என் மலர்
நீங்கள் தேடியது "killed young girl"
பாலையம்பட்டி:
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே உள்ளது ராமசாமி நகர். இங்குள்ள அய்யங்கரன் என்பவரது தோட்டத்தில் 35 வயது மதிக்கத்தக்க பெண் முகம் கருகிய நிலையில் இறந்து கிடந்தார். அவரது ஆடைகள் அலங்கோலமாக கிடந்தன.
இது குறித்து அருப்புக்கோட்டை தாலுகா போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் அன்னராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
முகம் கருகிய நிலையில் பிணமாக கிடந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பிணமாக கிடந்த பெண்ணின் கையில் சங்கீதா என்று பச்சை குத்தப்பட்டுள்ளது. அவர் அருகே விஷபாட்டில்களும் கிடந்தன. அந்த பெண்ணை யாராவது இந்த தோட்டத்துக்கு கடத்தி வந்து கற்பழித்து கொலை செய்திருக்கலாம் என்றும், அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக முகத்தை தீ வைத்து எரித்திருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
கற்பழித்துக் கொலை செய்யப்பட்ட அந்த பெண் யார்? என்பதை அறிய விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.