என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Kunnathur"
- அங்காளம்மன் கோவில் முன்புறம் குப்பைகள் அள்ளப்படாமல் கிடந்தது.
- துப்புரவு மேற்பார்வையாளர் சிவக்குமார் குடி அமர்த்தியுள்ளார்.
குன்னத்தூர் :
குன்னத்தூரில் கடந்த 6-ந் தேதி ரூ.3 கோடியே 75 லட்சம் செலவில் கட்டப்பட்ட வேளாண்மை விற்பனை கூடத்தை திறந்து வைக்க செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், கலெக்டர் வினீத் ஆகியோர் வந்திருந்தனர். அப்போது குன்னத்தூர் பஸ் நிலையம் அங்காளம்மன் கோவில் முன்புறமும் குப்பைகள் அள்ளப்படாமல் கிடந்தது. மதியம் 2 மணிக்கு மேல் தான் குப்பை அகற்றப்பட்டுள்ளது. மேலும் திடக்கழிவு வளாகத்தில் தன்னிச்சையாக தனி நபரை துப்புரவு மேற்பார்வையாளர் சிவக்குமார் குடி அமர்த்தியுள்ளார்.
இந்தநிலையில் குன்னத்தூர் பேரூராட்சி நிர்வாகத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் விதமாக நடந்து கொண்ட துப்புரவு மேற்பார்வையாளர் சிவக்குமாரை தற்காலிகபணியிடை நீக்கம் செய்து செயல் அலுவலர் ராஜா உத்தரவிட்டுள்ளார்.
- விளை பொருள்களை நியாயமான விலைக்கு விற்று பயன்பெறலாம்.
- குன்னத்தூா், தாராபுரம் ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் வாடகை கட்டடத்தில் இயங்கி வந்தன.
குன்னத்தூர் :
குன்னத்தூரில் ரூ.3.75 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட ஒழுங்குமுறை விற்பனைக்கூட கட்டடத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்துவைத்தாா்.
இதைத் தொடா்ந்து, குன்னத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் வினீத் முன்னிலை வகித்தாா். இதில், செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பங்கேற்று பேசியதாவது: - தமிழக முதல்வரால் திறக்கப்பட்டுள்ள இந்த விற்பனைக் கூடத்தில் விவசாயிகள் தங்களுடைய விளை பொருள்களை இடைத்தரகா்களின் குறுக்கீடு இன்றி நியாயமான விலைக்கு விற்று பயன்பெறலாம். விலை வீழ்ச்சி காலங்களில் விளைபொருள்களை கிடங்கில் இருப்புவைத்து பொருளீட்டு கடன் பெறலாம். திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 15 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் குன்னத்தூா், தாராபுரம் ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மட்டுமே வாடகைக் கட்டடத்தில் இயங்கி வந்தன.தற்போது குன்னத்தூா் ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு சொந்த கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது.அதிலும் சேமிப்பு கிடங்கு, பரிவா்த்தனை கூடம், உலா்களம், அலுவலக கட்டடம், சுகாதார வசதி, சுற்றுச்சுவா் ஆகிய உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்துள்ளாா் என்றாா்.
இதைத்தொடா்ந்து, 2 பயனாளிகளுக்கு ரூ.2 ஆயிரம் மானிய விலையில் மின்கல ெதளிப்பான்கள், ரூ. 6 ஆயிரம் மதிப்பில் விதை, உரங்கள் உள்ளிட்டவைகளை அமைச்சா் வழங்கினாா். இந்நிகழ்ச்சியில், கலெக்டரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) மகாதேவன், வேளாண் இணை இயக்குநா் சின்னச்சாமி, வேளாண்மை துணை இயக்குநா் (வேளாண் வணிகம்) சண்முக சுந்தரம், திருப்பூா் விற்பனைக்குழு முதுநிலைச் செயலாளா் பாலசந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
- திங்கட்கிழமை தென்னை மற்றும் பனங்கருப்பட்டி ஏலம் நடைபெறுவது வழக்கம்.
- 4 ஆயிரம் கிலோ தென்னங் கருப்பட்டியை கொண்டு வந்திருந்தார்கள்.
குன்னத்தூர் :
குன்னத்தூரில் கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்ட கருப்பட்டி கூட்டுறவு விற்பனை சம்மேளனம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் திங்கட்கிழமை தென்னை மற்றும் பனங்கருப்பட்டி ஏலம் நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் நடைபெற்ற ஏலத்திற்கு உற்பத்தியாளர்கள் 4 ஆயிரம் கிலோ தென்னங் கருப்பட்டியை கொண்டு வந்திருந்தார்கள். தென்னங்கருப்பட்டி கிலோ ரூ.85 வீதம் மொத்தம் ரூ.3 லட்சத்து 40 ஆயிரத்துக்கு ஏலம் போனது. இந்த தகவலை கூட்டுறவு கருப்பட்டி சம்மேளன மேலாண்மை இயக்குனர் மற்றும் தலைவர் தெரிவித்தனர்.
திருப்பூர் மாவட்டம் காங்கயம் நகரம், கரூர் சாலை பகுதியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் தேங்காய் பருப்பு மறைமுக ஏல முறையில் விற்பனை நடைபெற்றது. இதில் காங்கயம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 7 விவசாயிகள் 118 மூட்டைகள் (6,161 கிலோ) தேங்காய் பருப்பினை (கொப்பரை) விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
இதில் காங்கயம், வெள்ளகோவில், முத்தூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 7 வியாபாரிகள் தேங்காய் பருப்புகளை வாங்க வந்திருந்தனர். இங்கு நடந்த ஏலத்தில் ரூ.4.45 லட்சத்திற்கு பருப்புகள் விற்பனையானது. தேங்காய் பருப்பு அதிக பட்சமாக ஒரு கிலோ ரூ.78-க்கும், குறைந்த பட்சமாக ரூ.58-க்கும், சராசரியாக ரூ.76-க்கும் ஏலம் போனது. ஏலத்திற்கான ஏற்பாடுகளை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் ஆர்.மாரியப்பன் செய்திருந்தார்.
- குடியிருப்பு பகுதியில் உயர் கோபுரம் அமைக்கக்கூடாது என மக்கள் எதிா்ப்புத் தெரிவித்து வந்தனா்.
- மக்கள் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனா்.
குன்னத்தூர் :
அவிநாசி அருகே குன்னத்தூா் பேரூராட்சிக்கு உள்பட்ட பூலாங்குளம் குடியிருப்பு பகுதி அருகே தனியாா் செல்போன் நிறுவனம், செல்போன் உயா் கோபுரம் அமைப்பதற்காக தனியாா் இடத்தில் பணிகளை தொடங்குவதாகக் கூறப்படுகிறது.
இதையறிந்த அப்பகுதி மக்கள் உயா் கோபுரங்களால் உடலில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் எனக் கூறி குடியிருப்பு பகுதியில் உயர் கோபுரம் அமைக்கக்கூடாது என எதிா்ப்புத் தெரிவித்து வந்தனா். மேலும் பேரூராட்சி நிா்வாகத்தினா், கலெக்டர் உள்ளிட்டோரிடம் மனு அளித்தனா்.
இருப்பினும் உயா்கோபுரம் அமைக்கும் பணி தொடர இருப்பதாக அறித்த அப்பகுதி மக்கள் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனா். கருப்புக் கொடி போராட்டம் குறித்து தகவலறிந்த குன்னத்தூா் போலீசார் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.இதைத்தொடா்ந்து செல்போன் உயா் கோபுரம் அமைக்க அனுமதி அளித்த தனியாா் இடத்தினா் அந்த முடிவைக் கைவிட்டனா். இதையடுத்து கருப்புக்கொடிகள் அகற்றப்பட்டன.
- கைக்கெடிகாரம் மற்றும் கவரிங் நெக்லஸ் காணாததை அறிந்து குன்னத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார்.
- புகாரின் பேரில் போலீசார் சம்பத்குமார், இளங்கோ இருவரையும் பிடித்து விசாரணை செய்தபோது திருடியது தெரியவந்துள்ளது.
குன்னத்தூர் :
குன்னத்தூர் அருகே சின்னேகவுண்டன் வலசு கிராமம் குருவாயூரப்பன் நகரைச் சேர்ந்தவர் ரவிசங்கர் (வயது 52). இவர் நூல் வியாபாரம் செய்து வருகிறார். வியாபார விஷயமாக கடந்த 13-ந் தேதி அதே பகுதியைச் சேர்ந்த தனது நண்பர் குமாரை அழைத்து நாளை நான் டெல்லி செல்ல இருக்கிறேன். எனவே இன்று இரவு என்னுடன் தங்கிக்கொள் என்று கூறியுள்ளார்.
குமார் அவருடைய நண்பரான காமராஜ் நகரைச் சேர்ந்த சம்பத்குமார் (36), திருவாமுதலியூரை சேர்ந்த இளங்கோ (27) இருவரையும் அழைத்துக் கொண்டு வந்துள்ளார். அன்று இரவு அனைவரும் தங்கி உள்ளார்கள். 14-ம் தேதி காலை 6 மணி அளவில் குமார் ரவிசங்கரை தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துக்கொண்டு சென்றுள்ளார். சம்பத்குமாரும், இளங்கோவும் வீட்டில் இருந்துள்ளார்கள். நேற்று ரவிசங்கர் டெல்லியில் இருந்து திரும்பி வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு வீட்டிலிருந்து கைக்கெடிகாரம் மற்றும் கவரிங் நெக்லஸ் ஆகியவை காணாததை அறிந்து குன்னத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் சம்பத்குமார், இளங்கோ ஆகிய இருவரையும் பிடித்து விசாரணை செய்தபோது ரவிசங்கர் வீட்டில் திருடியது தெரியவந்துள்ளது. இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து ஊத்துக்குளி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி சம்பத்குமார், இளங்கோஆகிய இருவரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.
குன்னத்தூர்:
திருப்பூர் மாவட்டம் திருமுருகன் பூண்டியை சேர்ந்தவர் ஈஸ்வரன். இவரது மகன் ஜீவா என்ற ஜீவானந்தம் (வயது 19). இவர் ஈரோடு அருகே உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். ஜீவா வழக்கம்போல் கல்லூரி பஸ்சில் சென்று வந்தார்.
நேற்று கல்லூரியில் விழா நடைபெற்றது. இதற்காக தனது தந்தையின் மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு கல்லூரி சென்றார். விழா முடிந்ததும் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார்.
குன்னத்தூர் பெருந்துறை ரோடு தேவம்பாளையம் பிரிவு அருகே வந்தபோது எதிரே சரக்கு ஆட்டோ வந்தது. எதிர்பாராதவிதமாக சரக்கு ஆட்டோவும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதின. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட ஜீவாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் மாணவரை மீட்டு அவினாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஜீவாவை பரிசோதனை செய்த டாக்டர் மாணவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இது குறித்து குன்னத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவர் கார்த்திக்குமாரை கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்