search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Khudiram Bose"

    • குதிராம் போசுக்கு ஆகஸ்ட் 11-ம் தேதி முசாபர்பூர் சிறையில் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டது.
    • 18 வயதான அவர் எவ்வித அச்சமின்றி வந்தே மாதரம் என முழங்கியபடி மரணம் அடைந்தார்.

    பாட்னா:

    வங்காளத்தின் மிதுனாப்பூர் கிராமத்தில் 1889-ம் ஆண்டு குதிராம் போஸ் பிறந்தார். இளம் வயதிலேயே இந்திய விடுதலைக்காக புரட்சிகரமான செயல்களில் ஈடுபட்டார். 1905-ம் ஆண்டில் நடைபெற்ற வங்கப் பிரிவினை போராட்டத்தில் பங்கேற்றார். அதன்பின், பல காவல்நிலையங்களை குதிராமின் குழு குண்டுகளால் தாக்கியது. தாக்குதல் நடத்துவது யார் என தெரியாமல் ஆங்கிலேய அரசு திகைத்தது.

    1908-ம் ஆண்டில் குதிராம் போஸ் கைது செய்யப்பட்டார். விசாரணையின்போது, காவல்நிலையங்கள் மீதான தாக்குதல் குதிராம் போசின் செயல் என ஆங்கிலேய அரசு கண்டுபிடித்தது.

    இதையடுத்து, அவருக்கு 1908, ஆகஸ்ட் 11-ம் தேதி முசாபர்பூர் சிறையில் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டது. அப்போது 18 வயதான குதிராம் போஸ் எவ்வித அச்சமுமின்றி நாட்டுக்காக, வந்தே மாதரம் என முழங்கியபடி மரணம் அடைந்தார்.

    இந்நிலையில், குதிராம் போசின் நினைவு தினமான இன்று பீகாரின் முசாப்பூர் சிறைக்குச் சென்ற அப்பகுதி மக்கள் அங்கு குதிராம் போசின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

    ×