search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ladys Finger"

    • மகிளிப்பட்டி கிராமத்தில் வெண்டைக்காய் சாகுபடி தீவிரம் அடைந்து வருகிறது
    • வெண்டைக்காய்களுக்கு ஓரளவு விலை கிடைத்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    கரூர்,

    கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மகிளிப்பட்டி கிராமத்தில் விவசாயிகள் காய்கறிகள் சாகுபடி செய்து வருகின்றனர். தற்போது வெண்டைக்காய் சாகுபடி நடந்து வருகிறது. கிணற்று நீர் பாசன முறையில் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. விவசாயிகள் வெண்டைகாய்களை பறித்து உள்ளூர் வாரச்சந்தைகளில் விற்பனை செய்கிறார்கள். தற்போது கிலோ 30 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வெண்டைக்காய்களுக்கு ஓரளவு விலை கிடைத்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    • கிணற்று பாசனத்திற்கு பல்வேறு வகையான காய்கறி பயிர்கள் பயிரிடப்படுகின்றன.
    • விளைவித்த காய்கறிகளை உடுமலை உழவர் சந்தை மற்றும் தனசரி சந்தையில் விற்பனை செய்கின்றனர்.

    உடுமலை :

    உடுமலை வட்டாரத்தில் கிணற்று பாசனத்திற்கு பல்வேறு வகையான காய்கறி பயிர்களும் பயிரிடப்படுகின்றன.

    இதில் விவசாயிகள் தங்கள் விளைவித்த காய்கறிகளை உடுமலை உழவர் சந்தை மற்றும் தனசரி சந்தையில் விற்பனை செய்கின்றனர். இந்த சீசனில் வெண்டைக்காய்க்கு நல்ல விலை கிடைத்து வருகிறது. இது குறித்து விவசாயிகள் கூறும்போது; வெண்டை சாகுபடியில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் காய்கள் அறுவடைக்கு வரும் தற்போது 16 கிலோ கொண்டபை ஒன்று ரூபாய் 500 முதல் 600 வரை விற்பனையாகிறது. வெங்காயம் தக்காளி உள்ளிட்ட சாகுபடியில் கடந்த சீசனில் விலை கிடைக்காமல் பாதிப்பு ஏற்பட்டது.

    இதில் விவசாயிகள் நஷ்டம் அடைந்தனர். தற்போது வெண்டைக்காய்க்கு நல்ல விலை கிடைத்து வருவது ஆறுதல் அளிப்பதாக உள்ளது என தெரிவித்தனர்.

    • விசேஷ நாட்களில் வெண்டைக்கு விலை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.
    • கிணற்றுப்பாசனத்துக்கு சீசனை திட்டமிட்டு இந்த சாகுபடியில் விவசாயிகள் ஈடுபடுகின்றனர்.

    குடிமங்கலம் :

    வெண்டைக்கு சந்தையில் நிலையான விலை கிடைத்து வருகிறது. விசேஷ நாட்களில், விலை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.

    உடுமலை கண்ணமநாயக்கனூர், கணக்கம்பாளையம், ஆண்டியகவுண்டனூர், குட்டியகவுண்டனூர்,பெரிசனம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வெண்டை பரவலாக சாகுபடி செய்யப்படுகிறது. கிணற்றுப்பாசனத்துக்கு சீசனை திட்டமிட்டு இந்த சாகுபடியில் விவசாயிகள் ஈடுபடுகின்றனர். அவ்வகையில், ஆடிப்பட்ட சாகுபடியில் வெண்டைக்காய் அறுவடை துவங்கியுள்ளது. தற்போதைய நிலவரப்படி உடுமலை உழவர் சந்தையில் வெண்டை கிலோ 18-24 ரூபாய் வரை விலை கிடைத்தது.விவசாயிகள் கூறுகையில், பண்டிகை மற்றும் முகூர்த்த சீசனில் வெண்டைக்கு நல்ல விலை கிடைக்கும். வரும் ஆவணி மாதத்தில் விலை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளோம்.

    ஏக்கருக்கு 12 டன் வரை மகசூல் கிடைக்கும் வாய்ப்புள்ளது. காய் பறிப்புக்கு போதிய ஆட்கள் கிடைப்பதில்லை என்றனர்.

    ×