என் மலர்
நீங்கள் தேடியது "KCR"
- நீங்கள் நம்பாத ஒரு ஆச்சரியமான விஷயத்தைச் சொல்கிறேன். இந்த முறை நாட்டில் புதிதாக ஒன்று நடக்கப் போகிறது.
- தற்போது அனைத்து பிராந்திய கட்சிகளும் பலமாக உள்ளன. அவர்கள் ஒரு சக்தியாக வெளிப்படுவார்கள்.
தெலுங்கான மாநில முன்னாள் முதல்வரும், பாரத் ராஷ்டிரிய சமிதி கட்சியின் தலைவருமான கே. சந்திரசேகர ராவ் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்திருந்தார்.
அப்போது சந்திரசேகர ராவ் கூறியதாவது:-
நீங்கள் நம்பாத ஒரு ஆச்சரியமான விஷயத்தைச் சொல்கிறேன். இந்த முறை நாட்டில் புதிதாக ஒன்று நடக்கப் போகிறது. தற்போது அனைத்து பிராந்திய கட்சிகளும் பலமாக உள்ளன. அவர்கள் ஒரு சக்தியாக வெளிப்படுவார்கள். இது என்டிஏ அல்லது இந்தியா கூட்டணியை ஆதரிக்கும் பிராந்திய கட்சிகள் அல்ல. அது போன்று நடக்காது. பா.ஜனதா தலைமையிலான என்டிஏ அல்லது காங்கிரஸ் தலைமையலான இந்தியா கூட்டணி பிராந்தியக் கட்சிகளின் குழுவுக்கு ஆதரவளிக்க வேண்டும். இது ஒரு தலைகீழ் விஷயமாக இருக்கும். நீங்கள் அதை பார்ப்பீர்கள்.
தெலுங்கானாவில் கடந்த முறை 17 தொகுதிகளில் 9 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்த முறை இரண்டு இலக்க எண் இடங்களில் வெற்றி பெறுவோம்.
தெலுங்கானா மாநிலத்தில் பெண்களுக்கு இலவச பேருந்து டிக்கெட் மட்டுமே காங்கிரஸ் அளித்த வாக்குறுதியில் நிறைவேற்றியுள்ளது. அதுவும் பெரிய நகைச்சுவையாகிவிட்டது. பெண்கள் பேருந்துகளிலும், ஆட்டோ ஓட்டுநர்கள் சாலைகளிலும் (போராட்டம்) போராடுகிறார்கள். இதனால் மக்கள் மிகவும் கோபத்தில் உள்ளனர். எனது ஆட்சியில் மிகுந்த நம்பிக்கையைப் பெற்ற விவசாய சமூகமும் கடும் கோபத்தில் உள்ளது. இது மக்களவை தேர்தலில் எதிரொலிக்கும் என நினைக்கிறேன்.
கடந்த முறை 4 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், மக்களவை தேர்தலில் தெலுங்கானாவில் பா.ஜ.,வுக்கு ஒன்று அல்லது எதுவுமே கிடைக்காது.
இவ்வாறு சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.
- தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி மற்றும் முன்னாள் முதலவர் கேசிஆர் மகன் கேடிஆர் இடையில் வார்த்தைப் போர் மூண்டுள்ளது.
- கேடிஆர் அமெரிக்காவில் தனது விடுமுறையை அனுபவித்தபடி ட்வீட் மட்டும் செய்து கொண்டிருக்கிறார்
மழை வெள்ளம்
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் வரலாறு காணாத அளவுக்கு மழை கொட்டித்தீர்த்து வருகிறது. மழையினால் தெலுங்கானாவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளில் இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
வார்த்தைப் போர்
இந்நிலையில் வெள்ள பாதிப்புகளைக் கையாளுவது குறித்து காங்கிரஸ் ஆளும் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி மற்றும் பிஆர்எஸ் எம்எல்ஏவும் முன்னாள் முதலவர் சந்திரசேகர ராவின்[கேசிஆர்] மகனுமான கேடிஆர் இடையில் கடுமையான வார்த்தைப் போர் மூண்டுள்ளது.
கேடிஆரின் சந்திரபாபு நாயுடு ரெபரென்ஸ்
'ஆந்திரா, தெலங்கானா ஆகிய இரண்டு மாநிலங்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு 6 ஹெலிக்கப்டர்களை அம்மாநிலத்தில் மீட்புப் பணிக்கு அனுப்பியுள்ளார், ஆனால் தெலுங்கானா காங்கிரஸ் அரசு ஒரு ஹெலிக்கப்டரை கூட மீட்புப் பணிக்கு அனுப்பவில்லை. மாநிலம் முழுவதும் வெள்ளத்தால் அதிக பாதிப்புகளை சந்தித்துள்ளது, கம்மம் மாவட்டத்தில் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது.
ஆனால் அந்த பகுதியை சேர்ந்த 3 பேர் அமைச்சர்களாக இருந்தும் அப்பகுதி மக்களுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை. பொறுமையிழந்த மக்கள் வீதியில் இறங்கி உதவி கேட்கின்றனர். காங்கிரஸ் எதிர்க்கட்சியாக இருந்தபோது வெள்ள சமயங்களில் ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று கேட்டது. ஆனால் இப்போது ஆட்சிக்கு வந்ததும் ரூ.5 லட்சம் தான் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது' என்று தனது எக்ஸ் பக்கத்தில் காங்கிரஸ் அரசை கேடிஆர் சாடியுள்ளார்.

ரேவந்த் ரெட்டி பதிலடி
இந்நிலையில் வெள்ள பாதிப்புகளைப் பார்வையிட வந்த தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி செய்தியாளர்களிடம் பேசியதாவது, "கேசிஆர் தனது பார்ம் ஹவுஸை விட்டு வெளியே வரவே இல்லை. அதேநேரம் கேடிஆர் அமெரிக்காவில் தனது விடுமுறையை அனுபவித்தபடி ட்வீட் மட்டும் செய்து கொண்டிருக்கிறார். நானும் அமைச்சர்களும் தான் இங்குக் களத்தில் மக்களுக்கு உதவிக்கொண்டிருக்கிறோம்" என்று தெரிவித்தார்.
மேலும் வானிலை மோசமாக உள்ள காரணத்தால் தான் ஹெலிகாப்டர்களை மீட்புப்பணிக்கு அனுப்ப முடியாத சூழல் உள்ளது. அதற்கு எங்களிடம் ஆதாரமும் உள்ளது என்று அமைச்சர் ஸ்ரீனிவாஸ் ரெட்டி, கேடிஆர் குற்றச்சாட்டுக்குப் பதிலளித்துள்ளார்.

இந்நிலையில் இந்த சந்திப்பு குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
“திமுக பொருளாளர் துரைமுருகன் ஆலோசனைப்படி மு.க.ஸ்டாலின் 25 ஆண்டுக்கு பின்னர் ஜனாதிபதியாக முதல் கலந்தாய்வு?
தேர்தல் முடிவுகளுக்கு பின் டெல்லி குதிரைப்பந்தயத்தில் பங்கேற்க அழைப்பு? இங்கே திண்ணை நாடகம்; அடுத்து டெல்லியில் கட்சி / அணி மாறிகளின் தெருக்கூத்து?”
அண்ணன் துரைமுருகன் ஆலோசனைப்படி ஸ்டாலின் 25ஆண்டுகளுக்குப்பின்னர் ஜனாதிபதியாக முதல் கலந்தாய்வு? தேர்தல் முடிவுகளுக்குப்பின் டில்லி குதிரைப்பந்தயத்தில் பங்கேற்க அழைப்பு?இங்கே திண்ணை நாடகம்!அடுத்து டில்லியில் கட்சி/அணி மாறிகளின் தெருக்கூத்து??#Namo again sure 2 adore as PM @PMOIndiahttps://t.co/L3Ejjbl5kR
— Chowkidar Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiBJP) May 13, 2019