என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Kundrathur"
பூந்தமல்லி:
குன்றத்தூர்- ஸ்ரீபெரும்புதூர் சாலையில் நேற்று இரவு போலீசார் மற்றும் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் ரூ.53 லட்சம் இருந்தது. காரில் இருந்தவர்களிடம் விசாரித்தபோது ஸ்ரீபெரும்புதூரில் உள்ள டாஸ்மாக் கடைகளில் வசூலான பணத்தை வாங்கி தேனாம்பேட்டையில் உள்ள தனியார் வங்கிக்கு கொண்டு செல்வதாகவும், தாங்கள் தனியார் ஏஜென்சி நிறுவனத்தை சேர்ந்தவர்கள் என்றும் தெரிவித்தனர்.
ஆனால் அவர்களிடம் பணத்துக்கான உரிய ஆவணங்கள் இல்லை. இதையடுத்து ரூ.53 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் பணத்தை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள கருவூலத்தில் ஒப்படைத்தனர். #LSPolls
பூந்தமல்லி, செப். 3-
சென்னை குன்றத்தூரை சேர்ந்த விஜயின் மனைவி அபிராமி தனது 2 குழந்தைகளுக்கு பாலில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற் படுத்தியது.
அதே பகுதியை சேர்ந்த பிரியாணி கடை ஊழியரான சுந்தரத்துடன் ஏற்பட்ட கள்ளக்காதல் காரணமாக அவர் குழந்தைகளை கொலை செய்தது தெரிய வந்தது. இந்த நிலையில் அபிராமி, பெற்ற குழந்தைகளையே கொலை செய்யும் அளவுக்கு கொடூர கொலையாளியாக மாறுவதற்கு காரணம் என்ன? என்பது பற்றி பரபரப்பான புதிய தகவல் கள் கிடைத்துள்ளன.
சென்னை வடபழனியில் உள்ள பிரபல ஓட்டல் ஒன்றில் பணியாற்றிய போது தான் அபிராமி, விஜயை சந்தித்துள்ளார். முதல் பார்வையிலேயே காதல் ஏற்பட்டது. பின்னர் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண் டனர். இவர்களின் இல்லற வாழ்க்கையில் அஜய், கார்னிகா என 2 குழந்தைகள் பிறந்தன.
திருமணத்துக்கு பின்னர் அபிராமி வேலைக்கு செல் வதை நிறுத்திவிட்டார். விஜயும் ஓட்டல் வேலையை விட்டு விட்டார். வங்கி ஒன்றில் கமிஷன் அடிப்படை யில் வேலை செய்து வந்தார். ஆரம்பத்தில் சந்தோஷமாக இருந்த அபிராமியின் வாழ்க்கை ஆடம்பர எண்ணம் காரணமாக திசைமாறியது. இதனால் முதல் காதல் கசக்க தொடங்கியது.
இதன் பின்னர் கடந்த 2 மாதங்களாக பிரியாணி கடை ஊழியரான சுந்தரத்து டன் அபிராமி பழக தொடங் கினார். கணவர், வேலை விஷயமாக வெளியில் செல்லும் நேரங்களில் அபிராமியின் வீட்டுக்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்தார்.
இதனால் 2 பேருக்கும் இடையே நெருக்கம் அதிக மானது. பலமுறை உல்லாச மாக இருந்துள்ளனர். இதன் பின்னர் சுந்தரம் இல்லாமல் இனி, வாழவே முடியாது என்கிற மனநிலைக்கு அபிராமி தள்ளப்பட்டார்.
இதன்பிறகு இந்த சுந்தரத் துடனான கள்ளக்காதல் விவகாரம் வெடிக்க தொடங்கியது. இதனால் கணவர் விஜயுடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இது, சுந்தரத்தின் மீதான ஆசையை அபிராமியிடம் மனதில் கூடுதலாகவே ஏற்படுத்தியது.
இதுபற்றி சுந்தரத்திடம் கூறிய அபி ராமி, நீ இல்லாமல் என்னால் வாழ முடியாது என்று கூறியுள்ளார். இதன் பின்னர்தான் இருவரும் சேர்ந்து குழந்தைகளை கொலை செய்ய சதி திட்டம் தீட்டி உள்ளனர். இதன்படி பாலில் விஷம் கலந்து கொடுத்து குழந்தைகளை மட்டுமின்றி, கணவர் விஜயையும் சேர்த்தே தீர்த்துக் கட்ட அபிராமி திட்டம் போட்டார். சுந்தரத்துடனான கள்ளக்காதலால் ஏற்பட்ட காமம் கண்ணை மறைக்கவே, குழந்தைகளை கொல்லும் மனநிலைக்கு தள்ளப்பட்டு விட்டதாக அபிராமி போலீசிடம் தெரிவித்துள்ளார்.
அபிராமி, சுந்தரம் இருவர் மீதும் கொலை, கூட்டு சதி உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கைதான இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட் டுள்ளனர்.
இந்த வழக்கை விரைந்து முடித்து குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை வாங்கி தர போலீசார் முடிவு செய்துள் ளனர்.
இந்த நிலையில் குழந்தை கள் கொலை செய்யப்பட்ட வீட்டின் உரிமையாளர் சுதா கூறும்போது, சிறுவன் அஜய் 3 மாத குழந்தையாக இருக்கும் போதில் இருந்தே எங்களுக்கு தெரியும். 2-வது பெண் குழந்தையும் இங்கேதான் பிறந்தது. குழந்தைகளை கொல்லாமல் விட்டிருந்தால் நாங்களே பாசத்தோடு வளர்த்திருப்போம் என்றார். * * * அபிராமி
குன்றத்தூரை அடுத்த திருமுடிவாக்கத்தில் உள்ள நூலகம் அருகே காலி இடத்தில் கடந்த 12-ந் தேதி மார்பளவு அம்பேத்கார் சிலை, அதே பகுதியை சேர்ந்த அம்பேத்கார் பொது நல சங்கம் சார்பில் வைக்கப்பட்டது. இதற்கு அனுமதி பெறவில்லை என்று தெரிகிறது.
இதையடுத்து குன்றத்தூர் வருவாய் அதிகாரி இந்திராணி, அம்பேத்கார் சிலையை அகற்ற வேண்டும் என்று அம்பேத்கார் பொது நல மன்ற நிர்வாகிகளிடம் கூறி இருந்தார். ஆனால் அம்பேத்கார் சிலை அகற்றப்படவில்லை.
இதுபற்றி வருவாய்த்துறை அதிகாரி இந்திராணி, பல்லாவரம் தாசில்தாருக்கு தகவல் தெரிவித்தார். அவரது உத்தரவுப்படி இன்று அதிகாலை 5 மணியளவில் அதிகாரிகள் திருமுடிவாக்கத்துக்கு வந்தனர்.
அவர்கள் அம்பேத்கார் சிலையை அகற்றினர். பின்னர் பல்லாவரம் தாசில்தார் அலுவலகத்துக்கு கொண்டு சென்று விட்டனர். அம்பேத்கார் சிலை அகற்றப்பட்டது பற்றி அறிந்ததும் அம்பேத்கார் பொது நல மன்றத்தினர் சுமார் 20-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.
உதவி கமிஷனர் கண்ணன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். #tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்