search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kharghe"

    • அற்புதமான விளையாட்டிற்கு பிறகு கிடைத்த வெள்ளிப் பதக்கத்திற்கு வாழ்த்துகள்.
    • நீரஜ் சோப்ரா, உங்களின் அபார சாதனைக்கு மனதார வாழ்த்துகள்.

    ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் ஆடவர் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது.

    இதில் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் 92.97 மீட்டர் தூரத்திற்கு வீசி சாதனை படைத்ததோடு, தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். அவரை தொடர்ந்து இந்திய வீரர் நீரஜ் சோப்ரா, 89.45 தூரத்திற்கு வீசி 2-வது இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

    வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்த நீரஜ் சோப்ராவிற்கு காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் இதுகுறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    நீரஜ், நீங்கள் ஒரு அற்புதமான விளையாட்டு வீரர்.

    பாரிஸ் ஒலிம்பிக்ஸ் 2024 முழுவதும் அற்புதமான விளையாட்டிற்கு பிறகு கிடைத்த வெள்ளிப் பதக்கத்திற்கு வாழ்த்துகள்.

    இந்தியாவை மீண்டும் பெருமைப்படுத்தியுள்ளீர்கள்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ர்ஜூன கார்கே நீரஜ் சோப்ராவிற்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில், " ஒருமுறை சாம்பியன்.. எப்போதும் சாம்பியன்!

    நீரஜ் சோப்ரா, உங்களின் அபார சாதனைக்கு மனதார வாழ்த்துகள்.

    பாரிஸ் ஒலிம்பிக்ஸ் 2024ல் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றது உங்களின் அர்ப்பணிப்பு, கடின உழைப்பு மற்றும் அசைக்க முடியாத ஆர்வத்திற்குச் சான்றாகும்.

    உங்கள் குறிப்பிடத்தக்க 89.45 மீ எறிதல் உங்களுக்கு ஒரு மேடைப் பூச்சுக்கு உதவியது மட்டுமல்லாமல் ஒரு தேசத்திற்கு உத்வேகம் அளித்துள்ளது.

    பிரகாசித்து புதிய உயரங்களை எட்டிக்கொண்டே இருங்கள். உங்கள் வெற்றிக்கு வாழ்த்துக்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    • ஐதராபாத் தனியார் ஓட்டலில் நேற்று காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடந்தது.
    • டெல்லியில் உயர் மட்ட தலைவர்கள் ஆலோசனை நடத்தினர்.

    தெலுங்கானா மாநிலத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 65 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. காங்கிரசின் வெற்றி வேட்பாளர்கள் பட்டியலுடன் மாநில தலைவர் ரேவந்த் ரெட்டி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

    ஐதராபாத் தனியார் ஓட்டலில் நேற்று காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடந்தது. கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார் மாணிக் தாகூர் எம்.பி. தலைமையில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் தேர்வு குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

    முதல்வர் மற்றும் அமைச்சர்கள் தேர்வு செய்யும் அதிகாரம் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே முதலமைச்சரை அறிவிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், இது தொடர்பாக டெல்லியில் உயர் மட்ட தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். இதில், தெலுங்கானா மாநிலத்தின் புதிய முதல்வராக காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி பதவியேற்கவுள்ளார் என்றும் வரும் 7ம் தேதி ஐதராபாத்தில் பதவியேற்பு விழா நடைபெறும் எனவும் அகிய இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்," பார்வையாளர்களின் அறிக்கையை பரிசீலித்து, மூத்த தலைவர்களுடன் கலந்துரையாடிய பிறகு, தெலுங்கானாவில் முதலமைச்சராக ரேவந்த் ரெட்டியை தேர்ந்தெடுத்து காங்கிரஸ் தலைவர் முடிவு செய்துள்ளார்" என்றார்.

    கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார், தீபா தாஸ்முன்ஷி, அஜோய் குமார், கே.ஜே. ஜார்ஜ், அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் பொறுப்பாளர் மாணிக்ராவ் தாக்ரே உள்ளிட்ட 4 பார்வையாளர்களை கட்சி நியமித்துள்ளது.

    எத்தனை அமைச்சர்கள் பதவியேற்பார்கள், துணை முதல்வர்கள் இருப்பார்களா என்ற கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

    • பாராளுமன்றத்திற்கு வெளியே காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று செய்தியாளர்களிடம் பேசினார்.
    • பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக தாக்கி பேசினார்.

    கடந்த மே 3ம் தேதி முதல் வன்முறைச் சம்பவங்களைச் சந்தித்த மணிப்பூர் மாநிலம் குறித்து பாராளுமன்றத்தில் பிரதமர் மோடி எந்த அறிக்கையும் வெளியிடவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

    இதுதொடர்பாக, பாராளுமன்றத்திற்கு வெளியே காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக தாக்கி பேசினார்.

    இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது:-

    பிரதமர் மோடி பாராளுமன்றத்தில் பேசுவதில்லை, அதற்கு பதிலாக ராஜஸ்தானில் அரசியல் பேச்சு நடத்துகிறார்.

    இன்று, மக்கள் விழிப்புணர்வு அடைந்துள்ளனர். அவர்கள் போராடுவார்கள், அதை தொடருவார்கள். இதனால்  ஜனநாயகத்தின் கோவிலான பாராளுமன்றத்தில் நீங்கள் பேச விரும்பவில்லை. ராஜஸ்தானில் புதிய மருத்துவக் கல்லூரிகளைத் திறக்கும்போது  அரசியல் பேச்சு நடத்த விரும்புகிறீர்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×