என் மலர்
நீங்கள் தேடியது "Lakshya"
- ஜப்பான் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் நடந்து வருகிறது.
- 2வது சுற்றில் இந்திய வீரர் லக்சயா சென், ஜப்பான் வீரரை வென்றார்.
டோக்கியோ:
ஜப்பான் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் லக்சயா சென், ஜப்பான் வீரர் காந்தா சுனேயமா உடன் மோதினார். இந்த போட்டியில் லக்சயா சென் 21-14, 21-16 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
மற்றொரு 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய், சகநாட்டு வீரரான ஶ்ரீகாந்த் கிடாம்பியுடன் மோதினார்.
பரபரப்பாக நடந்த இப்போட்டியில் பிரனாய் 19-21, 21-9, 21-9 என்ற செட் கணக்கில் கிடாம்பியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.