search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "KSRTC"

    • கியர் மற்றும் கியர் இல்லாத இரு சக்கர வாகன பயிற்சி வகுப்புகளுக்கும் ஒரே விகிதத்தில் கட்டணம்.
    • தனியார் பயிற்சி பள்ளிகளுடன் ஒப்பிடும்போது 40 சதவீதம் வரை தள்ளுபடி.

    தனியார் பயிற்சி பள்ளிகளை காட்டிலும் நியாயமான கட்டணத்தில் ஓட்டுநர் பயிற்சி வழங்குவதை நோக்கமாகக் கொண்ட கேரள மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்தின் (கேஎஸ்ஆர்டிசி) மாநில அளவிலான திட்டமான ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளை முதல்வர் பினராயி விஜயன் தொடங்கி வைத்தார்.

    விழாவில் போக்குவரத்து துறை அமைச்சர் கேபி கணேஷ்குமார், கஜக்கூட்டம் எம்எல்ஏ கடகம்பள்ளி சுரேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    கேஎஸ்ஆர்டிசியின் ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள் குறைந்த கட்டணத்தில் ஓட்டுநர் பயிற்சிகளை வழங்குகிறது. இலகுரக மோட்டார் வாகனம் (எல்எம்வி) மற்றும் கனரக மோட்டார் வாகனம் (எச்எம்வி) உரிமம் பெற ஆர்வமுள்ளவர்கள் தலா ரூ.9,000க்கும், இருசக்கர வாகனப் பயிற்சி ரூ.3,500க்கும் பயிற்சி பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    கியர் மற்றும் கியர் இல்லாத இரு சக்கர வாகன பயிற்சி வகுப்புகளுக்கும் ஒரே விகிதத்தில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    கார் மற்றும் இருசக்கர வாகனப் பயிற்சி ஆகிய இரண்டையும் உள்ளடக்கிய காம்போ கட்டணமாக ரூ.11,000க்கு பயிற்சி பெறும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த முயற்சி தனியார் பயிற்சி பள்ளிகளுடன் ஒப்பிடும்போது 40 சதவீதம் வரை தள்ளுபடியை வழங்குகிறது.

    கனரக மோட்டார் வாகனம் பயிற்சிக்கு பொதுவாக ரூ. 15,000, இலகுரக மோட்டார் வாகனம் ஓட்டுவதற்கு ரூ. 12,000 முதல் ரூ. 14,000 வரை, தனியார் ஓட்டுநர் பள்ளிகளில் இருசக்கர வாகனப் பயிற்சிக்கு ரூ.6,000 செலவாகும்.

    இதற்கிடையில், டிரைவிங் ஸ்கூல் துறையில் கே.எஸ்.ஆர்.டி.சி.யின் நுழைவு ஓட்டுநர் தேர்வு சீர்திருத்தங்கள் குறித்து ஓட்டுநர் பள்ளி உரிமையாளர்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையே விவாதத்தைத் தூண்டியுள்ளது.

    மாநிலம் முழுவதும் ஓட்டுநர் கல்வியின் தரத்தை மேம்படுத்துவது மற்றும் இந்தப் பள்ளிகள் மூலம் தரப்படுத்தப்பட்ட பயிற்சி நடைமுறைகளை உறுதி செய்வதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    • யாராவது பணிக்கு வந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு.
    • ஊழியர்கள் மீது மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது.

    கேரள மாநில போக்குவரத்து துறை அமைச்சர் கணேஷ்குமார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் ஒரு நடவடிக்கையாக மதுபோதையில் யாராவது பணிக்கு வந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்தார்.

    இதன்பேரில் கேரள அரசு போக்குவரத்து துறை, கடந்த 1-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை துறை ஊழியர்களிடம் சோதனை நடத்தியது. அப்போது மது அருந்தியவர்கள், மதுபானம் வைத்திருந்தவர்கள் கண்டறியப்பட்டனர். அவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி 74 நிரந்தர ஊழியர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர். மேலும் 26 தற்காலிக ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த அதிரடி நடவடிக்கை கேரள போக்குவரத்து துறையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், கேரள போக்குவரத்து துறையில் மதுபோதையில் பணியாற்றிய மேலும் 97 ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்துள்ளனர். மேலும், 40 தற்காலிக ஊழியர்களும் பணி நீக்கம் செய்துள்ளனர்.

    கடந்த 14ம் தேதி முதல் போக்குவரத்து ஊழியர்களிடம் பரிசோதனை நடைபெற்று வருகிறது. அதன் நடவடிக்கையாக, மதுபோதையில் பணியாற்றிய ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கேரள அரசு போக்குவரத்து துறை, கடந்த 1-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை துறை ஊழியர்களிடம் சோதனை நடத்தியது.
    • அதிரடி நடவடிக்கை கேரள போக்குவரத்து துறையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநில போக்குவரத்து துறை அமைச்சர் கணேஷ்குமார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் ஒரு நடவடிக்கையாக மதுபோதையில் யாராவது பணிக்கு வந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்தார்.

    இதன்பேரில் கேரள அரசு போக்குவரத்து துறை, கடந்த 1-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை துறை ஊழியர்களிடம் சோதனை நடத்தியது. அப்போது மது அருந்தியவர்கள், மதுபானம் வைத்திருந்தவர்கள் கண்டறியப்பட்டனர். அவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி 74 நிரந்தர ஊழியர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர். மேலும் 26 தற்காலிக ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த அதிரடி நடவடிக்கை கேரள போக்குவரத்து துறையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சபரிமலை சீசன் காலத்தில் கேரள அரசு போக்குவரத்து கழகத்திற்கு ரூ.45 கோடியே 2 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டுகளை விட 3 மடங்கு உயர்வு ஆகும். #Sabarimala #KSRTC
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் உள்ள பிரசித்திப் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலை திருவிதாங்கூர் தேவசம் போர்டு நிர்வகித்து வருகிறது.

    சபரிமலை கோவிலில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் மண்டல பூஜை தொடங்கும். ஜனவரி மாதம் மகரவிளக்கு திருவிழா நடைபெறும். இந்த இரண்டு விழாக்களிலும் கலந்து கொள்ள நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலை வருவார்கள்.

    சபரிமலைக்கு வரும் பக்தர்களால் கேரள அரசுக்கு கணிசமான வருவாய் கிடைக்கும். உண்டியல் வருவாய், அப்பம்-அரவணை விற்பனை, போக்குவரத்து கழகம் ஆகியவை மூலம் இந்த வருமானம் கிடைக்கும்.

    இந்த ஆண்டு சபரிமலையில் ஐயப்ப பக்தர்கள் போராட்டம் நடத்தியதால் திருவிதாங்கூர் தேவசம் போர்டு நிர்வாகத்திற்கு வருவாய் குறைவு ஏற்பட்டது. கடந்த ஆண்டு சபரிமலை வருவாய் ரூ.263 கோடியே 78 லட்சமாக இருந்தது.

    இந்த ஆண்டு இது ரூ.168 கோடியே 12 லட்சமாக குறைந்தது. இது கடந்த ஆண்டை விட ரூ.95 கோடியே 66 லட்சம் குறைவாகும்.

    கோவிலின் வருவாய் குறைந்தாலும் இம்முறை கேரள அரசின் போக்குவரத்துக்கழகம் கணிசமான லாபத்தை ஈட்டி உள்ளது. இம்முறை போராட்டம் மற்றும் போலீஸ் கெடுபிடி காரணமாக பக்தர்கள் நிலக்கலில் இருந்து பம்பைக்கு அரசு பஸ்சில்தான் செல்ல வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

    இதனால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் அனைவரும் நிலக்கல்லில் இருந்து கேரள அரசு பஸ்கள் மூலமே பம்பை சென்று சபரிமலை கோவிலுக்கு சென்று வந்தனர்.

    இதற்காக கேரள அரசு நிலக்கல்லில் இருந்து பம்பைக்கு தினமும் 99 குளிர் சாதன வசதி இல்லாத பஸ்களையும், 44 குளிர் சாதன வசதி கொண்ட பஸ்களையும் இயக்கியது. இது தவிர 10 மின்சார கார்களும் பயணிகளை ஏற்றிச் சென்றது.

    இதன் மூலம் சபரிமலை சீசன் காலத்தில் மட்டும் கேரள அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு ரூ.45 கோடியே 2 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது.

    இதுபற்றி கேரள அரசின் போக்குவரத்துக்கழக நிர்வாக இயக்குனர் டோமின் தச்சங்கிரி கூறியதாவது:-

    கேரள அரசு போக்குவரத்துக்கழகம் நிலக்கல்-பம்பை இடையே நடத்திய போக்குவரத்து மூலம் மட்டும் ரூ.31 கோடியே 2 லட்சம் வருவாய் ஈட்டியது. மற்ற பகுதிகளுக்கு பஸ்களை இயக்கியதன் மூலம் ரூ.14 கோடி வருவாய் கிடைத்தது.

    கடந்த ஆண்டுகளில் சபரிமலை சீசன் காலத்தில் மட்டும் கேரள அரசு போக்குவரத்துக்கழகத்திற்கு ரூ.15.2 கோடி வருவாய் கிடைத்திருந்தது. இந்த ஆண்டு இது 3 மடங்காக உயர்ந்து ரூ.45 கோடியே 2 லட்சம் கிடைத்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #Sabarimala #KSRTC

    சபரிமலைக்கு பெண்கள் சென்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் இன்று இந்து அமைப்புகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. 60க்கும் மேற்பட்ட அரசுப் பேருந்துகள் உடைக்கப்பட்டன. #KeralaShutdown #SabarimalaHartal
    சபரிமலை:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் இதுவரை இல்லாத வகையில் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களையும் அனுமதிக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டங்கள் நடைபெறுகின்றன.

    உச்ச நீதிமன்ற உத்தரவிற்குப் பின்னர் கோவில் நடை திறக்கப்பட்டபோது, 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் பலர், சபரிமலைக்கு செல்வதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், பக்தர்களின் கடும் எதிர்ப்பு போராட்டங்கள் காரணமாக அவர்களால் செல்ல முடியவில்லை.

    இந்நிலையில், நேற்று அதிகாலை கேரளாவைச் சேர்ந்த 50 வயதுக்குட்பட்ட இரண்டு பெண்கள் போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலைக்கு சென்று ஐயப்பனை தரிசனம் செய்து பரபரப்பை ஏற்படுத்தினர்.

    சபரிமலைக்கு பெண்கள் சென்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது. திருவனந்தபுரத்தில் நடந்த போராட்டத்தின்போது பாஜகவினருக்கும், போலீசாருக்குமிடையே மோதல் ஏற்பட்டது. கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்த சபரிமலை கர்ம சமிதி அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. இதற்கு ஆர்எஸ்எஸ், பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. பெண்களை தரிசனம் செய்ய அனுமதித்ததைக் கண்டித்து, காங்கிரஸ் சார்பில் இன்று கருப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது.



    முழு அடைப்பு போராட்டம் காரணமாக பல்வேறு பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. முக்கிய சாலைகள் வாகன நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. பத்தனம்திட்டா பகுதியில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஆங்காங்கே வன்முறைச் சம்பவங்கள் நடைபெறுகின்றன. முழு அடைப்புக்கு ஆதரவு அளிக்காமல் பேருந்துகளை இயக்கியதால் போராட்டக்காரர்கள் கடும் ஆத்திரம் அடைந்தனர். பல்வேறு பகுதிகளில் அரசுப் பேருந்துகள் மீது கற்களை வீசி போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினர்.

    60க்கும் மேற்பட்ட பேருந்துகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்து, மாநிலம் முழுவதும் பேருந்து சேவையை நிறுத்தி வைப்பதாக அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்தது. போராட்டக்காரர்களின் வன்முறையை கட்டுப்படுத்த போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். #KeralaShutdown #SabarimalaHartal
    ×