search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "labor issue"

    • சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா தலைமையில் தொழிற்சங்க நிர்வாகிகள் தலைமை செயலகத்தில் தொழிலாளர் துறை செயலாளர் முத்தம்மாவை சந்தித்தனர்.
    • மொழி தெரியாத மாநிலங்களுக்கு பணியிட மாற்றம் செய்தவர்களை மீண்டும் புதுவையில் பணியமர்த்த வேண்டும் என மனு அளித்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை சேதராப்பட்டியில் இயங்கி வரும் எல்.அண்ட்.டி. நிறுவனம் 2 மாதங்களாக தனது உற்பத்தியை எவ்வித காரணமும் இன்றி நிறுத்தி வைத்துள்ளது.

    அங்கு பணிபுரிந்து வந்த 83 நிரந்தர தொழிலாளர்களை ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான் உட்பட பல்வேறு வட மாநிலங்களுக்கு பணியிட மாற்றம் செய்துள்ளது.

    இதுகுறித்து சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா தலைமையில் தொழிற்சங்க நிர்வாகிகள் தலைமை செயலகத்தில் தொழிலாளர் துறை செயலாளர் முத்தம்மாவை சந்தித்தனர்.

    அப்போது, எவ்வித காரணமும் இன்றி மூடியுள்ள தொழிற்சாலையை மீண்டும் இயக்க வேண்டும். மொழி தெரியாத மாநிலங்களுக்கு பணியிட மாற்றம் செய்தவர்களை மீண்டும் புதுவையில் பணியமர்த்த வேண்டும் என மனு அளித்தனர்.

    மனுவைப்பெற்ற தொழிலாளர் துறை செயலர் இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

    இந்த சந்திப்பின்போது தொ.மு.ச. மாநில தலைவர் அண்ணா அடைக்கலம், துணைத் தலைவர்கள் சிவக்குமார், கிருஷ்ண மூர்த்தி, பொருளாளர் சக்திவேல், செயலாளர் விஜயபாஸ்கர், துணை செயலாளர் ராஜசேகர் மற்றும் பா.ம.க. தொழிற்சங்க செயலாளர் குமார், பொருளாளர் கண்ணன், துணை தலைவர் சரவணன், துணை செயலாளர் சரவணன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

    ×