search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "KSCA Navule Stadium"

    • கூச் பெஹர் கோப்பை கிரிக்கெட் போட்டி ஆண்டுதோறும் நடைபெறுகிறது
    • பிரகார் தனது ரன் குவிப்பில் 46 ஃபோர்களும், 3 சிக்ஸர்களும் அடித்தார்

    கர்நாடகா மாநில ஷிவமோகா நகரில், கேஎஸ்சிஏ நவுலே மைதானத்தில் (KSCA Navule Stadium) 19 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

    ஆண்டுதோறும் நடைபெறும் கூச் பெஹர் கோப்பை (Cooch Behar Trophy) எனும் இப்போட்டியின் இறுதி ஆட்டத்தில் கர்நாடகா அணியும் மும்பை அணியும் மோதின.

    கர்நாடகாவின் முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தில், இளம் பேட்டிங் வீரர், பிரகார் சதுர்வேதி (Prakhar Chaturvedi) சிறப்பாக விளையாடினார்.

    தொடக்க பேட்ஸ்மேனாக களம் இறங்கிய பிரகார், 404 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் புதிய சாதனையை படைத்தார்.

    பிரகார் 638 பந்துகளில் தனது அதிரடி பேட்டிங்கால் 46 ஃபோர்கள், 3 சிக்ஸர்கள் அடித்தார்.

    இதன் மூலம், ஒரு போட்டி தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் 24 வருடங்களுக்கு முன் புரிந்திருந்த சாதனையான 358 ரன்களை கடந்து பிரகார் சதுர்வேதி புது சாதனையை புரிந்தார்.


    தனது சிறப்பான ஆட்டத்தினால் ரஞ்சி கோப்பையில் இடம் பெறும் வாய்ப்புக்கு பிரகார் தகுதி பெற்றவராகிறார்.

    பிரகார் சதுர்வேதியின் தந்தை பெங்களூரூவில் மென்பொருள் பொறியாளராக பணி புரிகிறார். பிரகாரின் தாய், ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகத்தில் (DRDO) விஞ்ஞானியாக பணி புரிகிறார்.

    இரண்டாவது நாள் ஆட்டத்தில் மும்பை அணி 380 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

    தொடர்ந்து ஆடிய கர்நாடகா, 223 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து, 890 ரன்கள் குவித்து முதல் இன்னிங்க்ஸ் ரன்கள் (510) அடிப்படையில் வெற்றி பெற்றது.


    ×