search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "l Election"

    • மகாராஷ்டிராவில் காலியாக இருக்கும் 11 சட்டமேலவை இடங்களுக்கு இன்று தேர்தல் நடக்கிறது.
    • ஒரு எம்.எல்சி.யை [ சட்ட மேலவை உறுப்பினரை] தேர்வு செய்ய 23 எம்.எல்.ஏக்களின் வாக்குகள் தேவை

    மகாராஷ்டிராவில் காலியாக இருக்கும் 11 சட்டமேலவை இடங்களுக்கு இன்று [ஜூலை 12] தேர்தல் நடக்கிறது. இதில் எம்.எல்.ஏக்கள் வாக்களிக்க உள்ள நிலையில் தங்களின் கட்சி எம்.எல்.ஏக்கள் அணி மாறிவிடக்கூடாது என்று அவர்களை 5 நட்சத்திர விடுதிகளில் கட்சிகள் பாதுகாத்து வைத்தன.

     

    இதில் ஆளும் மஹாயுதி [ பாஜக - ஷிண்டே சிவசேனா, அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் ] கூட்டணிக்கும், மஹா விகாஸ் அகாடி[ காங்கிரஸ், உத்தவ் தாக்கரே சிவசேனா, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் இடம்பெற்ற இந்தியா கூட்டணி] ஆகிய இரண்டு கூட்டணிக்கு இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.

    ஒரு எம்.எல்சி.யை [ சட்ட மேலவை உறுப்பினரை]  தேர்வு செய்ய 23 எம்எல்ஏக்களின் வாக்குகள் தேவை என்ற சூழ்நிலையில் பாஜக பக்கம் இருக்கும் அஜித் பவார் பக்கம் உள்ளவர்கள் சரத் பவாரிடம் தாவும் சூழ்நிலை உள்ளது. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி 48 இல் 30 இடங்களில் வெற்றி பெற்றதும் இந்த மேலவைத் தேர்தலில் முக்கிய தாக்கத்தை ஏற்படும். விரைவில் மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் நடைபெற உள்ளதால் இன்றயை மேலவைத் தேர்தல் முக்கியத்துவம் பெறுகிறது.

     

    எனவே அவரவர் எம்.எல்.ஏக்களை பாதுகாக்க இரு தரப்பினரும் வாக்குப்பதிவு நேரம் வரை 5 நட்சத்திர விடுதிகள் மற்றும் ரிசார்ட்டுகளில்  தனிமைப்படுத்தி தங்கவைக்கப்பட்டனர்.கடைசி நேரத்தில் வாக்குகள் பிரிந்து விடக்கூடாது என்பதில் இரண்டு கூட்டணியினரும் தீவிரமாக உள்ளனர். இன்று காலை 9 மணிக்கு தொடங்கியுள்ள தேர்தல் மாலை 4 மணி வரை நடைபெறும்.

    மொத்தம் 11 இடங்களுக்கு நடக்கும் தேர்தலில் 201 எம்.எல்.ஏக்கள் ஆதரவு கொண்ட மஹாயுதி [பாஜக கூட்டணி] 9 வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. 69 எம்.எல்.ஏக்கள் ஆதரவு கொண்ட மஹா விகாஸ் அகாடி[இந்தியா கூட்டணி ] 3 வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது . ஒரு  சுயேச்சை உட்பட  6 எம்.எல்.ஏ.க்கள் நடுநிலை வகிப்பது குறிபிடத்தக்கது. 

    ×