search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kerala court"

    • இந்திய வழக்கறிஞர்கள் சங்கம், கேரள மகளிர் ஆணையம் கண்டித்து கருத்து பதிவிட்டது.
    • பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களை சாதாரணமாக எடுத்து கொள்ளக்கூடாது

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்தவர் சிவிக் சந்திரன் (வயது 74). பிரபல எழுத்தாளர். இவர் மீது பெண் எழுத்தாளர் ஒருவர் கோழிக்கோடு போலீசில் பாலியல் புகார் கொடுத்தார். அதில் கோழிக்கோடு கடற்கரையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது தன்னிடம் சிவிக் சந்திரன் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறியிருந்தார்.

    இது தொடர்பாக கோழிக்கோடு போலீசார் சிவிக் சந்திரன் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி சிவிக் சந்திரன் கோழிக்கோடு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

    இந்த மனுவை விசாரித்த கோழிக்கோடு கோர்ட்டு, சிவிக் சந்திரனுக்கு முன்ஜாமீன் வழங்கியது. இது தொடர்பான உத்தரவில், நிகழ்ச்சிக்கு வந்த புகார்தாரர் மிகவும் ஆபாசமாகவும், கவர்ச்சியாகவும் உடை அணிந்து வந்துள்ளார்.

    பெண்கள் ஆபாசமாக உடை அணிவது பாலியல் சீண்டலுக்கு காரணமாக அமையும், என்று நீதிபதி கூறியிருந்தார்.

    கோழிக்கோடு கோர்ட்டு நீதிபதியின் இந்த கருத்துக்கு பல்வேறு மகளிர் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன. இந்திய வழக்கறிஞர்கள் சங்கம், கேரள மகளிர் ஆணையமும் இதனை கண்டித்து கருத்து பதிவிட்டது.

    இந்த நிலையில் டெல்லி மகளிர் ஆணைய தலைவி ஸ்வாதி மாலிவாலும் நீதிபதியின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களை சாதாரணமாக எடுத்து கொள்ளக்கூடாது. அவர்கள் உடை அணிவதை வைத்து தீர்மானிப்பது சரியல்ல.

    டெல்லியில் கவுன் அணிந்திருந்த 8 மாத குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். அப்படியானால் அந்த குழந்தையின் உடை பாலியல் சீண்டலுக்கு காரணம் என்று கூறமுடியுமா?

    எனவே இந்த விவகாரம் தொடர்பாக கேரள ஐகோர்ட்டு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    • 2020 பிப்ரவரியில் எழுத்தாளர் பாலியல் தொல்லை கொடுத்ததாக இளம் பெண் போலீசில் புகார் கொடுத்தார்.
    • இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் எழுத்தாளர் சிவிக் சந்திரனுக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

    கோழிக்கோடு:

    கேரளாவைச் சேர்ந்த எழுத்தாளரும் மாற்றுத் திறனாளியுமான சிவிக் சந்திரன் (74), தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் எழுத்தாளர் ஒருவர் கடந்த 2020-ம் ஆண்டு போலீசில் புகார் அளித்தார்.

    இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி சிவிக் சந்திரன் கோழிக்கோடு மாவட்ட நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அத்துடன், அந்தப் பெண் எழுத்தாளருடன் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் சமர்ப்பித்துள்ளார்.

    இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் எழுத்தாளர் சிவிக் சந்திரனுக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

    அந்த உத்தரவில், மனுதாரர் தாக்கல் செய்த புகைப்படங்களை வைத்துப் பார்க்கும்போது, புகார் அளித்த பெண் பாலியல் உணர்வை தூண்டும் வகையில் ஆடை அணிந்துள்ளார். 74 வயதான மாற்றுத்திறனாளி நபர் பெண்ணை வலுக்கட்டாயமாக தனது மடியில் அமர வைத்து பாலியல் தொல்லை கொடுத்திருப்பதாக கூறுவதை நம்பமுடியவில்லை. அதனால் பாலியல் பலாத்கார வழக்குகளுக்கான சட்டப்பிரிவு 354ஏ குற்றம் சாட்டப்பட்டவருக்கு பொருந்தாது எனக்கருதி அவருக்கு முன் ஜாமீன் வழங்கப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த சர்ச்சைக்குரிய தீர்ப்புக்கு பல்வேறு தரப்பினர் ஆதரவாகவும், எதிராகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    கேரளாவில் 18 வயது வாலிபரும், 19 வயது பெண்ணும் சேர்ந்து வாழலாம் என கோர்ட்டு தீர்ப்பளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் ஆலப்புழா பகுதியைச் சேர்ந்தவர் முகம்மது ரியாஸ்.

    முகம்மது ரியாசுக்கு 19 வயதில் ஒரு மகள் உள்ளார். இவர்கள் வீடு அருகே 18 வயது வாலிபர் ஒருவரும் வசித்து வந்தார். அந்த வாலிபருடன் முகம்மது ரியாசின் மகளுக்கு காதல் மலர்ந்தது.

    இதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் முகம்மது ரியாசின் மகள் வீட்டை விட்டு வெளியேறினார். அவரை முகம்மது ரியாஸ் தேடியபோது அவர் 18 வயது வாலிபருடன் சேர்ந்து வாழ்வது தெரிய வந்தது.

    18 வயது வாலிபரை மகள் திருமணம் செய்து கொண்டதை அறிந்த முகம்மது ரியாஸ் இதுபற்றி கேரள ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு வழக்கு தொடர்ந்தார்.

    அதில், 18 வயது வாலிபருடன் வசிக்கும் மகளை தன்னிடம் ஒப்படைக்க வேண்டுமென்று கூறி இருந்தார். இந்த மனு நேற்று ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.

    வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஒன்றாக வாழ்பவர்களை கோர்ட்டால் பிரிக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. வயதுக்கு வந்த ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழ்வதில் தவறில்லை.

    திருமண வயது வரவில்லை என்பதற்காக அவர்களை பிரிக்க முடியாது. எனவே 18 வயது வாலிபரும், 19 வயது பெண்ணும் ஒன்றாக சேர்ந்து வாழலாம் என்று தீர்ப்பளித்தனர்.

    இந்தியாவில் ஒரு பெண் திருமணம் செய்து கொள்ள 18 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். இதுபோல ஆணுக்கு 21 வயது நிறைவடைந்தால் மட்டுமே திருமணம் செய்து கொள்ளலாம் என்று வரையறுக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் 18 வயது வாலிபரும், 19 வயது பெண்ணும் சேர்ந்து வாழலாம் என கோர்ட்டு தீர்ப்பளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Tamilnews
    ×