என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
முகப்பு » lakshmanan giovindan
நீங்கள் தேடியது "lakshmanan giovindan"
ஆசிய விளையாட்டு போட்டியில் 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரர் லட்சுமணன் தகுதியிழப்பு செய்யப்பட்டுள்ளார். #AsianGames #LakshmananGovindan
ஜகார்த்தா:
இந்தோனேசியாவில் 18வது ஆசிய விளையாட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தமிழக வீரர் லட்சுமணன் கோவிந்தன் வெண்கலப் பதக்கம் வென்றதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஆசிய விளையாட்டு போட்டியில் 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரர் லட்சுமணன் தகுதியிழப்பு செய்யப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக ஆசிய விளையாட்டு போட்டி நிர்வாகத்தினர் கூறுகையில், 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெண்கலம் வென்ற தமிழக வீரர் லட்சுமணன் ஓட்டப்பந்தய தடத்திற்கு வெளியே கால் வைத்ததால் தகுதியிழப்பு செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, 4-ம் இடம் பிடித்த சீனாவின் சாங்காங் ஷாவோ வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார் என தெரிவித்தனர். #AsianGames #LakshmananGovindan
×
X