search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Lakshmi devi"

    • வரலட்சுமி விரத பூஜை நடத்தப்படும் வீடுகளில் மகாலட்சுமி வாசம் செய்வாள்.
    • லட்சுமி வழிபாட்டால் நீண்ட ஆயுள், புகழ், செல்வம், உடல் நலம் உண்டாகும்.

    1. லட்சுமி பூஜை செய்யும் போது, நம் வீட்டுக்கு வரும் விருந்தினர்களை நாம் எப்படி உற்சாகமாக வரவேற்போமோ, அதே மாதிரி வாசலில் நின்று லட்சுமியை பாவனை செய்து அழைக்க வேண்டும்.

    2. வரலட்சுமி விரத பூஜை நடத்தப்படும் வீடுகளில் மகாலட்சுமி வாசம் செய்வாள்.

    3. லட்சுமி வழிபாட்டால் நீண்ட ஆயுள், புகழ், செல்வம், உடல் நலம் உண்டாகும்.

    4. வரலட்சுமி விரத பூஜை செய்தால் உடனடியாக திருமண யோகம் கை கூடும்.

    5. எட்டுவிதச் செல்வங்களை தருவதுடன் தாலிப் பாக்கியத்தையும் வரட்சுமி வழங்குகிறாள். இதனால் தான் மணமான பெண்கள் இத்தினத்தில் மகாலட்சுமியை போற்ற இவ்விரதத்தை மேற்கொள்ளுகின்றனர்.

    6. காலையில் உபவாசத்துடன் பூஜை அறையை கோலமிட்டு அலங்காரம் செய்ய வேண்டும். கலசத்தில் லட்சுமியை ஆவாகனம் செய்து நிவேதனங்கள் படைத்து வழிபட வேண்டும்.

    7. மகாலட்சுமிக்கு உகந்தது நெய் விளக்காகும். சகலவித செல்வத்தையும் வீட்டில் நலனையும் தருவது நெய் விளக்கு வழிபாடுதான். எனவே இதை மறக்கக் கூடாது.

    8. பூஜை செய்யும் போது மகாலட்சுமிக் குரிய பாராயணப் பாடல்களை பாடித் தியானிக்கலாம்.

    9. வரலட்சுமி நோன்பை கடைபிடித்தவர்கள் பெரும் பயனை அடைந்தார்கள் என்று பத்ம புராணம் கூறுகிறது.

    10. இது ஒரு மங்களகரமா விரதம், மனதிற்கு நிம்மதி தரும் விரதம். இம்மையும் மறு மையும் தரும் இனிய விரதமாகும்.

    • செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் ஐந்து முகம் கொண்ட குத்து விளக்கை ஏற்றி வழிபட வேண்டும்.
    • வீட்டிற்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், தண்ணீர் கொடுக்க வேண்டும்.

    அதிகாலையில் எழுந்ததும் வீட்டின் பின்பக்க வாசலை திறந்து வைத்து, அதன்பின் தலைவாசலைத் திறக்க வேண்டும்.

    செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் ஐந்து முகம் கொண்ட குத்து விளக்கை ஏற்றி வழிபட வேண்டும்.

    வீட்டிற்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், தண்ணீர் கொடுக்க வேண்டும்.

    மஞ்சள் கிழங்கு கொடுப்பதால் பல ஜென்மங்களில் செய்த பாவம் விலகி பாக்கியங்களும், பொருளும் சந்தோஷமும் பெருகும்.

    பவுர்ணமி தோறும் மாலையில் குளித்து சத்ய நாராயணரை துளசி, செண்பக மலர்களால் அர்ச்சனை செய்து பால் பாயாசம், கற்கண்டு, பழ வகைகள் வைத்து வணங்கிய பின்னரே, இரவு உணவு உட்கொள்ள வேண்டும்.

    வைரம் வெள்ளி பாத்திரங்கள் லட்சுமி கடாட்சம் உள்ளவர்களுக்கே கிடைக்கும்.

    ஒருவர் தனக்கு சீராக அளிக்கப்பட்ட வெள்ளிப் பாத்திரங்களை தன் காலத்தில் விற்கவோ, தன் பிள்ளைகளுக்கு கூட அன்பளிப்பாக கொடுக்க கூடாது. தன் காலத்திற்கு பின்னரே அவர்களுக்கு சேர வேண்டும்.

    • அதுமட்டுமல்ல தாத்ரீ பலம் என்பதும் நெல்லிதான். தாத்ரீ என்ற பதம் பூமாதேவியை குறிக்கும்.
    • ஹரிபலம் என்றாலும் நெல்லிக்கனிதான் இது விஷ்ணுவைக் குறிக்கும் பெயராகும்.

    லட்சுமி நெல்லி மரத்திலும் வாசம் செய்கிறாள்.

    அந்த ''நெல்லி'' அருநெல்லி மரமல்ல, சாதாரண பெருநெல்லி மரமே ஆகும்.

    நெல்லிக் கனியை ஆமலகம் என்று கூறுவார்கள்.

    நெல்லியை அரைத்து தேய்த்துக் குளித்தால் உடம்பின் அழுக்குகளையும், நெல்லிக்கனியை சாப்பிட்டால் நம் உடம்புக்குள் உள்ள அழுக்குகளையும் நீக்கும்.

    அதனாலயே அப்பழுக்கற்ற தூய தலைவன் விஷ்ணுவுக்கு அமலன் என்ற பெயர் உண்டு.

    அதுமட்டுமல்ல தாத்ரீ பலம் என்பதும் நெல்லிதான்.

    தாத்ரீ என்ற பதம் பூமாதேவியை குறிக்கும்.

    ஆம் பூமாதேவியும் தேவியின் அம்சம்தானே.

    ஹரிபலம் என்றாலும் நெல்லிக்கனிதான் இது விஷ்ணுவைக் குறிக்கும் பெயராகும்.

    எனவே பல இடங்களில் விஷ்ணு பக்தர்கள் நெல்லிமரத்தை மகாலட்சுமியாகவே எண்ணி வழிபடுகிறார்கள்.

    நெல்லி மரத்தின் நிழலில் நின்று தானம் செய்வதும் அன்னமளிப்பதும் மிகுந்த சிறப்புமிக்கது.

    அதிக பலன்களை தரக்கூடியது.

    நெல்லி இலைகளால் விஷ்ணுவையும் மகாலட்சுமியையும் அர்ச்சனை செய்து வழிபட்டால் புண்ணியம் கிடைக்கும்.

    • திருவஹிந்திரபுரத்தில் தாயாருக்கு வில்வ அர்ச்சனையே செய்யப்படுகிறது. வில்வ மரத்தில் லட்சுமி வாசம் செய்கிறாள் என்று சொல்லப்படுகிறது.
    • திருவஹிந்திரபுரத்தில் தாயாருக்கு வில்வ அர்ச்சனையே செய்யப்படுகிறது.

    லட்சுமிக்கு மிகவும் பிடித்தமான இலை வில்வம் என்பது பலருக்குத் தெரியாது.

    திருவஹிந்திரபுரத்தில் தாயாருக்கு வில்வ அர்ச்சனையே செய்யப்படுகிறது.

    வில்வ மரத்தில் லட்சுமி வாசம் செய்கிறாள் என்று சொல்லப்படுகிறது.

    சவுபாக்கிய சஞ்சீவினியில் லட்சுமி வில்வக்காட்டில் மரத்தடியில் தவம் செய்பவளாக வருணிக்கப்பட்டுள்ளது.

    வாமன புராணத்தில் லட்சுமியின் கைகளில் இருந்தே வில்வம் தோன்றியது என்று காத்யாயனர் கூறுகிறார்.

    காளிகா புராணத்தில் லட்சுமி வில்வமரங்கள் அடங்கிய காட்டிலேயே தவம் செய்தாள் என்று குறிப்பிடுகிறது.

    • திருப்பதி திருமலை தலத்தில் ஸ்ரீ விக்னேஸ் வரரின் ஆலயம் ஒன்று உள்ளது.
    • திருவாரூரில் ஸ்ரீ பஜூலட்சுமி என்று லட்சுமிக்கு ஒரு ஆலயம் உள்ளது.

    திருப்பதி திருமலை:-

    திருப்பதி திருமலை தலத்தில் ஸ்ரீ விக்னேஸ் வரரின் ஆலயம் ஒன்றுள்ளது. அதில் அஷ்டலட்சுமிகளான, ஸ்ரீ ஆதிலட்சுமி, ஸ்ரீ வீரலட்சுமி, ஸ்ரீ கஜலட்சுமி, ஸ்ரீ தான்யலட்சுமி, ஸ்ரீ விஜய் லட்சுமி, ஸ்ரீ தீப லட்சுமி, ஸ்ரீ தனலட்சுமி, ஸ்ரீ ஐஸ்வரியலட்சுமி எனும் திருநாமங்களோடு அர்ச்சாவதார மூர்த்திகளாக எழுந்தருளி அருள்பாலிக்கிறார்கள். இம்மூர்த்தங்களை ஜகத்குரு ஸ்ரீ ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்து வைத்தார்.

    ஸ்ரீ ரங்கம்:-

    ஸ்ரீ ரங்கம் அம்மா மண்டப வீதி புது அக்ரஹாரத்தில் அஷ்ட லட்சுமி மண்டபம் என்றே ஒரு மண்டபம் உள்ளது. அதில் நுழைவுப் பகுதி முன் வாயிலுக்கு ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி வாசல் என்பது பெயராகும். அம்மண்டபத்தினுள் எண் திசைகளுக்கும் ஒவ்வொன்றாக எட்டு லட்சுமி மூர்த்தங்கள் உள்ளன. ஒவ்வொன்றிற்கும் இரண்டிரண்டு திருநாமங்களும் உள்ளன.

    1. ஸ்ரீ வித்யலட்சமி - யசோலட்சுமி, 2. ஸ்ரீ தனலட்சுமி - கஜலட்சுமி, 3. ஸ்ரீ சந்தானலட்சுமி - தான்யலட்சுமி, 4. ஸ்ரீ தைரிய லட்சுமி - சித்தலட்சுமி, 5. ஸ்ரீ சாம்ராஜ்யலட்சுமி - மோக்ஷ லட்சுமி, 6. ஸ்ரீ சௌர்யலட்சுமி - வீர லட்சுமி, 7. ஸ்ரீ லட்சுமி - ஜயலட்சுமி, 8. ஸ்ரீ பிரசன்னலட்சுமி - சௌபாக்ய லட்சுமி எனும் திருநாமங்களாகும்.

    பெங்களூர்:-

    கர்நாடக மாநிலம், பெங்களூரில் விவேக நகருக்கு அருகில் உள்ள ஈஜிபுரம் எனும் இடத்தில ஸ்ரீ கோதண்ட ராம ஸ்வாமி திருக்கோவில் ஒன்றுள்ளது. இதில் பலகாலமாக அஷ்டல லட்சுமிகளை 8 கலசங்களில் ஆவாஹனம் செய்து அஷ்ட லட்சுமி பூஜை செய்து வந்தார்கள். இப்«பாது அங்கு ஸ்ரீ கந்த மரத்தால் (சந்தனமரம்) செய்யப்பட்ட தாருஜம், தாருமயீ எனும் வகை அஷ்ட லட்சுமிகளின் அர்ச்சா மூர்த்தங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாட்டில் உள்ளன. இது மிகவும் விசேஷமான மூர்த்தங்களாகும். செஞ்சந்தன மரத்தில் மஹாலட்சுமி வடிவத்தை சிற்ப முறைப்படி செய்து பூஜித்தால் லட்சுமி கடாக்ஷம் கிடைக்கும் என்பது பெரியோர்கள் வாக்கு.

    திருவலம்:-

    சென்னையில் இருந்து 120 கி.மீ தொலைவில் உள்ளது திருவலம் என்ற திருத்தலம். இத்தலத்தில் ஜகத்குரு, ஸ்ரீ ஆதி சங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட அஷ்டலட்சுமி திருக்கோவில் உள்ளது. இங்கு அஷ்டலட்சுமிகளும் இருந்து அருள்பாலிக்கின்றனர்.

    மதுராந்தகம்:-

    சென்னையில் இருந்து விழுப்புரம் செல்லும் சாலையில் உள்ள மதுராந்தகத்தில் இருக்கும் ஏரிகாத்தராமர் ஆலயத்தில் ஜனக வல்லித்தாயார் என்ற திருநாமம் கொண்டு பிராட்டியார் அருள்பாலித்து வருகிறாள். மேலும் அதே மதுராந்தகத்தில் தேரடித் தெருவிற்கு அருகில் ஸ்ரீ தேவி சரணம் என்ற வளைவுடன் கூடிய, சாஸ்த்திர அடிப்படையில் அமைக்கப்பட்ட நூதனமான ஒரு ஸ்ரீதேவி திருக்கோவில் உள்ளது. இங்குள்ள தாயாரின் திருநாமம் அஷ்டலட்சுமி சவுந்தர்ய மந்த்ர பீடேஸ்வரி ஸ்ரீதேவி என்பதாகும்.

    திருவாரூர்:-

    திருவாரூரில் ஸ்ரீ பஜூலட்சுமி என்று லட்சுமிக்கு ஒரு ஆலயம் உள்ளது. இக்கோவிலின் ஸ்தல விருட்சமான புன்னை மரத்தினடியில் தாயார் அவதாரம் செய்துள்ளார். எனவே இந்த பஜூலட்சுமிக்கு புன்னைப் பிராட்டி என்றும் ஒரு திருநாமம் வழங்கப்படுகிறது.

    • வெள்ளிக்கிழமை அன்று வீட்டிற்கு உப்பு வாங்குவது அதிர்ஷ்டம்.
    • செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் எண்ணெய் தேய்த்துக்குளிக்க வேண்டும்.

    பிரம்ம முகூர்த்த நேரம் என்ற அதிகாலை நேரத்திலே படுக்கையை விட்டு எழ வேண்டும். அந்த நேரத்தில் தேவர்களும், பித்ருக்களும் நம் வீடு தேடி வருவார்கள். அப்போது நாம் உறங்கக் கூடாது. காலையில் எழுந்ததும் வீட்டுக் கதவைத் திறக்கும் போது மகாலட்சுமியே வருக என்று 3 முறை கூற வேண்டும். காலையில் 4.30லிருந்து 6 மணிக்குள் வீட்டு வாச லில் சாணம் தெளித்து அரிசி மாவினால் கோலம் போட வேண்டும். இவ்வாறு செய்வதால் மகாலட்சுமியின் அருள் கிடைக்கும். காலையிலும், மாலையில் இருட்டுவதற்கு முன்பாக வீட்டில் விளக்கேற்ற வேண்டும். மாலையில் விளக்கு ஏற்றிய உடன் வெளியே செல்லக் கூடாது.

    விளக்கு வைத்த பிறகு தலைவாருதல், பேன் பார்த்தல், முகம் கழுவுதல் போன்றவை செய்யக்கூடாது. விளக்கு வைத்த பிறகு குப்பை, கூளங்களை வெளியே வீசக்கூடாது. பால், தயிர், பச்சைக் காய்கறிகள் ஆகியவற்றை இரவில் கடன் வாங்குதல், கடன்கொடுத்தல் கூடாது. நெற்றியில் எப்பொழுதும் குங்குமம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமம் கொடுக்குமுன் குடும்பத் தலைவி தான் குங்குமம் இட்டுக் கொண்டு பிறகு அவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.

    பால் பொங்கி வழியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வெள்ளிக்கிழமை அன்று வீட்டிற்கு உப்பு வாங்குவது அதிர்ஷ்டம் மற்றும் எல்லாவித செல்வங்களையும் கொடுக்கும். வெள்ளிக்கிழமைகளில் பணம் கடன் கொடுப்பது, அரிசி வறுப்பது, புடைப்பது ஆகியவை செய்யக்கூடாது.

    செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் எண்ணெய் தேய்த்துக்குளிக்க வேண்டும். பெண்கள் சனிக்கிழமை எண்ணெய் தேய்த்து குளிக்கக் கூடாது. வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், பூ ஆகியவற்றைக் கொடுக்க வேண்டும். ரவிக்கைத் துணி வைத்துக் கொடுத்தால் தட்சணையாக ஒரு ரூபாய் நாணயம் வைத்துக் கொடுக்கவும்.

    • வரலட்சுமி விரதம் இருக்கும் பெண்களுக்கு அஷ்டபோக பாக்கியங்களும் கிடைக்கும்.
    • மகாலட்சுமியை நவராத்திரி நேரத்தில் வணங்க சகல நன்மை கிடைக்கும்.

    1. மகாலட்சுமி தாமரைப் பூவில் வாசம் செய்பவள். சித்தி, புத்தி, போகம், முக்தி தருபவள்.

    2. மகாலட்சுமிக்கு ஈஸ்வரி, ஹரண்யமயி, ஹரிணி, சூர்யா, பிங்களா, புஷ்கரிணி, சந்திரா என்ற பெயர்களும் உண்டு.

    3. அவளுக்கு பிரியமான பூ 'செவ்வந்தி' எனப்படும் சாமந்திப்பூ.

    4. நெல்லிமரத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதால் துவாதசியன்று நெல்லிக்கனியை உணவில் சேர்த்துக் கொண்டால் ஏகாதசி விரதத்தின் பலன் கிடைக்கும்.

    5. ஆதி சங்கரருக்கு துவாதசியன்று நெல்லிக்கனி தானம் செய்த பெண்மணிக்கு அவர் கனகதாரா ஸ்தோத் திரம் பாடி பெருஞ்செல்வம் கிடைக்கச் செய்தார்.

    6. மகாலட்சுமி வில்வ மரத்தில் இருப்பதால் அதை மாதப்பிறப்பு, அமாவாசை, பவுர்ணமி, சதுர்த்தி, அஷ்டமி, நவமி, திங்கட்கிழமை ஆகிய நாட்களில் வில்வ த்தை மரத்திலிருந்து பறிக்கக் கூடாது.

    7.பசுவின் பின்புறத்தில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். இதனால் கோவில்களில் காலையில் கோபூஜை செய்தபின் தரிசனம் ஆரம்பமாகிறது.

    8. மகாவிஷ்ணுவிற்குப் பிடித்த துளசி லட்சுமியின் அம்சம் ஆகும். வீட்டில் துளசி மாடம் வைத்து வழிபட்டு வந்தால் எல்லாச் செல்வங்களும் கிடைக்கும்.

    9.வாழை, மாவிலை, எலுமி ச்சம்பழம் ஆகி யவை களிலும் மகா லட்சுமி வாசம் செய்கி றாள். அதனா ல்தான் சுபகாரியங்களில் இவை பயன்படு த்தப்படு கின்றன.

    10. தலைமுடியின் முன் வகிட்டில் மகாலட்சுமி வாசம் செய்வதால் திருமணமான பெண்கள் முன்வகிட்டில் குங்குமம் இட்டுக் கொள்கின்றனர்.

    11. தீபாவளியன்று அதிகாலை மட்டும் மகாலட்சுமி நல்லெண்ணையில் வாசம் செய்கிறாள்.

    12. யானையின் முகத்திலும் குதிரையின் முகத்திலும் லட்சுமி வாசம் செய்கிறாள்.

    13. ஸ்ரீவைஷ்ணவத்தை நிலை நாட்டிய வேதாந்த தேசிகர் 'ஸ்ரீஸ்துதி' என்னும் ஸ்தோத்திரத்தில் ஸ்ரீமகாலட்சுமியை

    மங்களத்துக்கெல்லாம் மங்களமானவள் என்று புகழ்ந்து பாடுகிறார்.

    14. ஒரு பக்தனுக்கு பகவானின் அனுக்ரகம் வேண்டும் என்றால் புருஷகார பூதையான மகாலட்சுமியை முதலில் சரணடைய வேண்டும்.

    15. நம்மாழ்வார் 'அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா' என்ற கணப்பொழுதுகூட பிரியாது மகாவிஷ்ணுவுடன் கூடி இருக்கும் மகாலட்சுமியை சரணடைவதே உயர்ந்தது என்று கூறியுள்ளார்.

    16. திரு மழிசையாழ் வாருக்கு குழந்தைப் பருவத்தில் ஞானப்பால் ஊட்டியது மகாலட்சுமியே.

    17. குபேரனிடம் செல்வம் இருந்தாலும் அத்துடன் புகழ், ஆரோக் கியம், நல்வாழ்வு போன்ற பல செல்வங்களை உரியவர்களுக்கு வாரி வழங்குபவள் ஸ்ரீ மகாலட்சுமியே.

    18. மகாவிஷ்ணுவுடன் இருக்கும் பொழுது லட்சுமிக்கு இரண்டு கரங்கள். ஆனால் தனியாக சன்னதியிலோ அல்லது தனிக் கோவிவிலோ நான்கு கரங்கள் கொண்டவள். முன் இரு கரங்கள் அபய வரத ஹஸ்தங்கள். பின் இரண்டு கரங்களில் தாமரை மலர் ஏந்தி இருப்பாள்.

    19. வீரம் உடையவர்கள், சோம்பல் இல்லாமல் சுறுசுறுப்பாக இருப்பவர்கள், தவம் உடையவர்கள், ஈகை குணம் கொண்டவர்கள் செல்வத்தை நன்குஅனு பவிப்பவர்கள் ஆகியவர்களை நான் அடைகிறேன் என்கிறாள் மகாலட்சுமி.

    20. மகாலட்சுமி ஓரிடத்தில் நிலைக்க மாட்டாள். அதனால் சஞ்சலா, சபலா என்ற பெயர்கள் அவளுக்கு உண்டு.

    21. லட்சுமி பிரம்மனுடன் பிறந்தவள். இருவர் நிறமும் செம்பொன் நிறம்.

    22. லட்சுமிக்கு உலூ கம் எனப்படும் ஆந்தை ஒரு வாகனம். மேற்கு வங்கத்தில் லட்சுமி பூஜையின்போது ஆந்தையை வழிபடுவது வழக்கம்.

    23. மகா லட்சுமியின் பரிபூரண அருளைப் பெற்றது சுக்கிர வாரம் எனப்படும் வெள்ளிக்கிழமை. சுக்கி ரனின் அதி தேவதை மகாலட்சுமி. எனவே வெள்ளிக்கி ழமைகளில் சூரியன் உதயமான இரண்டு மணி நேரத்திற்குள் பூஜிப்பது. தரிசனம் செய்வது ஆகியவை மகாலட்சுமியின் அருள்தரும்.

    24. லட்சுமிக்கு ஏற்ற நாள் வியாழக்கிழமை மாலை - குேபர காலம் எனப்படுகிறது. பவுர்ணமியில் வரும் வியாழன் சிறப்பு. வளர்பிறை பஞ்சமி, வெள்ளியன்று வரும் அஷ்டமியும் சிறந்தது.

    25. லட்சுமியின் திருக்கரங்கள் 'ஸ்வர்ண ஹஸ்தம்' எனப்படுகிறது. எல்லா லட்சுமிகளும் அபய வரத சஸ்தத்துடன் அருள்புரிகின்றார்கள்.

    26. லட்சுமியின் பெருமையை ஸ்ரீசூக்தம், ஸ்ரீசுதுதி, கனகதாரா ஸ்தோத்திரம், மகாலட்சுமி, அஷ்டகம், அஷ்டோத்திர சதநாமாவளி ஸ்தோத்திரம் போன்றவை விளக்குகின்றன.

    27. வரலட்சுமி விரதம் இருக்கும் பெண்களுக்கு அஷ்டபோக பாக்கியங்களும் கிடைக்கும்.

    28. லட்சுமி செல்வத்தின் அதிபதி. தீபாவளி அன்று லட்சுமி பூஜை செய்வதால் செல்வம் வளரும்.

    29. புதுக்கணக்கு எழுதுபவர்கள் தீபாவளி அன்று லட்சுமி பூஜை செய்து விட்டு நோட்டுப் புத்தகங்களின் மீது சந்தனம், மஞ்சள், குங்குமம் வைத்து மலர்தூவி பூஜை செய்து பிறகு வியாபாரத்தை ஆரம்பிப்பார்கள்.

    30. வருத்தத்தால் மகாவிஷ்ணுவைப் பிரிந்த மகாலட்சுமி விஷ்ணுவை திரும்பவும் சேர்ந்த இடம் ஸ்ரீவாஞ்சியம் என்ற தலம். நன்னிலத்திற்கு அருகில் உள்ளது. ஸ்ரீ என்றும், திரு என்றும் அழைக்கப்படும் மகாலட்சுமியை விஷ்ணு வாஞ்சையால் விரும்பி சேர்ந்த இடம் இத்தலம் என்பதால் இத்தலத்திற்கு ஸ்ரீவாஞ்சியம் (திருவாஞ்சியம்) என்ற பெயர் ஏற்பட்டது.

    31. மகாலட்சுமியை நவராத்திரி நேரத்தில் வணங்க சகல நன்மை கிடைக்கும்.

    32. அதிகாலையிலும், மாலையிலும் வீட்டில் பெண்கள் விளக்கேற்றி வைத்து லட்சுமியை வரவேற்க லட்சுமி சுலோகங்கள், அஷ்டகம் போன்றவற்றைச் சொல்லிக் கொண்டிருந்தால் லட்சுமியின் அருள் கிடைக்கும்.

    33. இந்திரன் மகாலட்சுமியை 4 பாகங்களாக நிலை பெறச் செய்தான். அவை பூமி, அக்னி, நீர் மற்றும் உண்மை ேபசும் மனிதர்கள். இந்த இடங்களில் மகாலட்சுமி நிலையாக இருப்பாள்.

    34. கோமாதா (பசு)வை தெய்வமாக மகாலட்சுமியின் அம்சமாகக் கருதி பூஜை செய்வது நம் நாட்டில் உள்ள பழக்கம். பசுவின் பின்புறம் மகாலட்சுமி வசிக்கிறாள் என்பதால் அதிகாலையில் பசுவின் பின்புறத்தைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக் கொள்ள வேண்டும்.

    35. லட்சுமிக்கு முன் தோன்றியவள் மூதேவி. லட்சுமிக்குப் பிறகு பிறந்தவள் வாருணி. இவள் மது போன்ற மயக்கம் தரும் வஸ்துக்களுக்கு தேவதை.

    36. லட்சுமியின் திருக்குமாரர்கள் கர்தமர், சிக்லீதர்.

    37.மகாலட்சுமியை நாராயணன் திருப்பாற்கடலில் சித்திரை, தை, புரட்டாசி மாதங்களில் பூஜிக்கிறார்.

    38.பிரம்ம தேவன் மகாலட்சுமியை புரட்டாசி மாத சுக்லாஷ்டமியில் பூஜிக்கிறார்.

    39.மனுதேவன் மகாலட்சுமியை வருஷ முடிவிலும், தை, மாசில மாத சங்கராந்தியிலும் பூஜிக்கிறார்.

    40.தேவேந்திரன் மகாலட்சுமியை பூஜித்து அஷ்ட ஐஸ்வர்யங்களையும், ஐராவத்தையும், அமராவதி பட்டணத்தையும் பெற்றார்.

    • பட்டுத்துணியல் அவசியம் அம்மனை அலங்கரிக்க வேண்டும்.
    • வெள்ளை கறுப்பு நிறத்தில் வஸ்திரம் இருக்கக்கூடாது.

    தீர்க்க சுமங்கலி வரம் பெறவும், செல்வ வளம் பெருகவும், சகல ஐஸ்வரியங்களையும் பெறவும் வரலட்சுமி நோன்பு கடைபிடிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தில் வரும் பெளர்ணமி தினத்திற்கு முன்வரும் வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரத தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

    இந்த விரதத்தின் போது சில விசயங்களை அவசியம் கடைபிடிக்க வேண்டும் என்று ஆன்மீக சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. மறந்தும் கூட சில தவறுகளை செய்யக்கூடாது என்றும் சொல்லப்பட்டுள்ளது. திருமணமான பெண்களும், திருமணத்திற்காக காத்திருக்கும் கன்னிப்பெண்களும் வரலட்சுமி விரதத்தைக் கடைபிடிக்க வேண்டும். கணவரின் ஆயுள் பலம் வேண்டி சுமங்கலிப்பெண்கள் இந்த விரதத்தை கடைபிடிக்கின்றனர். இந்த விரதம் கடைபிடிப்பதால் ஆயுள், ஆரோக்கியம் மட்டுமல்லாது செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை.

    சில ஆண்டுகளில் ஆடி மாதத்திலும் இந்த விழா கொண்டாடப்படும். திருமணத்திற்குப் பிறகு வரும் முதல் வரலட்சுமி விரதத்தன்று புதுமணம் முடித்த பெண்ணிற்கு இந்நோன்பு எடுத்து வைக்கப்படும். புகுந்த வீட்டில் இந்நோன்பு அனுசரிக்கும் வழக்கம் உள்ளது. வரலட்சுமி நோன்பை கடைபிடித்தவர்கள் பெரும் பயனை அடைந்தார்கள் என்று பத்ம புராணம் கூறுகிறது.

    இன்று காலை நல்ல நேரம் 9 மணி முதல் 10.30 மணிக்குள் சாமி கும்பிடலாம். மாலை 4.45 முதல் 5.45 வரை நல்ல நேரமாக உள்ளது. அந்த நேரத்தில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யலாம். வரலட்சுமி விரதத்தின் போது வீடு சுத்தமாக இருக்க வேண்டும். சுத்தம்தான் மகாலட்சுமிக்கு பிடித்தமானது.

    சூரிய உதயத்திற்கு முன்னாள் எழுந்து வாசல் தெளித்து கோலம் போட வேண்டும். உங்க கையால் கோலம் போட்டு மகாலட்சுமியை அழைக்க வேண்டும். பூஜை செய்யப்போம் இடத்தில் இழை கோலம் போட்டு காவியிட்டு ஒரு தட்டில் அட்சதையை பரப்பி அம்மனை ஆவாஹனம் செய்யப் போகும் கலசத்தை அதன் மீது வைக்க வேண்டும்.

    கலசத்தினுள் அட்சதையுடன் வெற்றிலை பாக்கு, மஞ்சள் ஒரு வெள்ளிக் காசு மற்றும் ஒரு எலுமிச்சைப் பழமும் வைத்து மாவிலையை கலசத்தின் மீது வைத்து அதன் மீது தேங்காயை வைக்கிறோம். அம்மனின் முகத்தை கலசத்தோடு இணைத்து வைக்க வேண்டும்.

    பட்டுத்துணியல் அவசியம் அம்மனை அலங்கரிக்க வேண்டும். சரிகை உள்ள துணியால் அலங்கரிக்க வேண்டும். மஞ்சள் நிறம், சந்தன நிறத்தில் வஸ்திரம் இருந்தால் அற்புதமானது. வெள்ளை கறுப்பு நிறத்தில் வஸ்திரம் இருக்கக்கூடாது. கலசத்தில் ஸ்ரீ வரலட்சுமி நமஹ என்று இருக்க வேண்டும்.

    அம்மன் அலங்காரம் செய்த உடன் முடிக்கயிறு தயாரிக்கும் போது 9 முடிச்சுகள் போட்டிருக்க வேண்டும். வெள்ளிக்கிழமை காலைதான் இந்த முடிச்சி போடவேண்டும். ஒன்பது முடிச்சு இருக்கும் நோன்புக்கயிறுகளை வயது மூத்த சுமங்கலிகள் கைகளால் கட்டிக்கெள்ள வேண்டும். வரலட்சுமி பூஜைக்கு சுமங்கலி பெண்களை குங்குமம் கொடுத்து அழைப்பது அவசியம்.

    சர்க்கரைப் பொங்கல் பாயாசம், கொழுக்கட்டை நைவேத்தியம் செய்வது அவசியம். பூஜை செய்பவர்கள் பட்டு வஸ்திரம்தான் அவசியம் அணிய வேண்டும். சரிகை இருப்பது அவசியம். தலைகுளித்து விட்டு தலையை கட்டிக்கொண்டே பூஜை செய்யக்கூடாது தலையை நன்றாக காய வைத்து பின்னி பூஜை செய்ய அமரவேண்டும். தலையை விரித்துப்போட்டுக்கொண்டு பூஜை செய்யக்கூடாது. தலையில் இருந்து முடி கீழே விழுந்தால் சனி தோஷம் வந்து விடும்.

    லட்சுமி பூஜை செய்வதற்கு முன்பாக விநாயகர் வழிபாடு அவசியம் செய்ய வேண்டும். வரலட்சுமி பூஜைக்கு சுமங்கலி பெண்களை அவசியம் அழைப்பது அவசியம். பூஜைக்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், நோன்புக்கயிறு, வளையல்கள், வெற்றிலை பாக்கு, ரவிக்கை துணி கொடுத்து ஆசி பெற வேண்டும்.

    வரலட்சுமி பூஜையை மனநிறைவோடு செய்ய வேண்டும். விரிவாக செய்ய முடியாதவர்கள் நாளைய தினம் ஒரு ரூபாய்க்கு கற்பூரம் ஏற்றி வரலட்சுமியை வழிபட்டாலும் லட்சுமி கடாட்சம் கிடைக்கும். மஞ்சள் குங்குமம் பூ வைத்து முடி கயிறு வைத்து பூஜை செய்யலாம். எட்டு விதச் செல்வங்களை தருவதுடன் தாலிப் பாக்கியத்தையும் வரலட்சுமி வழங்குகிறாள்.

    இதனால்தான் மணமான பெண்கள் மகாலட்சுமியை போற்ற வரலட்சுமி விரதத்தை மேற்கொள்ளுகின்றனர். வரலட்சுமி விரத பூஜை செய்தால் உடனடியாக திருமண யோகம் கைகூடும். லட்சுமி பூஜை செய்யும் போது, நம் வீட்டுக்கு வரும் விருந்தினர்களை நாம் எப்படி உற்சாகமாக வரவேற்போமோ, அதே மாதிரி வாசலில் நின்று லட்சுமியை பாவனை செய்து அழைக்க வேண்டும்.

    வரலட்சுமி விரத பூஜை நடத்தப்படும் வீடுகளில் மகாலட்சுமி வாசம் செய்வாள். லட்சுமி வழிபாட்டால் நீண்ட ஆயுள், புகழ், செல்வம், உடல் நலம் உண்டாகும்.

    • ஸ்ரீலட்சுமிக்கு அருகம்புல் மிகவும் விசேஷம்.
    • அம்மனுக்கு ஆரத்தி எடுத்த பின்னர் கலசத்தை அரிசி வைத்திருக்கும் பானையில் வைக்க வேண்டும்.

    திருமணமான பெண்கள், தங்கள் திருமணத்தை அடுத்து வரும் வரலட்சுமி பூஜையில் இருந்து இதை ஒவ்வொரு வருடமும் செய்ய வேண்டும். வரலட்சுமி விரதத்தின் போது வீட்டுக்கு விலக்காக இருந்தால் அடுத்து வரும் வெள்ளிக்கிழமை இந்த பூஜையைச் செய்யலாம். இதைச் செய்யும்போது, சிறு பெண்களும் உடனிருந்து சரடைக் கட்டிக் கொள்ளலாம். மறுநாள் அம்மனுக்கு ஆரத்தி எடுத்த பின்னர் கலசத்தை அரிசி வைத்திருக்கும் பானையில் வைக்க வேண்டும்.

    எல்லோராலும் மிக விரிவாக செய்ய இயலாவிட்டாலும், ஈடுபாட்டோடு தெரிந்த பாடல்களைப் பாடி, மகாலட்சுமி அஷ்டோத்திரம் சொல்லி, பூக்களால் அர்ச்சனை செய்து, நிவே தனம் செய்து, நோன்பு சரடை கையில் கட்டி நிவேதனத்தை எல்லோருக்கும் கொடுத்து, வயதான சுமங்கலிப் பெண்களை வணங்கி தானங்கள் செய்து இந்த விரத பூஜையை நிறைவு செய்யலாம்.

    கொஞ்சம் சாஸ்திரபடி விரதமிருந்து பூஜையைச் செய்ய விரும்பினால், விநாயகர் பூஜை தொடங்கி, சங்கல்பம், கலச பூஜை, பிராணபிரதிஷ்டை, தியானம், ஷோடசோபசாரம், அங்க பூஜை, லட்சுமி அஷ்டோ த்ரம், தோரக்ரந்தி பூஜை, பிரார்த்தனை, ஆரத்தி என்று விரிவாகச் செய்ய வேண்டும்.

    இந்த விரதத்தை அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான நந்தனார், விக்ரமாதித்த மன்னன் அனுஷ்டித்து சகல சவுபாக்கியங்களையும் பெற்றனர். ஸ்ரீலட்சுமிக்கு அருகம்புல் மிகவும் விசேஷம். அருகம்புல்லால் அஷ்ட லட்சுமியை பூஜிப்பதால் நாம் அருகுபோல் வேரூன்றி ஆல்போல் தழைத்து பெருவாழ்வு வாழ்வோம் என்பது சான்றோர் வாக்கு!

    கும்ப கலசத்தினுள் பச்சரிசி, எலு மிச்சம்பழம், பொற்காசுகள் ஆகியவற்றை இடவேண்டும். கும்பத்தை வெண்மையான பட்டு வஸ்திரத்தால் அலங்கரித்து அம்பாளின் முகத்தை அமைக்க வேண்டும். மஞ்சள் சரடை கும்பத்தின் மீது சாத்த வேண்டும். அம்பாளை கிழக்கு முகமாக எழுந்தருளச் செய்ய வேண்டும். நாம் வலது பக்கம் அமர்ந்து பூஜை செய்ய வேண்டும். மஞ்சள் சரடையும் கும்பத்துடன் சேர்த்து பூஜிக்க வேண்டும்.

    பூக்களாலும், தூப தீபங்களாலும் அம்மனை ஆராதித்து மஞ்சள் சரடை எடுத்து வலது மணிக்கட்டில் பக்தி சிரத்தையுடன் கட்டிக்கொள்ள வேண்டும். உற்றார் உறவினர்களுக்கு நிவேதனங்கள் கொடுத்த பிறகுதான் நாம் நிவேதனம் உண்ண வேண்டும். அன்று முழுவதும் பக்தி சிந்தனையுடன் அஷ்டலட்சுமி தோத்திரங்களைச் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். இரவில் கலசத்தை அரிசி பாத்திரத்திற்குள் வைப்பது விசேஷம். அதனால் அன்னபூரணியின் பேரருள் இல்லத்தில் நிரந்தரமாக நிறைந்திருக்கும்!

    அட்சயமாக இருப்பவள் அம்பாள்! கலசத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட தேங்காயை அதற்கடுத்த வெள்ளிக்கிழமை உடைத்து பாயாசம் செய்யலாம். இவ்விரதத்தை கடை பிடிப்பதால் கர்ம நோய்கள் நீங்கும். நல்ல ஆரோக்கியம் ஏற்படும். திருமணம் நடைபெறும். புத்திரபாக்கியம் உண்டாகும்.வரலட்சுமி விரத மகிமையால், நாம் சகல சவுபாக்கியங்களையும் பெற்று செல்வ செழிப்புடன் வாழலாம்.

    • வரலட்சுமி பூஜையை சுமங்கலிகள் செய்தால் அவர்களது மாங்கல்ய பாக்கியம் நீடிக்கும்.
    • கன்னிப்பெண்கள் செய்தால் நல்ல குடும்ப வாழ்க்கை அமையும்.

    வரலட்சுமி பூஜையை செய்யும் போது வீட்டை மிகவும் சுத்தமாக வைத்து, பூஜை அறையை நன்கு அலங்கரித்து, ஒரு பெரிய விசேஷம் போல் பெரும்பாலா னவர்கள் செய்வார்கள். இந்த பூஜையை விரதம் இருந்து, சுமங்கலிகள் செய்தால் அவர்களது மாங்கல்ய பாக்கியம் நீடிக்கும். கன்னிப்பெண்கள் செய்தால் நல்ல குடும்ப வாழ்க்கை அமையும்.

    வரலட்சுமி பூஜையின் முதல் நாள் வீட்டை நன்கு பெருக்கி, துடைத்து, மாக்கோலமிட்டு செம்மண் பூச வேண்டும். மேலும் வாசற்படிக்கு மஞ்சள், குங்குமப் பொட்டு வைத்து அலங்கரிக்க வேண்டும். வீட்டின் தென் மேற்கு மூலையில் மாக்கோலமிட்டு செம்மண் இட்ட ஒரு பலகையின் மேல் தலைவாழை இலை வைத்து, அதில் சிறிது பச்சரிசியைப் பரப்பி, அதன் மேல் அம்மன் கலசத்தை வைக்க வேண்டும்.

    மேலும் பழங்கள், இனிப்புகள் வாங்கி வைக்க வேண்டும். கலசம் செய்ய ஒரு சொம்பை எடுத்து, அதில் அரிசி அல்லது தண்ணீரை நிரப்பி, மாவிலைக் கொத்தும் தேங்காயும் வைத்து, தகரத்தால் வெள்ளி முலாம் பூசப்பட்ட அம்மன் முகத்தை, அந்த தேங்காயில் வைத்து பத்திரமாக கட்டிக் கொள்ள வேண்டும். பின் ஒரு சிறு சேலைத்துணியை அந்த கலசத்தில், சேலையை கட்டுவது போல் கட்டிவிட வேண்டும். பின் அம்மனுக்கு வீட்டில் இருக்கும் நகைகள் மற்றும் அழகான பூக்களால் அலங்கரிக்க வேண்டும். இப்போது கலசமானது தயாராகி விட்டது.

    பூஜை செய்யும் முன் கடவுளுக்கு நைவேத்தியம் செய்ய பால் பாயாசம் செய்து வைக்கலாம். பூஜையில் ஒன்பது முடிச்சுடைய மங்கள கரமான மஞ்சள் கயிற்றைப் பூஜையில் வைத்து வழிபட வேண்டும். பின்பு அந்த கயிற்றை வலது மணிக்கட்டில் கட்ட வேண்டும். அதிலும் விரதம் இருப்பவர்கள் அந்த தினத்தில் லட்சுமி துதி, லட்சுமி வரலாறு போன்றவற்றைச் சொல்லி தங்களை முழுமையாக வழி பாட்டில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.

    பின்பு சுமங்கலிப் பெண்களை அழைத்து, பூஜை முடிந்ததும், அவர்க ளுக்கு மஞ்சள், குங்குமம், வெற்றிலை, பாக்கு போன்ற தட்சணைகளைக் கொடுத்து அனுப்ப வேண்டும். இவ்வாறு பூஜை செய்தால் வீட்டில் அனைத்து ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    • அஷ்ட லட்சுமிகளில் அடிப்படையானவள் தைரிய லட்சுமி தான்.
    • மனித வாழ்வுக்கு ஆதாரமாக விளங்கும் எட்டு வித செல்வங்களுக்கு மகாலட்சுமி அதிதேவதையாகும்.

    அஷ்ட லட்சுமிகளில் அடிப்படையானவள் தைரிய லட்சுமி தான். இதை விளக்குவதற்கு ஒரு கதை. போஜ மகாராஜாவிற்கு அஷ்டலட்சுமிகளின் பாக்கியம் இருந்து வந்தது. அவன் அவர்களை தினம் பூஜித்து வந்தான். ஒருநாள் பூஜையின் போது அவர்களின் முகம் வாடியிருப்பதை கண்டு காரணம் கேட்டான். அவர்கள் நாளையுடன் உன்னுடன் எங்களுக்கு தொடர்பு அறுபடுகிறது. நாளை நாங்கள் உன்னை விட்டுப் போகிறோம். நீ இத்தனை நாட்கள் எங்களை வழிபட்டு வந்ததற்காக நீ கேட்கும் வரத்தை தருகிறோம் என்றார்கள்.

    சரி நாளை நீங்கள் போகும் போது அவ்வரத்தை கேட்கிறேன் என்று போஜன் கூறிவிட்டான். மறுநாள் வந்தது, ஒவ்வொரு லட்சுமியாக அவனிடம் விடைபெற்றுக் கொண்டார்கள். அவன் யாரிடமும் எவ்வரமும் கேட்கவில்லை. ஏழு லட்சுமிகள் போன பின்பு கடைசியாக தைரிய லட்சுமி வந்தாள். அம்மா நான் கேட்கும் வரம் நீ மட்டும் என்னிடம் தங்க வேண்டும் என்பதே என்றான் போஜன்.

    எட்டு வித செல்வங்கள்:

    மனித வாழ்வுக்கு ஆதாரமாக விளங்கும் எட்டு வித செல்வங்களுக்கு மகாலட்சுமி அதிதேவதையாகும். மகாலட்சுமியின் எட்டு விதமான உருவங்களை, முழுமையான பக்தியோடு வழிபடும் எவரும் மகாலட்சுமியின் அருளால் இன்பமும் மகிழ்ச்சியும் இழையோடும் எட்டு விதமான அஷ்ட போக வாழ்க்கையைப் பெறுவார்கள். அவை வருமாறு:-

    1.குடும்பத்தில் அன்பும், பண்பும், அழகும் கொண்ட, கணவன்-மனைவி அமைவார்கள்.

    2.மன உல்லாசத்துக்கு ஆதாரமாக விளங்கும் சிறந்த உடைகளைப் பெறுவார்கள்.

    3.அழகு மிளிரும் அணிகலன்களை அடைவார்கள்.

    4.ருசி மிளிரும் உணவு வகைகள் கிடைக்கும்.

    5.நலன் தரும் தாம்பூல வகைகள் குறைவில்லாமல் கிடைக்கும்.

    6.அற்புதமான நறுமணப் பொருள்களைப் பெறுவார்கள்.

    7.மனத்திற்கு மகிழ்ச்சியூட்டும் இன்னிசை.

    8.மன உல்லாசத்துக்கு உதவும் மண மலர்கள் கிடைக்கும்.

    இந்த எட்டு போகங்களும் முழுமையாக அமையப் பெற்றதுதான் உயர்ந்த வாழ்க்கை. பக்தன் கேட்ட வரத்தின்படி தைரியலட்சுமி மட்டும் அங்கேயே தங்கி விட்டாள். மறுநாள் போஜன் பூஜைக்கு புறப்படும் போது தினம் எட்டு லட்சுமிகளை பூஜிப்பேன், இன்று ஒரு லட்சுமியை மட்டுமே பூஜிக்க போகிறேன் என்று நினைத்துக் கொண்டு பூஜைக்கு போனான். அங்கு பூஜாக் கிரகத்தில் அஷ்ட லட்சுமிகளும் இருக்கக்கண்டு ஆச்சரியம் அடைந்தான். நீங்கள் ஏழு பேரும் நேற்று போய் விட்டீர்களே, இப்போது இங்கு இருக்கிறீர்களே என்று கேட்டான் போஜன்.

    எங்கள் தலையில் தைரிய லட்சுமி எங்கு இருக்கிறாளோ அங்கு நாங்கள் ஏழு பேரும் இருக்க வேண்டும் என்று எழுதியிருக்கிறது. நீ தைரிய லட்சுமியை உன்னுடனேயே இருத்திக்கொண்டதால் நாங்கள் மீண்டும் இங்கேயே வந்து தங்க நேர்ந்தது என்றார்கள் அந்த ஏழு லட்சுமிகள்.

    • ஸ்ரீலட்சுமி திருமாலின் வட்சத் தலத்தில் நித்திய வாசம் புரிகின்றாள்.
    • ஸ்ரீ லட்சுமியை சாமந்திப் பூ, தாழம் பூ இலைகளாலும் அர்ச்சிக்கலாம்.

    ஸ்ரீலட்சுமி திருமாலின் வட்சத் தலத்தில் நித்திய வாசம் புரிகின்றாள். சுமங்கலிகள், பூரண கும்பம்-மஞ்சள், குங்குமம், திருமண், சூர்ணம், கோலம், சந்தனம், வாழை, மாவிலைத் தோரணம், வெற்றிலை, திருவிளக்கு, யானை, பசு, கண்ணாடி, உள்ளங்கை, தீபம் ஆகிய லட்சுமிகரமான மங்கலப் பொருட்களில் மகா லட்சுமி நித்தியவாசம் புரிகிறாள்.

    அழகு, தைரியம், அடக்கம், அறிவு, ஆற்றல், தர்மசிந்தனை, பொறுமை, தெய்வபக்தி, ஐம்புலன் அடக்கம், சத்துவ குணம் இத்தகைய மனோபாவம் உடைய மனிதர்களிடத்தும் திருமகள் நிலையாக வாசம் செய்கின்றாள்.

    தேவர்களிடத்திலும் பிரம்ம ஞானியர்களிடத்திலும் பரமன் அடியார்களிடத்திலும் பக்தி உள்ளோர் இருதயங்களிலும், கிருகஸ்தர்களிடத்திலும், பசுக்களிடத்திலும், அந்த பசுக்களை பராமரிக்கும் பெண்களிடத்திலும் ஸ்ரீதேவி நித்யவாசம் புரிகிறாள்.

    வில்வ மரம், நெல்லி மரம், துளசி, மஞ்சள் ஆகிய மரம் செடிகளிலும் ஸ்ரீலட்சுமி வசிக்கிறாள். ஸ்ரீ லட்சுமியை வில்வத்தால் அர்ச்சித்து பூஜிப்பது மிகவும் விசேஷம். அவ்வாறு அர்ச்சிக்கும் போது, வில்வத்தை தளப் பக்கமாக பூஜிக்க வேண்டும். ஏன் என்றால் வில்வ தளத்தில் அமிர்த தாரையாக லட்சுமி வாசம் செய்கிறாள். அதேபோல் தாமரை மலரால் பூஜிக்கும் போதும் தாமரையின் பூ உள்ள பக்கமாக பூஜிக்க வேண்டும்.

    ஸ்ரீ லட்சுமியை சாமந்திப் பூ, தாழம் பூ இலைகளாலும் அர்ச்சிக்கலாம். ஸ்ரீரங்க சேத்திரத்தின் தல விருட்சம் வில்வம், திருவகீந்தபுரத்து ஹேமாம் புஜநாயகி தாயாருக்கு வில்வார்ச்சனை தான் செய்து வருகிறார்கள்.

    வில்வ மரத்தைப் பிரதட்சணம் செய்வது ஸ்ரீ லட்சுமியை வலம் வருவதற்கு சமமாகும். திருமலை ஸ்ரீ வெங்கடேச பெருமானுக்கு மார்கழி மாதம் வில்வார்ச்சனை செய்கிறார்கள். வைகாசன ஆகமத்தின் போது வில்வம் உபயோகப்படுத்தப்படுகிறது.

    ஸ்ரீ லட்சுமிக்கு வில்வம் விசேஷம் என்பதனை ஸ்ரீ சுக்தத்தில், "ஆதித்ய வர்ணே தபஸோதி ஜாதோ வனஸ்பதி ஸ்தவ வ்ருஷோதபில்வ" என்று சொல்லப்பட்டுள்ளது. "சூரியனின் வர்ணத்தோடு கூடியவளே! தபசினாலே உணரப்படுபவளே! உன்னுடைய வனஸ்பதி பில்வ விருசமாகும்" என்பது பொருள்.

    இதேபோல் மற்றொரு சுலோகத்தில், தஸ்ய பவானி தபா சானு தந்து மாயாந் தரா யாஸ்ச பாக்யா அலட்சுமி என்று சொல்லப்பட்டுள்ளது. அதன் பழங்கள், மாயையான தடைகளை நீக்கி, அலட்சுமி நிலைக்கு (திருவின்மை) புறம்பானவர்களாக (லட்சுமிகரமாக) ஆக்கும்.

    ஸ்ரீலட்சுமி தவம் செய்வதற்கு வில்வ மரத்தடியில் எழுந்தருளினாள் என்பதைப் பற்றி வாமன புராணம் சொல்கிறது. வாமன புராணத்தில் திருமகளின் திருக்கரங்களில் இருந்து வில்வ விருட்சம் தோன்றியது என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் வில்வ பத்திரம் சிவ சொரூபம், வில்ப மர முட்கள் சக்தி வடிவம், கிளைகள் வேதம், வேர்கள் 14 கோடி ருத்ரர்கள். இப்பேற்பட்ட மந்திர சக்தி சொரூபமான வில்வ மரமே ஸ்ரீ லட்சுமி சொரூபமாக விளங்குகிறது என்பது புராணம்.

    நெல்லி மரம் திருமாலின் பேரருளைப் பெற்றது. அது காரணம் பற்றியே நெல்லி மரத்தை "ஹரி பலம்" என்று கூறுவர். நெல்லிக்கனி இருக்கும் இல்லத்தில் ஸ்ரீ லட்சுமி நிரந்தரமாக வாசம் புரிகிறாள். ஒரு அந்தணன் மகாலட்சுமிக்கு தியான நெல்லி மரத்தடியில் உயிர் நீத்த புண்ணியத்தால் வைகுண்ட பிராப்தியை பெற்றான்.

    இதேபோல் நெல்லிக்கனியை பிச்சை இட்டதற்காக, கடும் வறுமையில் வாடிய குடும்பத்தவர்களுக்கு கனகமணி கட்டி களை கொடுத்தவள் மகாலட்சுமி.

    குபேர பட்டணத்தில் நெல்லி விருட்சங்களை நெடுகிலும் காணலாம். அதனால் தான் நெல்லி மர வழிபாடு குபேர சம்பத்தைக் கொடுக்கும் என்பதால் திருஷ்டாந்தம் துளசி செடியிலும் லட்சுமி எழுந்தருளியுள்ளாள்.

    இதேபோல் மஞ்சளிலும் ஸ்ரீ லட்சுமி வாசம் செய்கிறாள். மஞ்சள் செடியை வளர்ப்பது விசேஷம். மங்களகரமான பொருள் மஞ்சள் என்பதால், எல்லாவிதமான சுபமுகூர்த்தங்களுக்கும் மஞ்சள் உபயோகப்படுகிறது.

    மஞ்சள் கலந்த மந்திராசத்தை - மங்களார்த்தி என்று கூறப்படும் மஞ்சள் நீர், மஞ்சள் பூசிய மாங்கல்ய சரடு என்று பல மங்களகரமான பொருட்களோடு, மஞ்சள் கலந்து சர்வ மங்களமாகிறது. பெண்களின் நெற்றியிலும், வகிடிலும் இட்டுக் கொள்ளும் மஞ்சள் குங்குமம் பெண்களின் சவுபாக்கிய சின்னமாக விளங்குகிறது. குங்குமத்துடன் விளங்கும் பெண்களை மகாலட்சுமி மாதிரி இருக்கிறாள் என்று கூறுவது நமது மரபு.

    ஸ்ரீ வைஷ்ணவர்கள் அணிந்து கொள்ளும் திருமண், ஸ்ரீ சூர்ணம் அவற்றிலும் திருமாலும், ஸ்ரீமகளும் வாசம் செய்கின்றனர். ஸ்ரீ சூர்ணத்தை ஹரித்ரா சூர்ணம் என்று கூறு வர். மஞ்சளினால் செய்யப்பட்டது தான் ஸ்ரீ சூர்ணம். அதுவே ஸ்ரீ லட்சுமி.

    அதேபோல் திருமண் என்றால் திவ்யமான மண் என்று பொருள். திருமண் திருமாலின் அம்சமாகக் கருதப்படுகிறது. திருமண்ணையும் ஸ்ரீ சூர்ணத்தையும் சேர்த்து நெற்றியில் இட்டுக் கொள்வது தான் சிலாக்கியம். ஒன்றை விட்டு ஒன்றை மட்டும் இட்டுக் கொள்ளுதல் கூடாது.

    ஸ்ரீ ராமச்சந்திர பிரபுவை யும், சீதா பிராட்டியாரையும் சேர்த்துப் போற்றிப் பணிந்த ஆஞ்சநேய மகாப் பிரபுவும், அவரது திருவடியைச் சிந்தனையிலே கொண்ட பக்தர்களும் சகல சவுபாக்கியங்களுடனும் வாழ்கின்றனர். இல்லங்களை ஸ்ரீ லட்சுமி கடாட்சத்துடன் வைத்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் அவள் நம்முடன் வாசம் செய்வாள்.

    வைகறைக் துயில் எழுந்து, நீராடி, சூரியன் உதயமாவதற்கு முன்னால் வீட்டு வாயிலை பசு சாணத்தால் மெழுகி, கோலமிட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி வைக்க வேண்டும். கோலம் போடும் பழக்கம் என்பது தொன்றுதொட்டு நமது பாரத நாட்டில் இருந்து வருவதால் தான் மாக்கோலம், இழை கோலம், புள்ளிக்கோலம், வர்ணப் பொடிகளைத் தூவி போடும் ரங்கோலி போன்ற கோலங்கள் மிகவும் பிரபலமாக உள்ளன.

    மாக்கோலத்தை சுற்றி காவி பூசுவதும் பழக்கத்தில் உள்ளது. புராண காலத்தில் யாக சாலைகளில் விதவிதமான வண்ணக் கோலங்களை போட்டு, அக்கோலங்களின் மீது ஹோம குண்டங்களை அமைப்பதை பழக்கமாக கொண்டிருந்தனர். ஸ்ரீ லட்சுமி தேவி தீபமங்கள ஜோதியாக விளங்குகிறாள். இல்லத்திலே விளக்கு எரிவதால் லட்சுமி நிரந்தர மாக வாசம் புரிவாள்.

    ×