என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Korea Open"
- கொரியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் தென் கொரியாவில் நடைபெறுகிறது.
- அரையிறுதியில் இந்திய வீரர் கிரண் ஜார்ஜ் தோல்வி அடைந்தார்.
சியோல்:
தென் கொரியாவில் சூப்பர் 300 அந்தஸ்து பெற்ற கொரியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் நடைபெறுகிறது.
இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரைறுதிச் சுற்றில் இந்தியாவின் கிரண் ஜார்ஜ், தாய்லாந்து வீரருடன் மோதினார்.
இதில் கிரண் ஜார்ஜ் 12-21, 20-22 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
- கொரியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் தென் கொரியாவில் நடைபெறுகிறது.
- இதில் இந்திய வீரர் கிரண் ஜார்ஜ் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
சியோல்:
தென் கொரியாவில் சூப்பர் 300 அந்தஸ்து பெற்ற கொரியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் நடைபெறுகிறது.
இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் இந்தியாவின் கிரண் ஜார்ஜ், ஜப்பானின் டகுமா ஒபயாஷி உடன் மோதினார்.
இதில் கிரண் ஜார்ஜ் 21-14, 21-16 என்ற செட் கணக்கில் வென்றார்.
இந்த வெற்றியின் மூலம் அரையிறுதிக்குள் நுழைந்த கிரண் ஜார்ஜ் தாய்லாந்து வீரருடன் மோதுகிறார்.
- கொரியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் தென் கொரியாவில் நடைபெறுகிறது.
- இதில் இந்திய வீரர் கிரண் ஜார்ஜ் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.
சியோல்:
தென் கொரியாவில் சூப்பர் 300 அந்தஸ்து பெற்ற கொரியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் நடைபெறுகிறது.
இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் கிரண் ஜார்ஜ், சீன தைபே வீரர் சி.யு.ஜென் மோதினர்.
முதல் செட்டை 21-17 என கைப்பற்றிய கிரண் ஜார்ஜ், இரண்டாவது செட்டை 19-21 என போராடி இழந்தார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை இவர் 21-17 என தன்வசப்படுத்தினார்.
இந்தப் போட்டி சுமார் ஒரு மணி நேரம் 15 நிமிடம் நீடித்தது.
இந்த வெற்றியின் மூலம் காலிறுதிக்குள் நுழைந்த கிரண் ஜார்ஜ் ஜப்பானின் டகுமா ஒபயாஷி உடன் மோதுகிறார்.
- தென் கொரியாவின் சியோலில் கொரிய ஓபன் பேட்மிண்டன் தொடர் நடந்து வருகிறது.
- இதன் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்திய வீராங்கனைகள் தோல்வி அடைந்தனர்.
சியோல்:
தென் கொரியாவின் சியோல் நகரில் கொரிய ஓபன் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது.
இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் ஆகர்ஷி காஷ்யப், டென்மார்க் வீராங்கனை லைன் கிறிஸ்டோபெர்சன் உடன் மோதினார். இதில் காஷ்யப் 15-21, 15-21 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வி அடைந்தார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் மால்விகா பன்சோத், டென்மார்க் வீராங்கனை லைன் ஜேயர்ஸ்பீல்டிடம் 21-18, 15-21, 17-21 என்ற புள்ளிக் கணக்கில் தோல்வி அடைந்தார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் அஷ்மிதா சாலிஹா, தாய்லாந்து வீராங்கனை சோசு வாங்கிடம் 8-21, 13-21 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வி அடைந்தார்.
ஏற்கனவே பெண்கள் இரட்டையர் பிரிவிலும் இந்திய ஜோடி முதல் சுற்றில் வெளியேறியுள்ளது.
- தென் கொரியாவின் சியோலில் கொரிய ஓபன் பேட்மிண்டன் தொடர் நடந்து வருகிறது.
- இதன் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்திய ஜோடி தோல்வி அடைந்தது.
சியோல்:
தென் கொரியாவின் சியோல் நகரில் கொரிய ஓபன் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது.
இதில் பெண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் ருதுபர்னா-ஸ்வேதாபர்னா ஜோடி, சீன-தைபேவின் ஹை பெய் ஷா-ஹங் என் சு ஜோடியுடன் மோதியது.
இதில் இந்திய ஜோடி 18-21, 5-21 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது. இந்தப் போட்டி சுமார் 37 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.
நாளை நடைபெற உள்ள பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஆகர்ஷி காஷ்யப், மால்விகா பன்சோத் மற்றும் அஷ்மிதா சாலிஹா விளையாட உள்ளனர்.
- அரையிறுதி ஆட்டத்தில் சீனாவின் லியாங் வெய் கெங்- வாங் சாங் ஜோடியை வென்றனர்.
- சாத்விக்-சிராக் ஜோடி இந்த ஆண்டு ஏற்கனவே 2 சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளது.
கொரிய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி, தென்கொரியாவின் யோசு நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி தொடர்ந்து சிறப்பான வெளிப்படுத்தியது.
காலிறுதி ஆட்டத்தில் ஜப்பான் ஜோடியை வீழ்த்திய இவர்கள், அரையிறுதி ஆட்டத்தில் சீனாவின் லியாங் வெய் கெங்- வாங் சாங் ஜோடியை வென்று இறுதிச்சுற்றை உறுதி செய்தனர்.
இந்நிலையில் ஆடவர் இரட்டையர் பிரிவில் சாம்பியன் கோப்பைக்கான இறுதிப்போட்டி இன்று நடந்தது. இதில், சாத்விக்-சிராஜ் ஜோடி இந்தோனேசியாவின் ஆல்பியன் ஆர்டியாண்டோ ஜோடியை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில், சாத்விக்-சிராஜ் ஜோடி 17-21, 21-23, 21-14 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்று, முதல் முறையாக கொரிய ஓபன் சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.
சாத்விக்-சிராக் ஜோடி கடந்த மாதம் இந்தோனேசிய ஓபனிலும், கடந்த மார்ச் மாதம் சுவிஸ் ஓபனிலும் சாம்பியன் பட்டங்களை வென்றது குறிப்பிடத்தக்கது.
- சீன ஜோடியிடம் இதற்கு முன்பு இரண்டு போட்டிகளில் அடுத்தடுத்து தோல்வியடைந்தனர்.
- சாத்விக்-சிராக் ஜோடி இந்த ஆண்டு இரண்டு சர்வதேச பட்டங்களை வென்றுள்ளது.
கொரிய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி, தென்கொரியாவின் யோசு நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவிவில் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. நேற்று நடந்த காலிறுதி ஆட்டத்தில் ஜப்பான் ஜோடியை வீழ்த்திய இவர்கள், இன்று அரையிறுதி ஆட்டத்தில் சீனாவின் லியாங் வெய் கெங்- வாங் சாங் ஜோடியை எதிர்கொண்டனர்.
விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தின் துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சாத்விக்-சிராக் ஜோடி 21-15, 24-22 என்ற நேர்செட்களில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினர். சீன ஜோடியிடம் இதற்கு முன்பு இரண்டு போட்டிகளில் அடுத்தடுத்து தோல்வியடைந்த நிலையில் முதல் முறையாக இன்று வெற்றி பெற்றுள்ளனர்.
சாத்விக்-சிராக் ஜோடி இந்த ஆண்டு இந்தோனேசிய சூப்பர் 1000 மற்றும் சுவிஸ் ஓபன் சூப்பர் 500 என இரண்டு சர்வதேச பட்டங்களை வென்றது குறிப்பிடத்தக்கது.
- கொரியா ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி யோசு நகரில் நடந்து வருகிறது.
- ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஷெட்டி ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியது.
யோசு:
கொரியா ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி யோசு நகரில் நடந்து வருகிறது.
இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் காலிறுதியில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி 21-14, 21-17 என்ற நேர்செட்டில் ஜப்பானின் டகுரோ ஹோகி, யூகோ கொபாயஷி இணையை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
நாளை நடைபெறும் அரையிறுதியில் இந்திய ஜோடி, ஜப்பான் ஜோடியை எதிர்கொள்கிறது.
- ஆண்கள் பிரிவில் இரண்டாவது சுற்றில் இந்திய வீரர் பிரனோய் தோல்வியடைந்தார்.
- ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் முதல் சுற்றிலேயே வெளியேறினார்.
கொரியா ஓபன் பேட்மிண்டன் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் இந்தியாவின் எச்.எஸ்.பிரனோய், ஹாங்காங் வீரர் லீ சிக் யுவுடன் மோதினார். இதில் ஹாங்காங் வீரர் 21-15, 19-21, 21-18 என்ற செட் கணக்கில் பிரனோயை வீழ்த்தினார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் பிரியன்ஷு ரஜாவத், ஜப்பான் வீரர் கோடா நரோகாவுடன் மோதினார். இதில் ஜப்பான் வீரர் 21-14, 18-21, 21-17 என்ற செட் கணக்கில் இந்திய வீரரை வீழ்த்தினார்.
- பெண்கள் பிரிவில் இரண்டாவது சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தோல்வியடைந்தார்.
- ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பிரியன்ஷு ரஜாவத் 2-வது சுற்றில் வெற்றி பெற்றார்.
கொரியா ஓபன் பேட்மிண்டன் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பிரியன்ஷு ரஜாவத், உள்ளூர் வீரர் சோய் ஜி ஹூனை வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார். அவர் 21-15, 21-19 என்ற செட் கணக்கில் வீழ்த்தி
பெண்கள் பிரிவில் இரண்டாவது சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, சீன தைபேயின் பை யூ போவிடம் தோல்வியடைந்தார்.
சிந்து 18-21, 21-10, 13-21 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார். இந்த ஆட்டம் 58 நிமிடங்கள் நடைபெற்றது.
5-ம் நிலை வீராங்கனையான சாய்னா நேவால் முதல் செட்டை 21-15 என எளிதில் கைப்பற்றினார். சாய்னாவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் 3-ம் நிலை வீராங்கனையான ஒகுஹாரா 2-வது செட்டை 21-15 எனக் கைப்பற்றினார்.
வெற்றியை தீர்மானிக்கும் 3-வது செட்டில் இருவரும் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இதனால் மாறிமாறி புள்ளிகள் பெற்றனர். 3-வது செட்டில் ஒரு கட்டத்தில் சாய்னா 16-10 என முன்னிலைப் பெற்றிருந்தார். அதன்பின் 20-16 என முன்னிலை பெற்றிருந்தார்.
ஒரு புள்ளி எடுத்தால் வெற்றி பெற்று விடலாம் என சாய்னா இருந்த நிலையில், ஒகுஹாரா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடர்ச்சியாக 6 புள்ளிகள் பெற்று 22-20 என வெற்றி பெற்றார். கடும் போராட்டத்திற்குப் பிறகு சாய்னா தோல்வியடைந்து வெளியேறினார். சாய்னா இந்த தோல்வியின் மூலம் ஒகுஹாராவிற்கு எதிராக தொடர்ந்து மூன்று முறை தோல்வியை சந்தித்துள்ளார்.
இதில் சாய்னா நேவால் 21-11, 21-11 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதி முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். ஆனால் சமீர் வர்மா டென்மார்க் வீரரிடமும், வைஷ்ணவி அமெரிக்கா விராங்கனையிடமும் வீழ்ந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்