search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kilambakkam New Bus Stand"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • "கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்" எனும் பெயரில் மக்கள் பயன்பாட்டிற்காக வருகின்ற ஜூன் மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார்.
    • நல்லம்பாக்கம் முதல் ஊரப்பாக்கம் ஜிஎஸ்டி சாலை வரை - 10 கிலோ மீட்டர் நீளத்திற்கு சாலைகளை அகலப்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

    சென்னை:

    செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கத்தில் ரூ.393.74 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் புதிய புறநகர் பேருந்து முனையத்தில் இருந்து, ஜி.எஸ்.டி. சாலை வழியாக போக்குவரத்து நெரிசலின்றி பேருந்துகளை இயக்குவது தொடர்பாகவும், தென்மாவட்ட பேருந்துகள் செல்ல மாற்று வழித்தடங்கள் அமைப்பது தொடர்பாகவும் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் காவல்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் போக்குவரத்துத்துறையுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து வரதராஜபுரத்தில் தனியார் ஆம்னி பேருந்துகள் நிறுத்துவதற்கான இடத்தினை நேரில் சென்று கள ஆய்வு செய்தார்.

    ஆய்வுக்கு பின் அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசுகையில், புதிய புறநகர் பேருந்து முனையம் "கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்" எனும் பெயரில் மக்கள் பயன்பாட்டிற்காக வருகின்ற ஜூன் மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார்.

    கூடுவாஞ்சேரியில் ரவுண்டானா அமைப்பது தொடர்பாகவும், கூடுவாஞ்சேரி, மாடம்பாக்கம் சாலை முதல் மண்ணிவாக்கம் வரை- 7 கிலோ மீட்டர் நீளத்திற்கும், கண்டிகை முதல் கூடுவாஞ்சேரி வரை - 18 கிலோமீட்டர் நீளத்திற்கும், நல்லம்பாக்கம் முதல் ஊரப்பாக்கம் ஜிஎஸ்டி சாலை வரை - 10 கிலோ மீட்டர் நீளத்திற்கு சாலைகளை அகலப்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.

    இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

    ஆய்வின்போது வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வா, தாம்பரம் மாநகர காவல் ஆணையாளர் அ.அமல்ராஜ், சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலர் அன்சூல் மிஸ்ரா, போக்குவரத்து ஆணையர் இல.நிர்மல்ராஜ், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • கடந்த பருவமழையின் போது நவம்பர், டிசம்பர் மாதத்தில் கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டது. அந்த இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடந்து வருகின்றன.
    • விரைவில் கிளாம்பாக்கம் புதிய பஸ்நிலையம் திறப்பு விழா இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    வண்டலூர்:

    சென்னை நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பஸ்நிலையம் கட்டப்பட்டு வருகிறது.

    சுமார் 90 ஏக்கர் நிலத்தில் ரூ.394 கோடி செலவில் பிரமாண்டமாக இந்த பஸ் நிலையம் அமைகிறது. வெளியூர்களுக்கு செல்லும் அரசு விரைவு பஸ்கள் மற்றும் மாநகர பஸ்கள் என 300 பஸ்களை இயக்கும் வகையில் பணிகள் நடந்து வருகின்றன. இதேபோல் இருசக்கர வாகனங்கள் நிறுத்தம், கடைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு சாய்வு தளம், கழிவறை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. அருகில் உள்ள ஊரப்பாக்கம் ரெயில் நிலையத்தை இணைக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

    புதிய பஸ்நிலையம் பணிகள் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில் பொங்கல் பண்டிகை மற்றும் கடந்த மாதத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கட்டுமான பணிகள் இன்னும் முடியாததால் கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையம் திறப்பு தாமதமாகி வருகிறது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் சேகர்பாபு, கிளாம்பாக்கம் பஸ் நிலைய கட்டுமானப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.

    கடந்த பருவமழையின் போது நவம்பர், டிசம்பர் மாதத்தில் கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டது. அந்த இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடந்து வருகின்றன. எனவே விரைவில் கிளாம்பாக்கம் புதிய பஸ்நிலையம் திறப்பு விழா இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதுகுறித்து சி.எம்.டி.ஏ. அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையத்தில் கட்டுமான பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் பஸ்நிலைய முக்கிய கட்டிடத்தில் உள்ள குவிமாட பணிகள் 80 சதவீதம் முடிந்து இருந்தது. தற்போது இது முடியும் தருவாயில் உள்ளது. இறுதிக்கட்ட பணிகள் மட்டும் விரைவில் தொடங்கும்.

    பஸ் நிலையத்தில் தொலைதூர பஸ்கள், மாநகர பஸ்கள் வந்து செல்ல தனித்தனி நுழைவு வாயில்கள் இருக்கும். தென்மாவட்டங்களுக்கு செல்லும் தொலைதூர பஸ்களை இங்கிருந்து இயக்க திட்டமிடப்பட்டு வருகிறது. இதன் மூலம் கோயம்பேடு பஸ் நிலையத்தில் நெரிசல் குறையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×