search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kovil Vizha"

    • தன்னலம் கருதாது பலனைக் தரும் தன்மை பெற்றது காமதேனு.
    • வாகனங்களுக்குரிய இந்த சிறப்புகள் அனைத்தும் திருவண்ணாமலையில் இருந்தே தோன்றியதாக கூறுகிறார்கள்.

    தன்னலம் கருதாது பலனைக் தரும் தன்மை பெற்றது காமதேனு.

    இறைவியும் தன்னலமின்றிப் பக்தர்களுக்கு அருளும் தன்மை பெற்றுள்ளதால் காமதேனு வாகனம் பயன்படுத்தப்படுகின்றது.

    தீபத் திருவிழாவின் மூன்றாம் நாள் ஸ்ரீ அண்ணாமலையார் சிம்ம வாகனத்தில் வருவதன் உட்பொருள் தற்பெருமையும்,

    சினத்தையும், அகங்காரத்தையும் அடக்கி தன்னடக்கம், சாந்தம், பணிவு, அன்பு, பக்தி முதலிய

    நற்குணங்களைக் கொள்வோர் அருள்மிகு ஸ்ரீ அருணாசலேசுவரர் திருவருளுக்குப் பாத்திரமாவார்கள் என்பதே ஆகும்.

    ஸ்ரீ பராசக்தி அம்பிகை அன்ன வாகனத்தில் வருவது, அன்னபட்சி பாலுடன் கலந்த நீரை நீக்கிப் பாலை மட்டும்

    பருகுவது போல் தீய செயல்களை நீக்கி நற்செயல்களைப் புரிந்து நல்லவற்றையே சிந்தித்து வரும்

    புண்ணிய சீலர்களுக்கு எங்கும் நிறைந்திருக்கும் பராபரியின் (ஸ்ரீ அன்னை பராசக்தி) திருவருள்

    உடனிருந்து துணைபுரியும் என்பதனை உணர்த்த ஸ்ரீஅம்மன் (ஸ்ரீ உண்ணாமலை அம்மன்) அன்ன வாகனத்தின்

    மேல் எழுந்தருளிப் பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றாள்.

    வாகனங்களுக்குரிய இந்த சிறப்புகள் அனைத்தும் திருவண்ணாமலை தலத்தில் இருந்தே தோன்றியதாக சொல்கிறார்கள்.

    அது போல நவராத்திரி உருவான சிறப்பும் திருவண்ணாமலை தலத்துக்கே உண்டு.

    • ராவணன் இறைவனை வணங்கித்தன் குற்றங்களை உணர்ந்து செருக்கடங்கினான்.
    • அந்த நிலையினை உணர்த்துவதாக திருக்கயிலாய வாகனம் அமைகின்றது.

    ராவணன் இறைவனை வணங்கித்தன் குற்றங்களை உணர்ந்து செருக்கடங்கினான்.

    அந்த நிலையினை உணர்த்துவதாக திருக்கயிலாய வாகனம் அமைகின்றது.

    நான் எனது என்னும் செருக்குகளை அகற்றி இறைவனை அடையும் உயரிய சிந்தனையை

    ராவணனுடன் கூடிய திருக்கயிலாய வாகனம் விளக்குகின்றது.

    • அதிகார நந்தியார் மீது எழுந்தருளும் அண்ணாமலையார் மூர்த்தி விருத்தக்கிரம சங்கரமூர்த்திகளாகும்.
    • ஐந்தாவது மூர்த்தியான சண்டிகேஸ்வரர் புலி வாகனத்தில் அமர்ந்து வந்து துணை நிற்கின்றார்.

    இறைவன் அழிக்கும் தொழிலை மேற்கொள்ளும் சங்கார மூர்த்தியாய் இருக்கின்ற நிலையினையும்,

    செய்த பாவங்களுக்கு ஏற்ப மரணத்தை வழங்கும் நிலையினையும் குறிப்பாய் உணர்த்தும் தன்மை உடையதாக

    அதிகார நந்தியும் பூதவாகனமும் விளங்குகின்றன.

    அதிகார நந்தியார் மீது எழுந்தருளும் அண்ணாமலையார் மூர்த்தி விருத்தக்கிரம சங்கரமூர்த்திகளாகும்.

    (விருத்தக்கிரம மூர்த்தி என்பது ஐந்தொழில் செய்யும் இறைவன் ஒன்றாக இணைந்து ஓர் உருவில் காட்சி தருவது ஆகும்).

    எங்கும் நிறைந்திருக்கும் ஸ்ரீ அன்னை பராசக்தி திருவருள் உடனிருந்து துணைபுரியும் என்பதனை உணர்த்த

    ஸ்ரீ உண்ணாமலை அம்மன் அன்ன வாகனத்தின் மேல் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.

    ஐந்தாவது மூர்த்தியான சண்டிகேஸ்வரர் புலி வாகனத்தில் அமர்ந்து வந்து துணை நிற்கின்றார்.

    அருள்தரும் உண்ணாமுலை உடனாகிய அண்ணாமலையார் குதிரை வாகனத்தில் ஏறி வீதி உலா வருகிறார்.

    அருள்தரும் உண்ணாமுலை உடனாகிய அண்ணாமலையார் (ஸ்ரீ பெரியநாயகம்) குதிரை வாகனத்தில் ஏறி வீதி உலா வருகிறார்.

    அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு கால்களையும் ஞான காண்டம், கரும கண்டம் என்னும் காதுகளையும்,

    பரஞானம், அபரஞானம் என்னும் கண்களையும் விதிவிலக்கு என்ற முகத்தையும் வாலையும்.,

    ஆகமங்கள் என்னும் அணிகளையும், மந்திரங்களாகிய சதங்கை, கிண்கிணி, மாலை சிலம்பு என்பவைகளையும்

    பிரணவமாகிய கடிவாளத்தையும், அறுவகைப் புறச்சமயங்களாகிய போர் செய்யும் சேனைகளை வேருடன்

    அழித்ததற்கேற்ற வெற்றியையும், பிரமனது முகங்களாகிய இலாயத்தையும் அண்ட கோடிகளாகிய

    குதிரையின் மேல் ஏறி சிவபிரான் போர் வீரராகத் தொணடர்களுடைய பாசக் கயிறு இற்று வீழும்படி

    எழுந்தருளி வருகிறார் என்ற உண்மையைக் குதிரை வாகனக் காட்சி நமக்கு உணர்த்துகிறது.

    • யானை வல்லமை பொருந்தியது.
    • அது அனைத்து மனமலங்களை மாயைகளை அறுக்கக்கூடியது.

    யானை வல்லமை பொருந்தியது.

    மதம் கொண்ட யானை கண்ணில் தென்படும் அனைத்தையும் அழித்து ஒழிக்கும் தன்மை பெற்றது.

    இறைவனால் தரப்படும் பரஞானம் யானையைப் போன்றது.

    அது அனைத்து மனமலங்களை மாயைகளை அறுக்கக்கூடியது.

    எனவே, பரஞானம் யானையாக உருவகம் செய்யப்படுகிறது.

    பரஞானத்தை அருள்பவன் இறைவன் என்னும் தத்துவத்தை விளக்கவே விழா நாட்களில் யானை வாகனம் பயன்படுத்தப்படுகின்றது.

    • லிங்கத்தின் வடிவம் அண்டத்தின் வடிவமாகும்.
    • இறைவன் அண்டத்தைப் படைத்ததோடு மட்டுமன்றி எல்லாப் பொருள்களிலும் நீக்கமற நிறைந்துள்ளார்.

    லிங்கத்தின் வடிவம் அண்டத்தின் வடிவமாகும்.

    இறைவன் அண்டத்தைப் படைத்ததோடு மட்டுமன்றி எல்லாப் பொருள்களிலும் நீக்கமற நிறைந்து நிற்கிறார்.

    அந்த மூலாதாரத்தை, மூலமுதற்பொருள் தத்துவத்தை நிலை நிறுத்துவது

    லிங்கார வட்டச் சொரூபப் பிரபை வாகனமாகும்.

    • நாக வாகனம் மனிதனின் மூலாதார சக்தியான குண்டலினி சக்தியைக் குறிப்பதாகும்.
    • குண்டலினி சக்தியின் விரிவு மற்றும் ஒடுக்கங்கள் உலகத் தோற்றத்தையும் ஒடுக்கத்தையும் எடுத்துரைக்கின்றன.

    நாக வாகனம் மனிதனின் மூலாதார சக்தியான குண்டலினி சக்தியைக் குறிப்பதாகும்.

    குண்டலினி சக்தியின் விரிவு மற்றும் ஒடுக்கங்கள் உலகத் தோற்றத்தையும் ஒடுக்கத்தையும் எடுத்துரைக்கின்றன.

    குண்டலினி சக்தியானது புருவ மத்தியான சுழுமுமுனையில் இருந்து ஞானம் பெறத் துணை நிற்கும்

    சுழுமுனையை மறைத்துக் கொண்டிருக்கின்றது.

    எனவே சுழுமுனையிலே நிலை கொண்டிருக்கும் ஞானசக்தியானது இறைவனது

    கருணையாலேயே வாய்க்கப் பெற வேண்டும் என்னும் தத்துவத்தை நாகவாகனம் உணர்த்துகிறது.

    • இறைவன் விழாக் காலங்களில் பல்லக்கில் எழுந்தருளும் காட்சி ‘திரோபவக் கோலம்‘ எனப்படுகிறது.
    • தேர்த் திருவிழா இந்துக்களுக்கு ஒரு முக்கியமான திருவிழா ஆகும்.

    இறைவன் விழாக் காலங்களில் பல்லக்கில் எழுந்தருளும் காட்சி 'திரோபவக் கோலம்' எனப்படுகிறது.

    திரோபவம் என்றால் மறைத்தல் என்று பொருள்.

    உயிர்கள் பூமியில் வாழ்கின்ற காலத்தில் அறிந்தோ அறியாமலோ வினைகளை செய்கின்றன.

    இவ்வாறாகப் பிறவி தோறும் அவை செய்த நன்மை தீமைகளின் அடிப்படையில் இறைவன் அருள்புரிகின்றான்.

    மறைப்பு நிலையாக இருந்து இறைவன் அடைவதற்கு அரியவன் என்னும் தத்துவத்தை பல்லக்கு வாகனம் உணர்த்துகின்றது.

    தேர்த் திருவிழா இந்துக்களுக்கு ஒரு முக்கியமான திருவிழா ஆகும்.

    தேரோட்டம் ஏன் திருவிழாக்களில் நடைபெறுகின்றது என்பதனை அறிந்து கொள்ள வேண்டும்.

    இத் திருவிழாவின்போது தேவர்கள் அனைவரும் ஒன்றுகூடி மக்களுக்கு ஆசீர் வழங்க இறைவனின் திருவருள் எனக் கூறலாம்.

    தேர்த் திருவிழா பார்க்கும் ஒவ்வொருவர் மனத்திலும் ஏழுவகைப் பிறப்பையும் மாய மல குணம்

    ஏழும் நீக்கப் பெறுவதில் உட்கருத்தே ஏழாம் திருவிழாவாகும்.

    மேலும் எந்தத் திருக்கோவிலிலும் இல்லாத பஞ்ச மூர்த்திகளின் திருத்தேரோட்டம் ஒரே நாளில்

    நடைபெறுவது இத்திருத்திலத்திற்கு சிறப்பாகும்.

    முப்புரம் ஆணவம், கன்மம், மாயை மூன்று அசுரர்கள் - தாருதாக்கன், கமலாக்கன், வித்யூன்மா,

    மூவகை ஆன்மாக்கள்- விஞ்ஞானாகலர், பிரனாயகலர், சகலர்.

    பரம்பொருளாகிய சிவபெருமானே ஆன்மாக்கட்கு மும்மல பந்த வாதனைகளை நீக்கி

    பேரானந்தப் பெருவாழ்வளிப்பவர் என்ற உட்பொருளைத் தேர்திருவிழா விளக்குகிறது.

    • இடபம் (காளை) தியாகத்தின் வடிவமாகும்.
    • இக்காட்சி கைலாயத்தில் இறைவனைக் காணும் காட்சியாகும்.

    இடபம் (காளை) தியாகத்தின் வடிவமாகும்.

    மனிதன் தன்னலமற்றவனாக, பொது நலம் உடையவனாக வாழ வேண்டும்

    என்னும் தத்துவத்தை உணர்த்துவதாக இடப வாகனம் அமைந்திருக்கின்றது.

    ரிஷப வாகனம் பல மெய்ப்பொருள்களைக் கொண்டது.

    ரிஷபத்தின் தத்துவம் மெய்ஞ்ஞானம் உடைய அனைவரும் இறைவனின் திருப்பாதங்களை அடைய வழி வகுக்கும் வாகனமாகும்.

    ரிஷபத்தின் உருவத்தில் அமைந்திருக்கும் ஒவ்வொரு அவயமும் ஒவ்வொரு தத்துவத்தை விளக்குவதாகும்.

    இக்காட்சி கைலாயத்தில் இறைவனைக் காணும் காட்சியாகும்.

    • இவ்வுலகம் கோள்களின் இயக்கத்தால் ஆகியது.
    • உலகம் முழுவதும் சூரிய, சந்திரனால் நிலைத்துள்ளது என்பதாகும்.

        

    இவ்வுலகம் கோள்களின் இயக்கத்தால் ஆகியது.

    சிவபெருமான் சூரிய சந்திரப்பிரபை வாகனங்களில் எழுந்தருளி அருள் வழங்கும் காட்சி திதிக்கோலம் என்று அழைக்கப்படுகிறது.

    தன்னால் படைக்கப்பட்ட அண்டத்தைத் தானே காத்து வரும் தன்மை உடையவன் என்பதை

    எடுத்துக் காட்டும் கோலமே சூரிய சந்திரப் பிரபை வாகனத்தின் தத்துவமாக அமைகின்றது.

    உலகம் முழுவதும் சூரிய, சந்திரனால் நிலைத்துள்ளது என்பதாகும்.

    திதிக் கோலத்தின் பொருள் என்னவெனில், படைக்கப் பெற்ற அனைத்து உயிர்களையும் இறைவனாகிய பரம்பொருள்

    சூரிய சந்திரகோள்களுக்கு இடையே ஞானம் பெறும் தீச்சுடராக விளங்குவதாலேயே

    பகலும் இரவும், தட்ப வெப்பமும் உண்டாகிறது.

    எந்தவொரு தொழிலையும் செய்யவும், எந்தவொரு பொருளையும் பார்க்கவும் முடிகிறது.

    அதனால் இந்த உலகம் நிலைத்து நிற்கிறது என்பதால் அண்ட சராசரங்களையும்காத்து வருகின்றார்

    என்ற உண்மை விளங்கவே இந்தச் சூரிய சந்திர பிரபை வாகனத்தின் உட்பொருளை நினைவில் கொண்டு

    பரம்பொருளைத் தரிசித்து அருள் பெறுவோம்.

    • கற்பகமரம் கேட்டதைக் கொடுக்கும் தன்மை கொண்டது.
    • படைத்தல், காத்தல், அழித்தல், மீண்டும் படைத்தல் என்னும் தத்துவ நிலையை உள்ளடக்கியது.
     

    கற்பகமரம் கேட்டதைக் கொடுக்கும் தன்மை கொண்டது.

    எனவே உயிரினங்கள் அனைத்திலும் இறைவன் உறைந்து விளங்குவான் என்னும்

    தத்துவத்தை நிலை நிறுத்தவே கற்பகத்தரு வாகனம் வீதி உலாவில் பயன்படுத்தப்படுகின்றது.

    இறைவனிலேயே எல்லாம் தொடக்கமாக அமைத்து அங்கேயே ஒடுங்குவதால், மீண்டும் படைப்புகள்

    உண்டாக்கப்படுவதால் படைத்தல், காத்தல், அழித்தல், மீண்டும் படைத்தல் என்னும் தத்துவ நிலையை

    உள்ளடக்கிய கற்பக விருட்சம் வாகனமாகப் பயன்படுத்தப் படுகின்றது.

    • ஆலயங்களில் நடைபெறும் விழாக்களில் இறைவனின் திருவீதி உலா முக்கியத்துவம் வாய்ந்தது.
    • இறைவன் ஐந்து தொழில்களையும் செய்து வருகிறான்.

    ஆலயங்களில் நடைபெறும் விழாக்களில் இறைவனின் திருவீதி உலா முக்கியத்துவம் வாய்ந்தது.

    உலக மக்களுக்கும், கோவிலுக்கு வர இயலாத முதியோர்கள், நோயாளிகளுக்காகவும் அருள் பாலிப்பதற்காக

    இறைவன் திருவீதி எழுந்தருள்கிறார்.

    அப்படி வீதி உலா வரும் இறைவனுக்காக பல்வேறு வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

    உலக உயிர்களின் நன்மைக்காக இறைவன் ஆற்றிவரும் ஐந்தொழில்களின் தத்துவக் கருத்துக்களை

    உணர்த்தும் நோக்கில் வாகனங்களும் உருவாக்கப்படுகின்றன.

    திருவண்ணாமலை ஆலயத்தில் நடைபெறும் விழாக்களில் கற்பக விருட்சம், சூரிய சந்திரப் பிரபை,

    இடப வாகனம், நாக வாகனம், பல்லக்கு லிங்கார வட்ட சொரூபப் பிரபை, யானை வாகனம், தேர்,

    குதிரை வாகனம், அதிகார நந்தி பூத வாகனம், ராவணனின் திருக்கயிலை வாகனம் முதலியன குறிப்பிடத்தக்கனவாகும்.

    இறைவன் ஐந்து தொழில்களையும் செய்து வருகிறான்.

    அவரை விழாக்காலங்களில் அபிஷேகம் செய்து, அலங்காரம் செய்து சிறப்பு பூஜை செய்து வழிபட்டு முடித்து

    வாகனங்களில் ஏற்றி அவர் அழகை ரசித்து இன்புற்று ஈடு இணையற்ற பேரின்பம் பெற வழிபாடு செய்கிறோம்.

    இதில் தீபத்திருவிழா உள்ளிட்ட உற்சவ நாட்களில் பத்து நாட்களும் அண்ணாமலையார்

    வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி நமக்கு அருள்பாலிக்கின்றார்.

    அவ்வாகனங்களின் உட்பொருள் என்ன என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்

    ×