என் மலர்
நீங்கள் தேடியது "Kristi Noem"
- தனது குடும்பப் பண்ணையில் கிரிக்கெட் என்று பெயரிடப்பட்ட 14 மாத நாய், மூர்க்கத்தனமாக நடந்து கொண்டது.
- தனது நாயைக் கொன்றதைப் போலவே ஆட்டையும் கொல்ல முடிவு செய்ததாக கூறியுள்ளார்.
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் மாதம் நடக்கிறது. இதில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார். அக்கட்சி சார்பில் துணை அதிபர் பதவிக்கு தெற்கு டகோட்டா மாகாண பெண் கவர்னர் கிறிஸ்டி நோம் போட்டியிட முயற்சித்து வருகிறார்.
இந்த நிலையில் கிறிஸ்டி நோம், தனது வளர்ப்பு நாய் மற்றும் ஆட்டை கொன்றதாக அவர் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தனது குடும்பப் பண்ணையில் கிரிக்கெட் என்று பெயரிடப்பட்ட 14 மாத நாய், மூர்க்கத்தனமாக நடந்து கொண்டது. அதை தொடர்பு கொண்ட எவருக்கும் ஆபத்தானதாக இருந்தது. இதனால் அந்த நாயை சுட்டுக்கொன்றேன் என்று கூறியுள்ளார்.
தனது நாயைக் கொன்றதைப் போலவே ஆட்டையும் கொல்ல முடிவு செய்ததாக கூறியுள்ளார். அந்த ஆடு வெறித்தனமாக குழந்தைகளை துரத்தி அவர்களை இடித்து தள்ளி ஆடைகளை கிழித்தது என்று தெரிவித்து உள்ளார். இதற்கு கிறிஸ்டி நோமுக்கு விலங்குகள் நல அமைப்பான பீட்டா கண்டனம் தெரிவித்துள்ளது.