என் மலர்
நீங்கள் தேடியது "Kiran"
- தமிழ் சினிமாவுக்கு வந்த பிறகு ஒரு படத்திலேயே மிகப்பெரிய ஸ்டார் ஆனேன்.
- சினிமாவில் யாரும் நண்பர்கள் இல்லை என்ற உண்மையை புரிந்து கொண்டேன்.
தமிழில் ஜெமினி, வில்லன், அன்பே சிவம், தென்னவன், அரசு, வின்னர், நியூ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள கிரண் சினிமா அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.
கிரண் அளித்துள்ள பேட்டியில், "எனக்கு மூன்று திருமணம் ஆகிவிட்டது என்றும், மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள் என்றும் கண்டபடி பேசுகிறார்கள்.
தமிழ் சினிமாவுக்கு வந்த பிறகு ஒரு படத்திலேயே மிகப்பெரிய ஸ்டார் ஆனேன். குறிப்பிட்ட காலகட்டத்திற்கு பிறகு காதலரை திருமணம் செய்துகொண்டு செட்டிலாக நினைத்தேன். இதனால் அஜித் போன்ற பெரிய நடிகர்கள் படங்களை கூட தவிர்க்கும் நிலைக்கு ஆளானேன்.
ஆனால் அந்த காதல் கைகூடாமல் போக, பட வாய்ப்புகளும் குறைந்தது. எனக்கு படங்களில் நடிக்க வாய்ப்புகள் தருவதாக நெருங்கி பழகிய நண்பர்களே இரவில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு என்னை அழைத்தார்கள். அப்போதுதான் சினிமாவில் யாரும் நண்பர்கள் இல்லை என்ற உண்மையை புரிந்து கொண்டேன்.
நல்லவர்கள் என்று பழகிய அத்தனை பேரும் என்னை படுக்கைக்கு அழைத்தனர். இதனால் சற்று அதிருப்தி அடைந்தேன். எத்தனையோ நடிகைகள் பிகினி அணியும்போது, என்னை மட்டும் ஆபாச நடிகை என்று முத்திரை குத்த தொடங்கினர். பிரபல நடிகர் ஒருவர் என்னை காதலித்து ஏமாற்றியது உண்மைதான். ஆனால் அதைப் பற்றி எல்லாம் நான் அதிகம் பேச விரும்பவில்லை'' என்றார்.
- லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் ‘லியோ’.
- இப்படத்தில் திரைப்பிரபலங்கள் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து நடிகர்கள் சஞ்சய் தத் மற்றும் அர்ஜூன் கதாபாத்திரத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டது.
இந்நிலையில், இப்படத்தில் இணைந்துள்ள பிரபலம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'லியோ' திரைப்படத்தில் நடிகை கிரண் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இதனை அவர் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தெரிவித்தார். இதனால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
- நடிகை கிரண் தமிழில் பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
- இவர் அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார்.
'ஜெமினி' படத்தின் மூலமாக தமிழ் திரையுலகிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் கிரண். அதனை தொடர்ந்து அஜித்துடன் 'வில்லன்', பிரஷாந்துடன் 'வின்னர்', கமல்ஹாசனுடன் 'அன்பே சிவம்', எஸ்ஜே சூர்யாவின் 'நியூ' உள்ளிட்ட படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து அனைவரையும் கவர்ந்தார். விஜய் நடிப்பில் வெளியான திருமலை படத்தில் வாடி எம்மா ஜக்கம்மா என்ற பாடலுக்கு நடனமாடி ரசிகர்களை கவர்ந்தார்.
அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டு ரசிகர்களை வியக்க வைக்கிறார். அந்த வகையில் அன்பே சிவம் படத்தில் கமலுடன் ரொமான்ஸ் செய்யும் காட்சிகளை பதிவு செய்து இருந்தார். அடுத்ததாக கோவா சென்று பாரில் இருந்த கிரண் அங்கு எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தினார். தற்போது மும்பை சென்று பிரபலமான ஆலிவர் பாரில் இருந்தபடி போஸ் கொடுத்து புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இதற்கு இணையத்தில் ரசிகர்கள் பாரில் காலத்தை கழித்து வருகிறார் என பல்வேறு கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.
- தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை கிரண்.
- இவர் தற்போது பதிவிட்டிருக்கும் கவர்ச்சி புகைப்படத்திற்கு பல்வேறு விதமான கமென்டுகளை ரசிகர்கள் குவித்து வருகின்றனர்.
'ஜெமினி' படத்தின் மூலமாக தமிழ் திரையுலகிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் கிரண். அதனை தொடர்ந்து அஜித்துடன் 'வில்லன்', பிரஷாந்துடன் 'வின்னர்', கமல்ஹாசனுடன் 'அன்பே சிவம்', எஸ்ஜே சூர்யாவின் 'நியூ' உள்ளிட்ட படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து அனைவரையும் கவர்ந்தார். விஜய் நடிப்பில் வெளியான திருமலை படத்தில் வாடி எம்மா ஜக்கம்மா என்ற பாடலுக்கு நடனமாடி ரசிகர்களை கவர்ந்தார்.
அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வரும் கிரண், தற்போது புதிய கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். உள்ளாடை அணியாமல் சட்டை பட்டனை கழற்றி விட்டு படு கவர்ச்சியாக அந்த புகைப்படம் உள்ளது. இந்த கவர்ச்சி புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து பல்வேறு விதமாக கமென்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.
Be a stiletto in a room of flats 😋 ✨️ 😌.... pic.twitter.com/mMq8FUg4kq
— Kiran Rathod (@KiranRathodApp) August 22, 2022