என் மலர்
நீங்கள் தேடியது "kriti sanon"
- இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஆதிபுருஷ்' .
- இந்த திரைப்படம் ஜுன் 16-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் இராமாயண கதையை மையமாக வைத்து தயாராகியுள்ள திரைப்படம் 'ஆதிபுருஷ்' . இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சயீப் அலிகான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தை டி சீரிஸ் மற்றும் ரெட்ரோ பைல்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது.

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் ஜுன் 16-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்த நிலையில் இணையத்தில் கீர்த்தி சனோன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட புகைப்படங்கள் வெளியாகியிருக்கிறது. இது மிகவும் கவர்ச்சியாக இருப்பதால் ரசிகர்கள் கீர்த்தி சனோன் சீதையாக நடிப்பதற்கு தகுதியானவர் இல்லை என்று குரல் கொடுத்து வருகிறார்கள்.

இது பல நிகழ்ச்சிகளில் அவர் யதார்த்தமாக கலந்து கொண்டது. அதற்கு இப்படி ஒரு எதிர்ப்பு கிளம்பியுள்ளதால் கீர்த்தியை விட படக்குழு இன்னும் அதிர்ச்சியடைந்திருக்கிறது. இதற்கு முன் வந்த எதிர்ப்புகளை சமாளித்து ரூ.100 கோடி கூடுதலாக செலவு செய்து ரிலீஸ் செய்யும் நேரத்தில் இப்படி ஒரு சிக்கல் வரும் என்று படக்குழு எதிர்பார்த்திருக்காது என்று பலரும் தெரிவித்து வருகின்றனர்.
- இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஆதிபுருஷ்'.
- இப்படம் வருகிற 16-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் இராமாயண கதையை மையமாக வைத்து தயாராகி வரும் திரைப்படம் 'ஆதிபுருஷ்' . இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சயீப் அலிகான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தை டி சீரிஸ் மற்றும் ரெட்ரோ பைல்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர்.

ஆதிபுருஷ்
'ஆதிபுருஷ்' திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் வருகிற 16-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து 'ஆதிபுருஷ்' படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் திரையரங்கின் ஒரு இருக்கையை ஆஞ்சநேயருக்காக காலியாக விட போவதாகவும் அந்த டிக்கெட் விற்கப்படாது எனவும் படக்குழு நூதன அறிவிப்பை வெளியிட்டது. இதையடுத்து இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

கீர்த்தி சனோனை கட்டிப்பிடித்து முத்தமிட்ட இயக்குனர் ஓம் ராவத்
இந்நிலையில், நடிகை கீர்த்தி சனோன், இயக்குனர் ஓம் ராவத் மற்றும் 'ஆதிபுருஷ்' படக்குழுவினர் இன்று திருப்பதியில் சாமி தரிசனம் செய்தனர். இவர்களுக்கு கோவில் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. 'ஆதிபுருஷ்' திரைப்படம் வெற்றிபெற வேண்டி அவர்கள் பிரார்த்தனை செய்தனர். இதையடுத்து வெளியே வந்த படக்குழுவினர் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். பின்னர் காரில் கிளம்ப சென்ற நடிகை கீர்த்தி சனோனை ஓம் ராவத் கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தமிட்டு தனது அன்பு வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டார். இயக்குனர் ஓம் ராவத்தின் இந்த செயல் சமூக வலைதளத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
- பிரபாஸ் நடித்துள்ள 'ஆதிபுருஷ்’ படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
- இதையடுத்து நடிகை கீர்த்தி சனோன், இயக்குனர் ஓம் ராவத் மற்றும் 'ஆதிபுருஷ்' படக்குழுவினர் இன்று திருப்பதியில் சாமி தரிசனம் செய்தனர்.
இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் இராமாயண கதையை மையமாக வைத்து தயாராகி வரும் திரைப்படம் 'ஆதிபுருஷ்' . இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சயீப் அலிகான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தை டி சீரிஸ் மற்றும் ரெட்ரோ பைல்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர்.

ஆதிபுருஷ்
'ஆதிபுருஷ்' திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் வருகிற 16-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து 'ஆதிபுருஷ்' படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் திரையரங்கின் ஒரு இருக்கையை ஆஞ்சநேயருக்காக காலியாக விட போவதாகவும் அந்த டிக்கெட் விற்கப்படாது எனவும் படக்குழு நூதன அறிவிப்பை வெளியிட்டது. இதையடுத்து இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

ஓம் ராவத் -கீர்த்தி சனோன்
இதையடுத்து நடிகை கீர்த்தி சனோன், இயக்குனர் ஓம் ராவத் மற்றும் 'ஆதிபுருஷ்' படக்குழுவினர் இன்று திருப்பதியில் சாமி தரிசனம் செய்தனர். அப்போது தரிசனத்தை முடித்துவிட்டு காரில் கிளம்ப சென்ற நடிகை கீர்த்தி சனோனை ஓம் ராவத் கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தமிட்டு தனது அன்பு வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டார். கோவிலின் முன் இயக்குனர் ஓம் ராவத் இவ்வாறு செய்தது சமூக வலைதளத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

ஓம் ராவத் -கீர்த்தி சனோன்
இந்நிலையில், திருப்பதி கோவிலில் வைத்து நடிகை கீர்த்தி சனோனை ஓம் ராவத் முத்தமிட்டதற்கு ஆந்திர மாநில பாஜக கண்டனம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கோவிலுக்கு வந்தவர்கள் அதன் புனிதத்தை காக்க வேண்டும். உடனடியாக இருவரும் மன்னிப்பு கேட்க வேண்டும் என பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் பேட்டியளித்துள்ளாதாக தகவல் வெளியாகியுள்ளது.
- பிரபல பாலிவுட் இயக்குனர் ஆனந்த் எல் ராய்யின் புதிய படத்தில் தனுஷ் இணைந்துள்ளார்.
- இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.
தனுஷ் இயக்கி நடித்த ராயன் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இதைத்தொடர்ந்து நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் மற்றும் இட்லி கடை திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
இதையடுத்து 'ராஞ்சனா' மற்றும் 'அட்ராங்கி ரே' போன்ற படங்களை இயக்கிய பிரபல பாலிவுட் இயக்குனர் ஆனந்த் எல் ராய்யின் புதிய படத்தில் தனுஷ் இணைந்துள்ளார்.
கலர் எல்லோ புரொடக்ஷன் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இந்த படத்திற்கு "தேரே இஸ்க் மேன்" (Tere Ishk Mein) என படக்குழு தலைப்பு வைத்துள்ளது.
இப்படத்தின் முக்கிய அப்டேட்டை படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ளது. படத்தின் நாயகியாக இந்தி நடிகை கிருத்தி சனோன் இணைந்துள்ளார். திரைப்படம் வரும் நவம்பர் 28 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இது குறித்து படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் கிருத்தி சனோன் நீ காதலித்தால் நானும் காதலிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்ற வரிகளில் தொடங்குகிறது அந்த வீடியோ அதன் பின் பெட்ரோலை அவள் மேல் ஊற்றிக் கொண்டு சிக்ரெட் எடுத்து பற்ற வைக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது. திரைப்படத்தில் கிருத்தி சனோன் முக்தி என்ற கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.