என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "L Balaji"

    • சென்னை , மும்பை போன்ற அணிகள் எப்போதும் தங்களது பெரிய வீரர்களை தக்க வைத்துக் கொண்டே இருக்கின்றன.
    • சென்னை, மும்பை அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும் பட்சத்தில் மற்ற அணிகளுக்கு சவால் இன்னும் அதிகமாக இருக்கும்.

    சென்னை:

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 'ஹாட்ரிக்' விக்கெட் கைப்பற்றிய முதல் வீரர் (சென்னை அணிக்காக) என்ற சாதனைக்கு சொந்தக்காரர் எல்.பாலாஜி. இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான அவர் தற்போது வர்ணனை பணியில் ஈடுபட்டு வருகிறார்.

    அவர் நேற்று காணொலி வாயிலாக அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 4 வெளிநாட்டு வீரர்கள் இடத்துக்கு டிவான் கான்வே, ரச்சின் ரவீந்திரா, சாம் கர்ரன், பதிரானா ஆகியோர் இடம் பிடிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன். மேலும் ஆர்.அஸ்வின், ஜடேஜா என்று இரண்டு பிரதான சுழற்பந்து வீச்சாளர்கள் இருப்பதால், ரூ.10 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட சுழற்பந்து வீச்சாளர் நூர் அகமது (ஆப்கானிஸ்தான்) வாய்ப்புக்கு காத்திருக்க வேண்டி இருக்கும்.

    கடந்த சில சீசனில் சென்னை அணியில் நிறைய ஆல்-ரவுண்டர்கள் இருந்ததால் சில சமயம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் இருந்திருக்கலாம். ஆனால் இந்த சீசனில் அதிக ஆல்-ரவுண்டர்கள் இல்லை. எனவே சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வின் சென்னை அணியின் முக்கியமான வீரராக இருப்பார். 'பவர்-பிளே'யிலும், இறுதிகட்டத்திலும் அவரால் சிறப்பாக பந்து வீச முடியும்.

    உள்ளூர் வீரர் என்பதால் சேப்பாக்கம் ஆடுகளம், சூழலை நன்கு அறிந்தவர். இங்கு எப்போதும் ஆடினாலும் அசத்தி இருக்கிறார். இங்கு முன்பு சென்னைக்கு எதிரான ஒரு முக்கியமான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்சுக்காக களம் இறங்கிய போது 30 ரன் மற்றும் 2 விக்கெட் (2023-ம் ஆண்டு) எடுத்திருந்தார். எனவே அவரது பங்களிப்பு அணிக்கு மிகவும் முக்கியமாகும். அதனால் இங்குள்ள சூழலில் எதிரணிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பார்.

    18-வது ஐ.பி.எல்.-ல் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும் 4 அணிகள் எதுவாக இருக்கும் என்று கேட்கிறீர்கள். இந்த ஆண்டு எல்லா அணிகளுமே நன்றாக உள்ளன. பொதுவாக சொல்ல வேண்டும் என்றால் எல்லா அணிகளுமே புதிய அணிகள். ஏனெனில் நிறைய வீரர்கள் வேறு அணிக்கு மாறியிருக்கிறார்கள். ஷ்ரேயாஸ் அய்யர் கொல்கத்தா அணியில் இருந்து பஞ்சாப்புக்கு போய் இருக்கிறார். லோகேஷ் ராகுல் லக்னோவில் இருந்து டெல்லிக்கு மாறியுள்ளார்.

    ரிஷப் பண்ட் டெல்லி அணியில் இருந்து லக்னோ அணிக்கு சென்று இருக்கிறார். இவர்கள் அங்கு முதலில் தங்களை வலுவாக நிலைநிறுத்தி, வெற்றிக்குரிய, நம்பிக்கையான சூழலை உருவாக்க வேண்டும். அணி உரிமையாளர்களுடன் நல்ல அணுகுமுறை இருக்க வேண்டும். வீரர்களின் ஓய்வறை சூழல் சிறப்பாக இருக்க வேண்டும். இப்படி நிறைய விஷயங்களை கவனிக்க வேண்டி இருப்பதால் புதிய அணிகளுக்கு கொஞ்சம் நேரம் எடுக்கும். எனவே முதல் 4-5 ஆட்டங்களுக்கு பிறகே ஒவ்வொரு அணியையும் மதிப்பிட முடியும்.

    இருப்பினும் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் போன்ற அணிகள் எப்போதும் தங்களது பெரிய வீரர்களை தக்க வைத்துக் கொண்டே இருக்கின்றன. அவர்கள் வெற்றிகரமான அணிகளாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம். சென்னை, மும்பை அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெறும் பட்சத்தில் மற்ற அணிகளுக்கு சவால் இன்னும் அதிகமாக இருக்கும்.

    இதே போல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ் தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளன. இந்த 4 அணிகளும் தங்களுக்கே உரிய கிரிக்கெட்டை சிறப்பாக விளையாடி இருக்கின்றன. வரும் சீசனிலும் அவர்கள் நன்றாக ஆடுவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

    'ஹாட்ரிக்' விக்கெட் குறித்து கேட்கிறீர்கள். 'ஹாட்ரிக்' விக்கெட்டை திட்டமிட்டு எடுக்க முடியாது. அது நடப்பது அரிது. போட்டிக்குரிய நாளில் சூழல் சாதகமாக அமைந்து, அதிர்ஷ்டமும் இருந்தால் 'ஹாட்ரிக்' விக்கெட் சாதனை படைக்க முடியும்.

    இவ்வாறு பாலாஜி கூறினார்.

    • இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நேற்று நியமிக்கப்பட்டார்.
    • பீல்டிங் பயிற்சியாளராக திலீப் தொடர்வார்.

    இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட் பதவிக்காலம் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை தொடருடன் முடிவுக்கு வந்தது. இதனையடுத்து அடுத்த பயிற்சியாளர் என்பது குறித்து சமூக வலைதளங்களில் பல கருத்துக்கள் உலா வந்தன.

    அந்த வகையில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த 2024 ஐ.பி.எல். தொடரில் இருந்தே இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகின.

    அதனை தொடர்ந்து கவுதம் கம்பீரை இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா நேற்று தெரிவித்தார்.

    பயிற்சியாளர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் பயிற்சியாளர்கள் யார் என்பது குறித்து புதிய தகவல் வெளியாகி உள்ளது. பீல்டிங் பயிற்சியாளராக திலீப் தொடர்வார். மேலும் பேட்டிங் பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வீரரும் கொல்கத்தா அணியின் பயிற்சியாளருமான அபிஷேக் நாயர் நியமிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    மேலும் பந்து வீச்சு பயிற்சியாளராக எல் பாலாஜி, ஜாகீர் கான், வினய் குமார் ஆகியோரது பெயர் இடம் பெற்றுள்ளது. இதில் முன்னாள் வீரர்கள் ஜாகீர் கான் அல்லது லட்சுமிபதி பாலாஜியை நியமிக்க பிசிசிஐ திட்டமிட்டு வருவதாக தெரிய வந்துள்ளது. ஆனால் வினய் குமாரை பவிலிங் பயிற்சியாளராக நியமிக்க வேண்டும் என புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் பிசிசிஐயிடம் வலியுறுத்தியுள்ளதாகவும் தகவல்கள் உலா வருகின்றன.

    • ஆவேஷ் கானை விட தீபக் சாகர் பந்துவீச்சில் சிறந்தவர் என பாலாஜி கூறினார்.
    • துபாயில் நடைபெறும் போட்டிகளில் அவரை போன்ற பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வது பேட்ஸ்மேன்களுக்கு கஷ்டம்.

    ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் ஆகஸ்ட் 27-ஆம் தேதி முதல் ஆசியக்கோப்பை தொடரானது நடைபெற உள்ளது. மொத்தம் ஆறு அணிகள் இதில் பங்கேற்கிறது. ஆகஸ்ட் 28-ஆம் தேதி நடைபெற இருக்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் யார் வெற்றி பெற்று முதலில் வெற்றி கணக்கை துவங்குவார்கள் என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    இந்நிலையில் ஏற்கனவே ஆசிய கோப்பை இந்திய அணி அறிவிக்கப்பட்ட நிலையில் அதில் சில மாற்றங்களை செய்ய வேண்டும் என்று பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் முன்னாள் தமிழக கிரிக்கெட் வீரரும், முன்னாள் இந்திய வீரருமான எல்.பாலாஜி இந்திய அணியில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம் குறித்து தனது கருத்தினை வெளிப்படுத்தி உள்ளார்.

    இது குறித்து அவர் கூறுகையில்:

    ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தீபக் சாஹர் கூடுதல் வீரராக மட்டுமே அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவரை தவிர்த்து புவனேஸ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான் ஆகிய வீரர்கள் மட்டுமே அணியில் இடம் பிடித்துள்ளனர். என்னை பொறுத்தவரை ஆவேஷ் கானை விட தீபக் சாகர் பந்துவீச்சில் சிறந்தவர்.

    ஏனெனில் தீபக் சாகர் கடந்த சில ஆண்டுகளாகவே தனது பந்துவீச்சில் நல்ல முன்னேற்றத்தை கண்டுள்ளார். ஆனால் துரதிஷ்டவசமாக காயம் காரணமாக அவர் ஆறு மாதங்கள் விளையாட முடியாமல் போனது அவருக்கு பின்னடைவை தந்துள்ளது.

    ஆனாலும் தீபக்சாகர் ஒரு கடினமான உழைப்பாளி அவருக்கான வாய்ப்பு வரும்வரை காத்திருந்து நிச்சயம் அந்த இடத்தை அவர் கெட்டியாக பிடித்துக் கொள்வார். அவரால் என்ன செய்ய முடியுமோ அதனை அணிக்காக எப்போதுமே செய்வார். மேலும் தற்போது அவருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை என்பது குறித்து அவர் பெரிதாக கவலை கொள்ளமாட்டார். நிச்சயம் அவர் மீண்டும் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி அணியில் நிரந்தர இடம் பிடிப்பார்.

    துபாயில் நடைபெறும் போட்டிகளில் அவரை போன்ற பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வது பேட்ஸ்மேன்களுக்கு கஷ்டம். ஏனெனில் புதுப்பந்தில் இருபுறமும் அவரால் ஸ்விங் செய்ய முடியும். தற்போது உள்ள இந்திய அணியில் அவரைப் போன்ற வீரர் நிச்சயம் தேவை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×