என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Kings XI Punjab"
இந்த நிலையில் ஐதராபாத்துக்கு எதிராக நேற்றைய ஆட்டத்தில் அஸ்வின் மீண்டும் ‘மன்கட்’ முறையில் ரன் அவுட் செய்ய முயற்சித்தாரா? என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவர் 2 முறை பந்தை வீச முயன்று வீசாமல் நிறுத்தினார். களத்தில் இருந்த விர்த்திமான் சகாவை அவர் ‘மன்கட்’ முறையில் அவுட் செய்ய முயற்சித்தாரா? என்பது உறுதியாக தெரியவில்லை.
இதுதொடர்பாக அவரிடம் நடுவர் பேசினார். அஸ்வினை நடுவர் எச்சரித்தாரா? என்பது தெரியவில்லை. #MankadRunOut #IPL2019 #SRHvKXIP
ஐ.பி.எல். போட்டியில் பெங்களூர் அணி பஞ்சாபை மீண்டும் வீழ்த்தியது.
பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதலில் விளையாடியது. அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 202 ரன் குவித்தது.
டிவில்லியர்ஸ் 44 பந்தில் 82 ரன்னும் (3 பவுண்டரி, 7 சிக்சர்), ஸ்டோனிஸ் 34 பந்தில் 46 ரன்னும் (2 பவுண்டரி, 3 சிக்சர்), பார்த்தீவ் படேல் 24 பந்தில் 43 ரன்னும் (7 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். முகமது சமி, விஜோயன்ஸ், கேப்டன் அஸ்வின், முருகன் அஸ்வின் தலா 1 விக்கெட் கைப்பற்றினார்கள்.
பின்னர் விளையாடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 185 ரன் எடுத்தது. இதனால் பெங்களூரு அணி 17 ரன்னில் வெற்றி பெற்றது.
பெங்களூர் அணி பெற்ற 4-வது வெற்றியாகும். தொடர்ச்சியாக 3-வது வெற்றியை பெற்று அந்த அணி வாய்ப்பில் நீடித்து வருகிறது. வெற்றி குறித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் விராட்கோலி கூறியதாவது:-
எங்களது ஒரே நோக்கம் அணிக்காக சிறப்பாக விளையாடுவது தான். தொடர்ச்சியாக 6 ஆட்டத்தில் தோற்றது உண்மையிலேயே காயத்தை ஏற்படுத்தி விட்டது. இது எங்களுக்கு மிகப் பெரிய பாதிப்பே. வேறு எந்த அணியும் இதே மாதிரி 6 ஆட்டங்களில் தொடர்ந்து தோற்றது இல்லை. கடைசியாக ஆடிய 5 ஆட்டத்தில் நான்கில் வென்றுள்ளோம். 5 ஆட்டத்திலும் வென்று இருந்தால் மகிழ்ச்சியுடன் இருந்து இருப்போம். வேடிக்கையாக விளையாடிதான் இந்த ஆட்டத்தில் வென்றோம். நாங்கள் எந்தவித நெருக்கடியிலும் ஆடவில்லை. எப்படி ஆட வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும்.
இவ்வாறு அவர் கூறினார். #KXIP #RCB #ViratKohli
பெங்களூர்:
ஐ.பி.எல். போட்டியில் 42-வது ‘லீக்’ ஆட்டம் பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடக்கிறது.
இதில் விராட்கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.
பெங்களூர் அணி 3 வெற்றி, 7 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் இருக்கிறது. ‘பிளேஆப்’ சுற்று வாய்ப்பில் நீடிக்க அந்த அணிவெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் இருக்கிறது. தோற்றால் வெளியேற்றப்படும் நிலை ஏற்படும்.
பஞ்சாப் அணியை அதன் சொந்த மண்ணில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்ததால் பெங்களூர் அணி நம்பிக்கையுடன் இருக்கிறது. அந்த அணி பஞ்சாப்பை மீண்டும் தோற்கடித்து 4-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் இருக்கிறது.
பெங்களூர் அணியில் கேப்டன் விராட்கோலி (387 ரன்), டிவில்லியர்ஸ் (332 ரன்), பார்த்தீவ் படேல் (283 ரன்), மொய்ன் அலி (216 ரன்), யசுவேந்திர சாஹல் (14 விக்கெட்) ஸ்டெய்ன் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 5 வெற்றி, 5 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று 5-வது இடத்தில் உள்ளது.
அந்த அணி ராஜஸ்தான் ராயல்சை 2 முறையும் (14 ரன், 12 ரன்) மும்பை (8 விக்கெட்), டெல்லி (14 ரன்), ஐதராபாத் (6 விக்கெட்) ஆகியவற்றை ஒரு முறையும் வீழ்த்தியது. கொல்கத்தா (28 ரன்), சென்னை (22 ரன்), மும்பை (3 விக்கெட்), பெங்களூர் (8 விக்கெட்), டெல்லி (5 விக்கெட்) ஆகியவற்றிடம் தோற்றது.
பெங்களூர் அணியிடம் ஏற்கனவே தோற்றதற்கு பதிலடி கொடுத்து 6-வது வெற்றியை பெறும் வேட்கையில் பஞ்சாப் அணி இருக்கிறது.
பஞ்சாப் அணியின் பேட்டிங்கில் கிறிஸ் கெய்ல் (423 ரன்), லோகேஷ் ராகுல் (399 ரன்), அகர்வால் (227 ரன்) ஆகியோரும், பந்து வீச்சில் முகமது ஷமி (13 விக்கெட்), கேப்டன் அஸ்வின் (11 விக்கெட்) ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.
இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடுவார்கள் என்பதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #IPL2019 #RCBvsKXIP
ஐ.பி.எல். போட்டியின் 32-வது ‘லீக்’ ஆட்டம் மொகாலியில் இன்று இரவு 8 மணிக்கு நடக்கிறது.
இதில் அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப்- ரகானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.
பஞ்சாப் அணி 4 வெற்றி, 4 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 5-வது இடத்தில் உள்ளது.
அந்த அணி ராஜஸ்தான் (14 ரன்), மும்பை (8 விக்கெட்), டெல்லி (14 ரன்), ஐதராபாத் (6 விக்கெட்) ஆகியவற்றை வீழ்த்தி இருந்தது. கொல்கத்தா (28 ரன்), சென்னை (22 ரன்), மும்பை (3 விக்கெட்), பெங்களூர் (8 விக்கெட்) ஆகிய அணிகளிடம் தோற்று இருந்தது.
ராஜஸ்தானை ஏற்கனவே வீழ்த்தி இருந்ததால் பஞ்சாப் நம்பிக்கையுடன் ஆடும். அந்த அணியை மீண்டும் வீழ்த்தி 5-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பேட்டிங்கில் லோகேஷ் ராகுல் (335 ரன்), கிறிஸ் கெய்ல் (322 ரன்), அகர்வால் (199 ரன்) ஆகியோர் அதிரடியாக ஆடி வருகிறார்கள்.
பந்துவீச்சில் முகமது ஷமி (10 விக்கெட்), கேப்டன் அஸ்வின் (9 விக்கெட்), சாம் குர்ராண் (7 விக்கெட்) ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2 வெற்றி, 5 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று 7-வது இடத்தில் உள்ளது.
அந்த அணி மும்பை (4 விக்கெட்), பெங்களூர் (7 விக்கெட்) ஆகியவற்றை மட்டுமே வீழ்த்தியுள்ளது. சென்னை சூப்பர் கிங்சிடம் 2 முறையும் (8 ரன், 4 விக்கெட்) தோற்றது. இதேபோல ஐதராபாத் (5 விக்கெட்), கொல்கத்தா (8 விக்கெட்) அணிகளிடமும் தோற்று இருந்தது.
சொந்த மண்ணில் பஞ்சாப்பிடம் 14 ரன்னில் தோற்றதற்கு இன்று பதிலடி கொடுத்து 3-வது வெற்றியை பெறும் வேட்கையில் ராஜஸ்தான் உள்ளது.
ராஜஸ்தான் அணியில் பட்லர் (268 ரன்), ஸ்டீவ் சுமித் (186 ரன்), கேப்டன் ரகானே (175 ரன்) போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும், ஷிரேயாஸ் கோபால் (8 விக்கெட்), ஆர்ச்சர் (7 விக்கெட்), பென் ஸ்டோக்ஸ் (6 விக்கெட்) போன்ற சிறந்த பவுலர்களும் உள்ளனர்.
இரு அணிகளும் ஜெய்ப்பூரில் மோதிய ஆட்டத்தில் ‘மன்கட்’ அவுட் ஆனது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது. பட்லரை அஸ்வின் செய்த இந்த ரன் அவுட் விவகாரம் இன்றைய ஆட்டத்தில் எதிரொலிக்கும். இதற்கு தங்களது அபாரமான ஆட்டம் மூலம் ராஜஸ்தான் பதிலடி கொடுக்குமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். #KXIPvsRR
ஐ.பி.எல். போட்டியில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடக்கிறது. மாலை 4 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.
இரவு 8 மணிக்கு மொகாலியில் நடைபெறும் ஆட்டத்தில் அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப்-விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன.
பஞ்சாப் அணி 4 வெற்றி, 3 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 5-வது இடத்தில் இருக்கிறது. அந்த அணி ராஜஸ்தான், மும்பை, டெல்லி, ஐதராபாத்தை வென்றது. கொல்கத்தா, சென்னை, மும்பையிடம் தோற்று இருந்தது.
சொந்த மண்ணில் அதிரடியாக விளையாடுவதால் அந்த அணி அதை நீட்டித்து 5-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. பஞ்சாப் அணியில் லோகேஷ் ராகுல், கெய்ல், அகர்வால், மில்லர், சாம் குர்ரான் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.
பெங்களூர் அணி தான் மோதிய 6 ஆட்டங்களிலும் தோற்று புள்ளி எதுவும் பெறவில்லை. சென்னை (7 விக்கெட்), மும்பை (6 ரன்), ஐதராபாத் (118 ரன்), ராஜஸ்தான் (7 விக்கெட்), கொல்கத்தா (5 விக்கெட்), டெல்லி (4 விக்கெட்) ஆகியவற்றிடம் தோற்றது.
பெங்களூர் அணி தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்து இன்றைய ஆட்டத்திலாவது முதல் வெற்றியை பெறுமா? என்று அந்த அணி ரசிகர்கள் ஆவலுடன் எதிர் நோக்குகிறார்கள்.
தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெய்ன் வருகை அந்த அணிக்கு பலம் சேர்க்கலாம். #IPL2019 #KXIPvRCB
ஐ.பி.எல். போட்டியில் ஐதராபாத்தை வீழ்த்தி பஞ்சாப் அணி 4-வது வெற்றியை பெற்றது.
மொகாலியில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 151 ரன் எடுத்தது. வார்னர் அதிகபட்சமாக 62 பந்தில் 70 ரன் (6 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தார்.
பின்னர் விளையாடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் 19.5 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 151 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடக்க வீரர் லோகேஷ் ராகுல் 53 பந்தில் 71 ரன் எடுத்து (7 பவுண்டரி, 1 சிக்சர்) வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். அவருக்கு மயங் அகர்வால் 43 பந்தில் 55 ரன் எடுத்தும் (3 பவுண்டரி, 3 சிக்சர்) உதவியாக இருந்தார்.
பஞ்சாப் அணி 4-வது வெற்றியை பெற்றது. உள்ளூர் மைதானமான மொகாலியில் அந்த அணியின் அதிரடி நீடிக்கிறது. இந்த வெற்றி குறித்து பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின் கூறியதாவது:-
பரபரப்பான ஆட்டத்தில் பெற்ற இந்த வெற்றி மிகுந்த ஆறுதலை அளிக்கிறது. இதன் மூலம் எங்களது நம்பிக்கை அதிகரித்து உள்ளது. ஆனாலும் ஆட்டத்தில் இன்னும் முன்னேற்றம் தேவை.
கடைசி 10 ஓவர்களில் 100 ரன்களை கொடுத்தது உண்மையிலேயே கடுமையானது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஐதராபாத் அணி 3-வது தோல்வியை தழுவியது. தோல்வி குறித்து அந்த அணியின் தற்காலிக கேப்டன் புவனேஷ்வர்குமார் கூறும்போது, “எங்களது பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டனர். ஆனாலும் பந்து வீச்சில் முன்னேற்றம் தேவை. நாங்கள் 20 ரன்கள் குறைவாக எடுத்து விட்டோம். ஆனாலும் நாங்கள் நம்பிக்கையுடன் கடைசி வரை போராடினோம்” என்றார்.
ஆட்டநாயகன் விருது பெற்ற லோகேஷ் ராகுல் கூறும்போது , “எனது பேட்டிங் மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. கையில் காயத்துடன் அகர்வால் விளையாடுவது பாராட்டுதலுக்கு உரியது” என்றார்.
பஞ்சாப் அணி 7-வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்சுடன் நாளை மோதுகிறது, ஐதராபாத் அடுத்த ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்சை 14-ந்தேதி எதிர் கொள்கிறது. #Ashwin #KXIPvSRH
ஐ.பி.எல். போட்டியில் 22-வது ‘லீக்’ ஆட்டம் மொகாலியில் இன்று இரவு 8 மணிக்கு நடக்கிறது. இதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.
இரு அணிகளுமே 5 ஆட்டத்தில் 3 வெற்றி, 2 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்றுள்ளன. இதனால் 4-வது வெற்றி யாருக்கு? என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரு அணிகளும் கடைசியாக விளையாடிய ஆட்டத்தில் தோற்று இருந்தது. எனவே வெற்றிக்காக கடுமையாக போராடும்.
அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணி ராஜஸ்தான் (14 ரன்), மும்பை (8 விக்கெட்), டெல்லியை (14 ரன்) வீழ்த்தி இருந்தது. கொல்கத்தா (28 ரன்), சென்னை (22 ரன்) அணிகளிடம் தோற்று இருந்தது.
ஐதராபாத் அணி ராஜஸ்தான் (5 விக்கெட்), பெங்களூர் (118 ரன்), டெல்லியை (5 விக்கெட்) தோற்கடித்து இருந்தது. கொல்கத்தா (6 விக்கெட்), மும்பை (40 ரன்) அணிகளிடம் தோற்று இருந்தது. #IPL2019 #SRH #KXIP
ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று (சனிக்கிழமை) மாலை நடைபெறும் 18-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது.
டோனி தலைமையிலான சென்னை அணி தனது முதல் 3 லீக் ஆட்டங்களில் தொடர்ச்சியாக (பெங்களூரு, டெல்லி, ராஜஸ்தான் அணிகளுக்கு எதிராக) வெற்றியை தனதாக்கியது. நான்காவது லீக் ஆட்டத்தில் சென்னை அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியிடம் தோல்வியை தழுவியது. அந்த ஆட்டத்தில் சென்னை அணியின் பந்து வீச்சு, பீல்டிங் மோசமாக இருந்தது. குறிப்பாக கடைசி 4 ஓவர்களில் சென்னை பவுலர்கள் 67 ரன்களை வாரி வழங்கியது பாதகமான அம்சமாக மாறியது.
இந்த சீசனில் சென்னை அணி உள்ளூரில் ஆடும் 3-வது போட்டி இதுவாகும். சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த முந்தைய 2 லீக் ஆட்டங்களிலும் பேட்ஸ்மேன்கள் ரன் எடுக்க திணறினர். இருப்பினும் சென்னை அணி சிறப்பாக செயல்பட்டு 2 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்திலும் சென்னை அணி தனது ஆதிக்கத்தை நிலைநாட்டும் என்று ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர்.
தமிழகத்தை சேர்ந்த ஆர்.அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 4 ஆட்டங்களில் ஆடி 3 வெற்றி (ராஜஸ்தான், மும்பை, டெல்லி அணிக்கு எதிராக), ஒரு தோல்வி (கொல்கத்தா அணியிடம்) கண்டுள்ளது. கடந்த லீக் ஆட்டத்தில் முதுகுவலி காரணமாக ஆடாத பஞ்சாப் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல் உடல் தகுதியை பெற்று விட்டதால் இன்றைய ஆட்டத்தில் களம் திரும்புகிறார். இதே போல் ‘ஹாட்ரிக்’ விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்த இளம் ஆல்-ரவுண்டர் சாம் குர்ரன் இன்றைய ஆட்டத்திலும் தொடருவார் என்று தெரிகிறது.
சென்னை சேப்பாக்கம் ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு அனுகூலமாக இருக்கும். இரு அணியிலும் முதன்மையான சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். அத்துடன் இரண்டு அணியிலும் அதிரடி காட்டக்கூடிய பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
இவ்விரு அணிகளும் இதுவரை 19 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் சென்னை அணி 11 ஆட்டத்திலும், பஞ்சாப் அணி 8 ஆட்டத்திலும் வெற்றி பெற்று இருக்கின்றன. மாலை 4 மணிக்கு தொடங் கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.
இந்த போட்டிக்கான இரு உத்தேச அணிகள் வருமாறு:-
சென்னை: டோனி (கேப்டன்), ஷேன் வாட்சன் அல்லது பாப் டுபிளிஸ்சிஸ், அம்பத்தி ராயுடு அல்லது முரளி விஜய், சுரேஷ் ரெய்னா, கேதர் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, ஸ்காட் குஜ்ஜெலின், தீபக் சாஹர், ஷர்துல் தாகூர், மொகித் ஷர்மா, இம்ரான் தாஹிர்.
பஞ்சாப்: ஆர்.அஸ்வின் (கேப்டன்), கிறிஸ் கெய்ல், லோகேஷ் ராகுல், மயங்க் அகர்வால், சர்ப்ராஸ் கான், டேவிட் மில்லர், மன்தீப் சிங், ஹர்டஸ் வில்ஜோன், முருகன் அஸ்வின், முகமது ஷமி, சாம் குர்ரன் அல்லது முஜீப் ரகுமான்.
ஐதராபாத்தில், இன்று இரவு 8 மணிக்கு நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் ஐதராபாத் சன் ரைசர்ஸ்-மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஐதராபாத் அணி இதுவரை 4 ஆட்டத்தில் ஆடி 3 வெற்றி, ஒரு தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது. மும்பை அணி 4 ஆட்டத்தில் விளையாடி 2 வெற்றி, 2 தோல்வியை சந்தித்துள்ளது. ரன் குவிப்பில் மிரட்டி வரும் ஐதராபாத் அணி உள்ளூரிலும் வெற்றிப்பயணத்தை நீட்டிக்கும் முனைப்புடன் ஆயத்தமாக உள்ளது. #IPL2019 #CSKvKXIP
அஸ்வினை கிண்டல் செய்த ரசிகர்கள்
கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கேப்டன் அஸ்வினின் பந்து வீச்சு எடுபடவில்லை. அவர் 4 ஓவர் வீசி 47 ரன்களை விட்டுக் கொடுத்தார். ஒரு விக்கெட் கூட கைப்பற்ற வில்லை.
அஸ்வினின் இந்த மோசமான பந்து வீச்சை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கிண்டல் செய் துள்ளனர். ராஜஸ்தான் அணி வீரர் பட்லரை மன்கட் முறையில் ரன் அவுட் செய்த விவகாரத்தில் ரசிகர்கள் அவரை கலாய்த்து உள்ளனர்.
அஸ்வினின் செயல் அநாகரீகமானது, கிரிக்கெட் ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல என்று ஏற்கனவே விமர்சிக்கப்பட்டது. விதிப் படிதான் நான் செயல் பட்டேன் என்று அவர் விளக் கம் அளித்து இருந்தார்.
இதன் எதிரொலியாகத் தான் அஸ்வினின் நேற்றைய போட்டியின் பந்து வீச்சை ரசிகர்கள் கிண்டல் செய்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்