என் மலர்
நீங்கள் தேடியது "kumbhmela"
- மௌனி அமாவாசை தினமான இன்று கும்பமேளாவில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
- இதையடுத்து, பத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
லக்னோ:
மௌனி அமாவாசை தினமான இன்று மகா கும்பமேளாவில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதை அடுத்து, பத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
கும்பமேளாவில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சமாஜ்வாடி தலைவரும், முன்னாள் முதல் மந்திரியுமான அகிலேஷ் யாதவ், கும்பமேளாவில் உயிரிழந்த பக்தர்கள் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அகிலேஷ் யாதவ் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியதாவது:
மகா கும்பமேளாவிற்கு வந்திருக்கும் துறவிகள் மற்றும் பக்தர்கள் மத்தியில் கும்பமேளா நிர்வாக அமைப்பின் மீது நம்பிக்கையை மீண்டும் நிலைநாட்ட, கும்பமேளா நிர்வாகத்தை உ.பி அரசிடம் ஒப்படைக்காமல் ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.
உலகத்தரம் வாய்ந்த ஏற்பாடுகளைச் செய்வதாகக் கூறப்படும் உண்மைகள் தற்போது அனைவர் முன்னிலையில் வெளிவந்துள்ளன. இதுபற்றி பொய்ப் பிரசாரம் செய்பவர்கள், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தார்மீகப் பொறுப்பேற்று பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
மகா கும்பாபிஷேகத்தின் தவறான நிர்வாகத்தால் ஏற்பட்ட விபத்தில் பக்தர்கள் உயிரிழந்த செய்தி மிகவும் வருத்தம் அளிக்கிறது. காயம் அடைந்தவர்களை ஆதரிப்பதற்கும், மேலும் குழப்பத்தைத் தடுக்கவும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு உத்தரப் பிரதேச அரசை கேட்டுக் கொள்கிறேன்.
படுகாயம் அடைந்தவர்களைக் கொண்டு செல்வதற்கு ஏர் ஆம்புலன்ஸ்கள் அனுப்பப்பட வேண்டும். இறந்தவர்களை அடையாளம் கண்டு அவர்களின் உடல்களை அவர்களது குடும்பங்களுக்குத் திருப்பித் தருவதற்கு விரைவான ஏற்பாடுகள் செய்யவேண்டும்.
இந்த இக்கட்டான நேரத்தில் பக்தர்கள் பொறுமையாகவும் அமைதியாகவும் இருக்கவேண்டும். பக்தர்களின் எதிர்கால ஏற்பாடுகளை மேம்படுத்த இந்தச் சம்பவத்திலிருந்து பாடம் கற்றுக் கொள்ளும்படி மாநில அரசை கேட்டுக் கொண்டார்.
உத்தரப்பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் கடந்த பிப்ரவரி 24ம் தேதி புனித நீராட பிரதமர் மோடி சென்றார். அங்கு பணிபுரிந்த துப்புரவு தொழிலாளிகளின் கால்களை கழுவி மரியாதை செலுத்தினார்.

இந்நிலையில் ஆந்திர முதல் மந்திரியும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு இது குறித்து கூறியதாவது:-
துப்புரவு தொழிலாளர்கள் 4 ஆண்டுகளாக சேவை செய்து வருகின்றனர். ஒரு முறை கூட மோடி இவ்வாறு செய்யவில்லை. தற்போது தேர்தலை நினைவில் கொண்டு துப்புரவு தொழிலாளர்களின் கால்களை கழுவி மரியாதை செலுத்துகிறார். இந்த செயலினால் மோடியை விட சிறந்த நடிகர் யாரும் இல்லை என தெரிகிறது.
தனக்கு வணக்கம் கூறுபவர்களுக்கு கூட திரும்ப மரியாதை செய்யாத மோடி, தனது குருவான அத்வானியையும் அவமரியாதை செய்தார். மத்தியில் ஆட்சியில் இருந்தும் அனைத்து துறைகளிலும் தோல்வியைக் கண்டுள்ளார். அமலாக்கத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை என அனைத்தையும் தவறான வழியில் பயன்படுத்தினார். விவசாயிகளிடையே அச்ச உணர்வை ஏற்படுத்தினார். தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மற்றும் ஜெகன் மோகன் ரெட்டியை தவிர, நாட்டில் அனைவரும் மோடியை கடுமையாக எதிர்க்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார். #KumbhMela #PMModi #ChandrababuNaidu



உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் உள்ள திரிவேணி சங்கமத்தில் கும்பமேளா நடைபெற உள்ளது.
வருகிற 14-ந்தேதி தொடங்கும் இந்த கும்பமேளா மார்ச் மாதம் 4-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இதில் சுமார் 15 கோடி பேர் பங்கேற்று புனித நீராடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கும்பமேளாவில் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நீராட இருப்பதால் பா.ஜனதாவும், காங்கிரசும் அவர்களை கவருவதற்காக இப்போதே ஏற்பாடுகள் செய்து வருகின்றன.
பக்தர்களுக்கு வசதி செய்து கொடுத்து அவர்கள் ஆதரவை பெற வியூகம் வகுத்து உள்ளனர். காங்கிரஸ் கட்சி பக்தர்களுக்கு உதவுவதற்காக 1,200 சேவா தள தொண்டர்களை களம் இறங்கி உள்ளது.
பக்தர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கவும் காங்கிரஸ் ஏற்பாடு செய்து வருகிறது. தினமும் 5 ஆயிரம் உதவி பொருட்களை பக்தர்களுக்கு கொடுக்க காங்கிரசார் திட்டமிட்டுள்ளனர்.
இதற்கிடையே காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் கும்பமேளாவில் கலந்து கொண்டு புனித நீராட உள்ளார். அடுத்த மாதம் (பிப்ரவரி) அவர் கும்பமேளா புனித நீராடலை மேற்கொள்வார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
இதன் மூலம் உத்தரபிரதேச வாக்காளர்களை கவர முடியும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர். #Congress #RahulGandhi #KumbhMela
உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் கங்கை, யமுனா, கண்ணுக்குத் தெரியாத சரஸ்வதி ஆகிய 3 நதிகள் ஒன்று கூடும் திரிவேணி சங்கமத்தில் கும்பமேளா நடைபெற உள்ளது.
வருகிற 14-ந்தேதி இந்த கும்பமேளா தொடங்க உள்ளது. 6 ஆண்டுகளுக்கு ஒரு தடவை நடத்தப்படும் கும்பமேளா என்பதால், இந்த கும்பமேளாவுக்கு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கும்பமேளா நடைபெறும் நாட்களில் நாடு முழுவதிலும் இருந்து சுமார் 15 கோடி பேர் கலந்து கொண்டு புனித நீராடுவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. தினமும் ரெயில்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள்.
இதையொட்டி அலகாபாத் ரெயில் நிலையம் ஒரே நேரத்தில் 10 ஆயிரம் பேரை கையாளும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது. மற்ற ரெயில் நிலையங்களிலும் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் கும்பமேளா நடக்கும் நாட்களில், கூட்டத்தோடு கூட்டமாக ஊடுருவி மிகப்பெரிய நாசவேலை செய்ய பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டி இருப்பது தெரிய வந்துள்ளது. உளவுத்துறையினர் கொடுத்த தகவலின் பேரில் இந்த எச்சரிக்கையை வட கிழக்கு ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து உத்தரபிரதேசம், பீகார் ஆகிய இரு மாநிலங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கும்பமேளா நடக்கும் அலகாபாத் நகரம் பலத்த பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. தீவிர வாகன சோதனை நடந்து வருகிறது.
உத்தரபிரதேசத்தில் பிரயக்ராஜ் (அலகாபாத்) தியோரியா, கோரக்பூர், பல்லியா, காசிப்பூர், மா, வாரணாசி, மிர்காபூர், பதோதி, ஜனுன்பூர், அசம்கர், குஷிநகர், மகராஜ்கஞ்ச் ஆகிய 13 மாவட்டங்கள் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பீகாரில் சப்ரா, சிவான், கோபால்கஞ்ச் ஆகிய மூன்று மாவட்டங்கள் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
ரெயில்களில் வரும் அனைவரையும் சோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. கும்பமேளா பகுதியில் கண்காணிப்பு அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீசார் இப்போதே சாதாரண உடைகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர். #KumbhMela