கிறது.

    இந்நிலையில், கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் நீட் தேர்வுக்கு எதிராக குரல் கொடுத்திருக்கிறார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில், "லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் நீட் தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்.

    மருத்துவ படிப்புகளுக்கு அந்தந்த மாநிலங்களே நுழைவுத் தேர்வை நடத்த அனுமதிக்க வேண்டும்.

    நீட் தேர்வில் நடக்கும் முறைகேடுகள் மிகவும் தீவிரமானவை.

    மாநிலங்கள் நடத்தும் நுழைவுத் தேர்வில் பிற மாநில மாணவர்கள் பங்கேற்க அனுமதிக்கலாம்" என்றார்.

    நடிகைகள் திருமணத்துக்கு செல்லும் மோடிக்கு சாமியார் இறுதிச்சடங்கில் பங்கேற்க நேரமில்லையா? என்று கர்நாடக துணை முதல் மந்திரி பரமேஸ்வரா கேள்வி எழுப்பியுள்ளார். #PMModi #Parameshwara
    பெங்களூரு:

    111 வயதில் மறைந்த கர்நாடக மடாதிபதி சிவகுமார சுவாமி உடலுக்கு பா.ஜனதா சார்பில் மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், சதானந்தகவுடா ஆகியோர் அஞ்சலி செலுத்தினார்கள்.

    அவரது உடலுக்கு பிரதமர் மோடி நேரில் வந்து அஞ்சலி செலுத்தாதது குறித்து காங்கிரஸ் சார்பில் கேள்வி எழுப்பப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து காங்கிரசை சேர்ந்த கர்நாடக துணை முதல் மந்திரி பரமேஸ்வரா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பிரதமர் மோடி நடிகர்- நடிகைகளின் திருமணங்களுக்கு போகிறார். பிரபலங்களை சந்திக்கிறார். ஆனால் நமது கடவுளாக வாழ்ந்து மறைந்தவரின் இறுதிச்சடங்குக்கு வர முடியவில்லை.



    தனது வாழ்க்கையை முழுமையாக ஏழைகளுக்காகவும், ஒடுக்கப்பட்டோருக்காகவும் ஒதுக்கி பாடுபட்டு மறைந்துள்ளார் ஸ்ரீ சிவகுமார சுவாமிஜி. அவருக்கு அஞ்சலி செலுத்த பிரதமருக்கு நேரம் இல்லையா?

    சாமியாருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்ற நீண்டகால கோரிக்கை வீணாகி போய்விட்டது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார். #PMModi #Parameshwara
    பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலையில் தொடர்புடைய அமைப்புகளுக்கு தடை விதிப்பது தொடர்பாக கர்நாடக அரசு ஆலோசித்து வருவதாக துணை முதல் மந்திரி பரமேஷ்வரா தெரிவித்துள்ளார். #GParameshwara #Lankeshkilling
    பெங்களூரு:

    பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரில் வசித்து வந்தவர் கவுரி லங்கேஷ்(55). பிரபல பத்திரிகையாளரான இவரை மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள் கடந்த 5-9-2017 அன்று அவருடைய வீட்டின் அருகே கவுரி லங்கேஷை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.

    இந்த படுகொலை தொடர்பாக விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வு குழுவினர் கொலை திட்டம் தீட்டிய அமோல் காலே, பிரவீன் (எ) சுஜித் குமார், அமித் டேல்வேக்கர் மற்றும் துப்பாக்கியால் சுட்ட பரசுராம் வாக்மாரே உள்பட 18 பேர்மீது குற்றம்சாட்டியுள்ளனர்.

    இந்த கொலை வழக்கு தொடர்பாக பெங்களூரு பெருநகர முதன்மை நீதிமன்றத்தில் 9,235 பக்கங்களை கொண்ட கூடுதல் குற்றப்பத்திரிகையை சிறப்பு புலனாய்வு அதிகாரிகள் நேற்று தாக்கல் செய்தனர்.

    கவுரி லங்கேஷுடன் எவ்வித அறிமுகமோ, பகையோ இல்லாத ஒரு அமைப்பு அவரை கொல்வதற்கு கடந்த 5 ஆண்டுகளாக திட்டமிட்டிருந்ததாக இந்த குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    சனாதன் சன்ஸ்த்தா என்னும் இந்துத்துவ அமைப்பின் துணை அமைப்பை சேர்ந்தவர்கள் தங்களது சித்தாந்தத்துக்கு எதிரானவர் என்று கருதியதால் கவுரி லங்கேஷை கொல்ல முயன்றதாக அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞர் எஸ்.பாலன் தெரிவித்தார்.



    பெங்களூரு நகரில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கர்நாடக மாநில துணை முதல் மந்திரி பரமேஷ்வரா பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலையில் தொடர்புடைய அமைப்புகளுக்கு தடை விதிப்பது தொடர்பாக கர்நாடக அரசு ஆலோசித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

    கொலையில் தொடர்புடைய அமைப்புகளுக்கு தடை விதிக்க இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ஆனால், விரைவில் தீர்மானிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். #GParameshwara  #Lankeshkilling
    ×