என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
லோகேஷ் ராகுல், கிறிஸ் கெயில் அதிரடி - மும்பையை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பஞ்சாப்
Byமாலை மலர்30 March 2019 5:47 PM IST (Updated: 2 April 2019 4:22 PM IST)
மொகாலியில் நடைபெற்ற 9வது லீக் ஆட்டத்தில் லோகேஷ் ராகுல், மயங்க் அகர்வால், கெயில் ஆகியோரின் அதிரடியால் மும்பையை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பஞ்சாப் . #IPL2019 #KXIPvMI
8 அணிகள் பங்கேற்றுள்ள 12-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இன்று மாலை மொகாலியில் உள்ள ஐஎஸ் பிந்த்ரா மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.
டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் அஸ்வின் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து, மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் ரோகித் சர்மாவும், குயிண்டன் டி காக்கும் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர்.
அணியின் எண்ணிக்கை 51 ஆக இருக்கும்போது ரோகித் சர்மா 32 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய சூர்யகுமார் யாதவ் 11 ரன்னில் வெளியேறினார். சிறப்பாக ஆடிய டி காக் 60 ரன்னில் ஆட்டமிழந்தார். யுவராஜ் சிங், 18 ரன்னிலும், பொலார்டு 7 ரன்னிலும், குருணால் பாண்டியா 10 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கடைசியில் ஹர்திக் பாண்டியா 19 பந்தில் ஒரு சிக்சர், 3 பவுண்டரியுடன் 31 ரன்னில் அவுட்டானார்.
இறுதியில், மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 176 ரன்களை எடுத்துள்ளது.
பஞ்சாப் அணி சார்பில் முருகன் அஸ்வின், ஷமி, வில்ஜோன் ஆகியோர் தலா 2 விக்கெட்டும், ஆன்ட்ரு டை ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதைத்தொடர்ந்து, 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக லோகேஷ் ராகுலும், கிறிஸ் கெயிலும் இறங்கினர். தொடக்கம் முதலே இருவரும் அடித்து ஆடினர்.
அணியின் எண்ணிக்கை 53 ஆக இருந்தபோது கெயில் 24 பந்தில் 4 சிக்சர், 3 பவுண்டரியுடன் 40 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அடுத்து இறங்கிய மயங்க் அகர்வால் ராகுலுக்கு ஒத்துழைப்பு கொடுத்தார். அகர்வால் 21 பந்தில் 2 சிக்சர், 4 பவுண்டரியுடன் 43 ரன்னில் அவுட்டானார். அவருக்கு அடுத்து மில்லர் இறங்கினார். மறுபுறம் ராகுல் தனது அதிரடியை தொடர்ந்து அரை சதமடித்தார்.
இறுதியில், பஞ்சாப் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 18.4 ஓவரில் வெற்றி இலக்கை அடைந்தது. லோகேஷ் ராகுல் 71 ரன்களுடனும், மில்லர் 15 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். #IPL2019 #KXIPvMI
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X