search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kilpennathur"

    கீழ்பென்னாத்தூர் அருகே குடிநீர் கேட்டு பெண்கள் காலி குடங்களுடன் இன்று சாலை மறியல் செய்தனர்.

    கீழ்பென்னாத்தூர்:

    கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள கொளத்தூரில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு கடந்த 3 மாதங்களாக குடிநீர் முறையாக வழங்கவில்லை. இது குறித்து சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கபடவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் 150-க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் கீழ்பென்னாத்தூர் சானிப்பூண்டி சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவலறிந்த கீழ்பென்னாத்தூர் போலீசார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் சம்பவ இடத்திற்கு வந்து பெண்களிடம் பேச்சுவார்தை நடத்தினர். அப்போது சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

    இதையடுத்து பெண்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    கீழ்பென்னாத்தூர் அருகே போலீசார் விரட்டியதால் ஆட்டோ டிரைவர் கிணற்றில் விழுந்து பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கீழ்பென்னாத்தூர்:

    கீழ்பென்னாத்தூர் போலீசார் நேற்றிரவு கருங்காலி குப்பம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் 5 பேர் கும்பல் சூதாட்டம் ஆடிக்கொண்டிருந்தனர்.

    போலீசாரை கண்ட அந்த கும்பல் தலைதெறிக்க சிதறி ஓடினர். அதில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பெரிய அகரம் பகுதியை சேர்ந்த பாஸ்கர் (வயது 35). ஆட்டோ டிரைவர். என்பவர் ஓடிய போது தரைமட்ட கிணற்றில் தவறி விழுந்தார்.

    அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த போலீசார் கீழ்பென்னாத்தூர் தீயணைப்பு வீரர்களுக்கும் 108 ஆம்புலன்சுக்கும் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி அவரை உயிருடன் மீட்டனர். பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் பாஸ்கர் செல்லும் வழியிலேயே இறந்தார்.

    இது குறித்து கீழ்பென்னாத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் சூதாட்டம் ஆடிய பாதம்பூண்டி பகுதியை சேர்ந்த சங்கர் மற்றும் பன்னீர் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

    ×