என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Labour Party"
- காலை உணவு உண்ணாமல் பள்ளி செல்லும் குழந்தைகளை எண்ணிக் கவலை கொண்டிருந்த தாய்மார்கள் பெருமகிழ்ச்சி அடைகின்றனர்.
- கடந்த ஆண்டில் மட்டும் 1 லட்சத்து 48 ஆயிரத்து 149 இளைஞர்கள் வேலைவாய்ப்புகளை பெற்றுள்ளனர்.
சென்னை:
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டை இந்தியாவின் முதல் மாநிலமாக உயர்த்துவதில் உறுதிகொண்டு உன்னதமான பல திட்டங்களை உருவாக்கி வருகிறார். இந்த திட்டங்கள் தமிழ்நாட்டு மக்களிடமும் இந்தியாவின் இதர மாநிலங்களிலும் மிகுந்த வரவேற்பை பெற்று வருகின்றன.
அத்திட்டங்களில் "முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்", "நான் முதல்வன் திட்டம்", "கலைஞர் கனவு இல்லம் திட்டம்" ஆகிய மூன்றும் பிரிட்டன் நாட்டில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது தெரியவந்துள்ளது.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின்கீழ் 31,008 அரசுப் பள்ளிகளில் 18 லட்சத்து 54 ஆயிரம் மாணவ - மாணவியர் சூடான, சுவையான காலை உணவை உண்டு மகிழ்ச்சியுடன் படிப்பில் மிகுந்த கவனம் செலுத்துகின்றனர். காலை உணவு உண்ணாமல் பள்ளி செல்லும் குழந்தைகளை எண்ணிக் கவலை கொண்டிருந்த தாய்மார்கள் பெருமகிழ்ச்சி அடைகின்றனர்.
இத்திட்டத்தை, தெலுங்கானா மாநில அரசு உள்பட பல்வேறு மாநிலங்கள் வரவேற்றுள்ளன. மேலும், கனடா நாட்டு பிரதமர் இத்திட்டத்தை வரவேற்று தம்முடைய நாட்டில் நடைமுறைப்படுத்தி உள்ளார்.
'நான் முதல்வன்' திட்டத்தின் அடிப்படை நோக்கம் கல்விக்கும் வேலைவாய்ப்பிற்கும் இடையே உள்ள இடைவெளியை குறைப்பதில் உள்ளது. நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றவர்களில் 76.4 சதவீதம் என்ஜினீயரிங் மாணவர்களும், 83.8 சதவீதம் கலை மற்றும் அறிவியல் மாணவர்களும் தொடர்ந்து வேலைவாய்ப்புகளை பெற்று வருகின்றனர்.
கடந்த ஆண்டில் மட்டும் 1 லட்சத்து 48 ஆயிரத்து 149 இளைஞர்கள் வேலைவாய்ப்புகளை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இத்திட்டம் இளைஞர்களிடமும் பெற்றோரிடமும் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
வீடு இல்லாதவர்களுக்கு இலவச வீட்டுமனை வழங்குவதுடன் வீடுகட்டுவதற்கான தொகையை அரசு அவரவர் வங்கிக் கணக்குகளில் செலுத்தி பயனாளிகளே தங்கள் கனவு இல்லங்களை தாங்களே உருவாக்கிக் கொள்ளும் கலைஞரின் கனவு இல்லம் திட்டம் தமிழ்நாட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்திய இந்த 3 திட்டங்களையும் பிரிட்டன் பாராளுமன்றத் தேர்தலில் தொழிலாளர் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் வெளியிட்டு மக்களின் ஆதரவைப் பெற்று மாபெரும் வெற்றிகண்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பாராளுமன்றத்திற்கு முன்கூட்டியே தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
- தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது.
பிரிட்டனில் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் கன்சர்வேடிவ் கட்சியின் ரிஷி சுனக் பிரதமராக இருந்து வருகிறார். இவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தான் நிறைவடைகிறது. எனினும், பிரிட்டன் பாராளுமன்றத்திற்கு முன்கூட்டியே தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இதைத் தொர்ந்து பிரிட்டன் பாராளுமன்ற தேர்தல் நேற்று நடைபெற்றது. 650 உறுப்பினர்களை கொண்ட பிரிட்டன் பாராளுமன்ற தேர்தலில் தமிழ் வம்சாவளியை சேர்ந்த எட்டு பேர் களம் கண்டனர். இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது.
இதில் தொழிலாளர் கட்சி வெற்றிக்கு தேவையானதை விட அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க இருக்கிறது. தேர்தலில் போட்டியிட்ட பிரதமர் ரிஷி சுனக் வெற்றி பெற்ற போதிலும், அவரது கன்சர்வேடிவ் கட்சி வேட்பாளர்கள் பல இடங்களில் தோல்வியை தழுவினர்.
தேர்தல் தோல்வி காரணமாக கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் பதவியை ரிஷி சுனக் ராஜினாமா செய்தார். பிரிட்டன் பிரதமராக 20 மாதங்கள் பதவி வகித்த ரிஷி சுனக், தேர்தல் தோல்விக்கு மன்னிப்பு கோரினார். மேலும், தோல்விக்கு பொறுப்பேற்றுக் கொள்வதாகவும் தெரிவித்தார். இதோடு பிரதமர் பதவியையும் ராஜினாமா செய்தார்.
பிரதமராக அவர் ஆற்றிய கடைசி உரையில், "நான் முதலில் கூறப்போவது, என்னை மன்னித்துவிடுங்கள். இந்த பதவியில் என்னால் முடிந்த அனைத்தையும் செய்தேன், ஆனால் நீங்கள் பிரிட்டனில் ஆட்சி மாற்றம் வேண்டும் என்பதை தெளிவாக உணர்த்தி இருக்கின்றீர்கள்."
"உங்களின் தீர்ப்பு மட்டுமே முக்கியமான ஒன்று. உங்களின் கோபம், ஏமாற்றம் உள்ளிட்டவைகளை கேட்டேன். இந்த தோல்விக்கு முழு பொறுப்பையும் ஏற்றுக் கொள்கிறேன். இந்த முடிவை தொடர்ந்து நான் கட்சி தலைவர் பதவியில் இருந்தும் விலகிக் கொள்கிறேன். "
"அரசியலில் எனது எதிரணியை சேர்ந்தவர் என்ற போதிலும், சர் கீர் ஸ்டார்மர் விரைவில் நமது பிரதமர் ஆக போகிறார். இந்த பணியில் அவர் பெறும் வெற்றிகள், நமக்கான வெற்றிகளாக இருக்கும். அவருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்"
"பொது வெளியில் எங்களிடையே பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்த போதிலும், அவர் நல் குணம் வாய்ந்தவர். பொதுப்படையில் அவர்மீது நான் மரியாதை கொண்டுள்ளேன்," என்று தெரிவித்தார்.
- பிரிட்டன் பாராளுமன்றத்திற்கு முன்கூட்டியே தேர்தல் நடத்தப்பட்டது.
- தேர்தலில் தமிழ் வம்சாவளியை சேர்ந்த 8 பேர் போட்டியிட்டனர்.
பிரிட்டனில் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் கன்சர்வேடிவ் கட்சியின் ரிஷி சுனக் பிரதமராக இருந்து வருகிறார். இவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தான் நிறைவடைகிறது. எனினும், பிரிட்டன் பாராளுமன்றத்திற்கு முன்கூட்டியே தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இதைத் தொர்ந்து கடந்த மே 30 ஆம் தேதி பிரிட்டன் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதன்படி பிரிட்டன் பாராளுமன்ற தேர்தல் நேற்று நடைபெற்றது. 650 உறுப்பினர்களை கொண்ட பிரிட்டன் பாராளுமன்ற தேர்தலில் தமிழ் வம்சாவளியை சேர்ந்த எட்டு பேர் களம் கண்டனர்.
இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இதில் தொழிலாளர் கட்சி வெற்றிக்கு தேவையானதை விட அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க இருக்கிறது. தேர்தலில் போட்டியிட்ட பிரதமர் ரிஷி சுனக் வெற்றி பெற்ற போதிலும், அவரது கன்சர்வேடிவ் கட்சி வேட்பாளர்கள் பல இடங்களில் தோல்வியை தழுவினர்.
தேர்தல் முடிவுகளை தொடர்ந்து ரிஷி சுனக் செய்தியாளர்களிடம் பேசிய போது, யூடியூபரால் கிண்டலுக்கு ஆளான சம்பவம் அரங்கேறியது. செய்தியாளர்களிடம் ரிஷி சுனக் பேசி வந்த போது, யூடியூபில் பிராங்க் செய்யும் நிகோ ஓமிலனா தனது கையில் L (தோல்வியாளர் என்பதை குறிக்கும் வகையில்) என்ற ஆங்கில எழுத்து கொண்ட காகிதத்தை தூக்கி காண்பித்தார்.
இதைத் தொடர்ந்து தனது சமூக வலைதளங்களில் "இதை பிடித்துக் கொள்ளுங்கள் ரிஷி, உங்களுக்கான நேரம் முடிந்துவிட்டது," என்றும் குறிப்பிட்டுள்ளார். சமூக வலைதளங்களில் இவர் 7.49 மில்லியன் ஃபாளோயர்களை வைத்திருக்கிறார்.
நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் இவர் தனித்து போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் என்பதால், பிரதமர் பேசிய மேடை அருகே எளிதில் சென்றுவிட்டார் என்று கூறப்படுகிறது.
- பிரிட்டன் பாராளுமன்றத்திற்கு முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படுகிறது.
- இந்த முறை ஏராளமான தமிழர்கள் களம் காண்கின்றனர்.
பிரிட்டனில் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் கன்சர்வேடிவ் கட்சியின் ரிஷி சுனக் பிரதமராக இருந்து வருகிறார். இவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தான் நிறைவடைகிறது. எனினும், பிரிட்டன் பாராளுமன்றத்திற்கு முன்கூட்டியே தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இதைத் தொர்ந்து கடந்த மே 30 ஆம் தேதி பிரிட்டன் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், பிரிட்டன் பாராளுமன்ற தேர்தல் இன்று நடைபெறுகிறது. 650 உறுப்பினர்களை கொண்ட பிரிட்டன் பாராளுமன்ற தேர்தலில் இந்த முறை எட்டு தமிழர்கள் களம் காண்கின்றனர்.
உமா குமரன், கவின் ஹரன், மயூரன் செந்தில் நாதன், கமலா குகன், டெவினா பால், நரணி ருத்ரா ராஜன், கிரிஷ்ணி, ஜாஹிர் உசேன் ஆகியோர் பிரிட்டன் பாராளுமன்ற தேர்தலில் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.
இந்த தேர்தலில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று கருத்துக் கணிப்பு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டது. பிரிட்டனில் கடந்த 15 ஆண்டுகளாக கன்சர்வேடிவ் கட்சி ஆட்சி செய்து வந்தது.
இந்த நிலையில், கருத்துக் கணிப்பு முடிவுகளின் படி எதிர்கட்சியான தொழிலாளர் கட்சி ஆட்சிக்கு வரும் போது 15 ஆண்டுகால கன்சர்வேடிவ் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.
தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் வேதாந்தா குழுமத்திற்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து ஸ்டெர்லைட்டை மூட வலியுறுத்தி தமிழகத்தில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. பிரிட்டனில் உள்ள இந்திய தூதரகத்தின் அருகில் தமிழர்கள் போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில், லண்டன் பங்குச் சந்தையில், வேதாந்தா பங்கு விலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது. சூழலியலுக்கு எதிரான தொழிற்சாலைக்கு எதிராக போராடியதற்காக பொதுமக்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்று, இங்கிலாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
‘போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டதையடுத்து பங்குச்சந்தை கட்டுப்பாட்டாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நிறுவனம் சுற்றுச்சூழலை சீரழித்து பொதுமக்கள் கட்டாயமாக வெளியேறும் வகையில் சட்டவிரோதமாக சுரங்கத் தொழிலை செய்து வருகிறது. பிரச்சார இயக்கங்கள் சர்வதேச பொது மன்னிப்பு சபை போன்ற அரசு சாரா அமைப்புகளும் வேதாந்தா நிறுவனம் மீது குற்றம்சாட்டியுள்ளன’ என தொழிலாளர் கட்சி தலைவர் ஜான் மெக்டோனல் கூறியுள்ளார்.
மும்பை பங்கு சந்தையில் ஏற்கனவே வேதாந்தா அளித்த அறிக்கையில், தூத்துக்குடியில் தங்கள் நிறுவனத்தின் முதல் அலகு மூடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து லண்டன் பங்கு சந்தையிலும் வேதாந்தா குழுமத்திற்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. ஆனால் லண்டன் பங்குச் சந்தை இந்த பிரச்சினையில் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது. #Vedanta #LabourParty
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்