search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "lasith malinga"

    • ஐபிஎல் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றுவிட்டார்.
    • இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.

    இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா தனது அபார பந்துவீச்சு காரணமாக உலகின் முன்னணி பேட்ஸ்மேன்களை தனது பந்துவீச்சால் திணறடித்தவர் என்பதும் கிரிக்கெட் ரசிகர்கள் அறிந்ததே.

    ஐபிஎல் தொடரில் தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய அவர் ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட் எடுத்த பவுலர்களில் ஒருவராக இருந்து வருகிறார். இப்போது ஐபிஎல் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றுவிட்ட அவர் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.

    இந்நிலையில் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அவர் மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது.

    யார்க்கர் பந்துடன் தனது ‘ஸ்லோ பால்’ பந்து வீச்சு முறையுடன் எதிரணியை அச்சுறுத்தும் மலிங்கா, அதை ஆஸ்திரேலிய வீரர் ஸ்டாய்னிஸ்க்கு கற்றுக் கொடுத்துள்ளார்.
    இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா. நேர்த்தியான யார்க்கர் பந்து வீச்சின் மூலம் முன்னணி பேட்ஸ்மேன்களை திணறடிப்பதில் வல்லவர். அத்துடன் பேட்ஸ்மேன்கள் கணிக்க முடியாத அளவிற்கு ‘ஸ்லோ பால்’-களை அற்புதமாக வீசக்கூடியவர்.

    140 கி.மீட்டர் வேகத்தில் பந்து வீசக்கூடிய மலிங்கா, திடீரென 110 முதல் 120 கி.மீட்டர் வேகத்தில் மிகவும் மெதுவாக வீசுவார். இதனால் பேட்ஸ்மேன்கள் திணறிவிடுவார்கள். ஐபிஎல் கிரிக்கெட்டில் ‘ஸ்லோ பால்’கள்தான் முன்னணி பேட்ஸ்மேன்களை வெளியேற்றும். யார்க்கருக்குப் பிறகு இதுதான் மலிங்காவின் பிரம்மாஸ்திரமாகும்.

    தற்போது உலகக்கோப்பைக்கான பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆஸ்திரேலியா தனது 2-வது பயிற்சி ஆட்டத்தில் நேற்று இலங்கையை எதிர்கொண்டது. இதில் இலங்கை 239 ரன்னில் ஆல்அவுட் ஆனது. பின்னர் ஆஸ்திரேலியா 44.5 ஓவரில் இலக்கை எட்டி ஐந்து விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.



    இந்த போட்டி முடிந்த பின்னர் லசித் மலிங்காவிடம் சென்று ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான ஸ்டாய்னிஸ் ‘ஸ்லோ பால்’ வீசுவது எப்படி என்று கேட்டார். தன்னுடைய மிகப்பெரிய பலமாக கருதப்படுவதின் ரகசியத்தை பற்றி கேட்கிறாரே? என்று நினைக்காமல் உடனடியாக அதுபற்றி கற்றுக் கொடுத்தார்.

    மிகப்பெரிய தொடரில் மோதும் நிலையில் இப்படி கற்றுக் கொடுத்துள்ளீர்களே? என்று மலிங்காவிடம் கேட்கப்பட்டது. அதற்கு மலிங்கா கூறுகையில் ‘‘ஸ்டாய்னிஸ் என்னிடம் வந்து ‘ஸ்லோ பால்’ வீசுவது எப்படி என்று கேட்டார். ஷார்ட் பார்மட் போட்டியில் விதவிதமான பந்துகளை (variation) வீசுவது முக்கியமானது. எந்தவொரு வீரர் விரும்பினாலும், எல்லாவித டிப்ஸ்களையும் வழங்க நான் தயாராக இருக்கிறேன். சூழ்நிலைகளை புரிந்து கொண்டு ‘ஸ்லோ பால்’கள் வீசுவது எப்படி என்று சொல்லிக்கொடுத்தேன். அவருடன் இதை பகிர்ந்து கொண்டதில் மிகவும் மகிழ்ச்சி’’ என்றார்.
    உலகக்கோப்பைக்கான இரண்டு பயிற்சி ஆட்டத்திலும் வெற்றி வாகை சூடியுள்ள ஆஸ்திரேலிய அணியை நோக்கி மூன்று கேள்விகள் காத்திருக்கின்றன.
    ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வீரர்களான டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஓராண்டு தடைபெற்றனர். அதன்பின் ஆஸ்திரேலிய அணி, கிரிக்கெட்டில் தனது உத்வேகத்தை இழந்தது. தோல்விமேல் தோல்விகளை சந்தித்தது.

    இதனால் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா உலகக்கோப்பை தொடரில் அரையிறுதிக்குக் கூட முன்னேறுவது சந்தேகம் எனக் கூறப்பட்டது.

    இந்நிலையில்தான் இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடிய ஆஸ்திரேலியா ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், கடைசி மூன்று போட்டிகளிலும் தொடர்ச்சியாக வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது. அதன்பின் பாகிஸ்தான் அணிக்கெதிராக ஐந்து போட்டிகளிலும் வெற்றி பெற்று சாதனைப் படைத்தது.

    இதனால் ஆஸ்திரேலியா அணியின் மீதான எதிர்பார்ப்பு மளமள என உயர்ந்தது. இதனால் உலகக்கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. வார்னர், ஸ்மித் ஆகியோர் தற்போது தடைக்காலம் முடிந்து மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர். இதனால் அந்த அணி கூடுதல் பலத்துடன் விளங்குகிறது.

    வார்னர், ஸ்மித் இல்லாத நேரத்தில் கவாஜா தொடக்க வீரராக களம் இறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருடன் ஷேன் மார்ஷ் இணைந்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.

    உலகக்கோப்பைக்கான பயிற்சி ஆட்டத்தில் வார்னர், கவாஜா சிறப்பாக விளையாடினர். இந்நிலையில் ஆடும் லெவன் அணியை தேர்வு செய்வதில் அந்த அணிக்கு முக்கியமான மூன்று கேள்விகள் காத்துக் கொண்டிருக்கிறன.

    முதல் கேள்வி:-



    வார்னர் மற்றும் ஸ்மித் ஆகியோர் அணிக்கு திரும்பியுள்ளதால் கவாஜா மற்றும் ஷான் மார்ஷ் ஆகியோருக்கு இடம் கிடைக்குமா? என்பது சந்தேகமே. குறிப்பாக கவாஜாவுக்கு இடம் கிடைத்தால், அவரால் தொடக்க வீரராக களம் இறங்க முடியுமா?, அப்படி என்றால் வார்னர் அல்லது ஆரோன் பிஞ்ச் ஆகியோரில் ஒருவர் 3-வது இடத்தில் களம் இறங்க வேண்டிய நிலை ஏற்படும். இதை ஆஸ்திரேலியா எப்படி சரி செய்யும் என்பது மிகப்பெரிய கேள்வியே.

    2-வது கேள்வி:



    கேப்டன் ஆரோன் பிஞ்ச் உலகக்கோப்பையில் ஆடம் ஜம்பாதான் முதல் சுழற்பந்து வீச்சாளராக இருப்பார் என்று கூறினார். ஆனால் பயிற்சி ஆட்டத்தின்போது நாதன் லயனுக்கு அதிக அளவில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. ஆஸ்திரேலியா மூன்று முதன்மை பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கும். அப்போது இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கினால், முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவரை நீக்க வேண்டிய நிலை ஏற்படும். இதனால் எத்தனை சுழற்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கும் என்பது 2-வது கேள்வி.

    3-வது கேள்வி:



    மிட்செல் ஸ்டார்க் மற்றும் பேட் கம்மின்ஸ் ஆகியோருக்கு ஏராளமான போட்டிகளில் ஓய்வு அளிக்கப்பட்டு, இவரையும் உலகக்கோப்பைக்காக தயார் செய்து வைத்துள்ளது. இவர்களுக்கு துணையாக பந்து வீசும் ஹசில்வுட் அணியில் இல்லை. ஜை ரிச்சர்ட்சன் காயத்தால் அணியில் இடம் பெறவில்லை.

    நாதன் கவுல்டர்-நைல், கேன் ரிச்சர்ட்சன், ஜேசன் பெரேண்டர்ப் ஆகியோர் உள்ளனர். இவர்களில் யாரைத் தேர்வு செய்வார்கள் என்பது மூன்றாவது கேள்வி. இந்த மூன்று கேள்விக்கும் உரிய பதிலோடு ஆஸ்திரேலியா உலகக்கோப்பை தொடரை எதிர்கொள்ளும்.
    பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான இருக்கும் என கருதப்படும் இந்த உலகக்கோப்பையில் பந்து வீச்சாளர்கள் ‘கேம் சேஞ்சர்ஸ்’ ஆக இருப்பார்கள் என லசித் மலிங்கா தெரிவித்துள்ளார்.
    கிரிக்கெட் போட்டியில் யார்க்கர் என்றாலே வக்கார் யூனிஸ்க்குப் பிறகு சற்றென்று நினைவுக்கு வரும் பந்து வீச்சாளர் லசித் மலிங்கா. 35 வயதாகும் இவர்  உலகக்கோப்பைக்கான இலங்கை அணியில் இடம்பிடித்துள்ளார்.

    வயது மற்றும் உடற்தகுதி பிரச்சனை ஆகியவற்றால் மலிங்காவால் சிறப்பாக பந்துவீச முடியவில்லை என்ற விமர்சனம் ஒருபக்கம் இருந்தாலும், சமீபத்தில் முடிவடைந்த ஐபிஎல் தொடரில் 16 விக்கெட்டுக்கள் கைப்பற்றி மும்பை இந்தியன்ஸ் அணி 4-வது முறையாக கோப்பையை வெல்ல காரணமாக இருந்தார்.

    50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் நாளைமறுநாள் இங்கிலாந்தில் தொடங்குகிறது. இங்கிலாந்து ஆடுகளங்கள் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கும் என கருதப்படுகிறது. இந்நிலையில் பந்து வீச்சாளர்கள் ‘கேம் சேஞ்சர்ஸ்’ ஆக இருப்பார்கள் என்று லசித் மலிங்கா தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து மலிங்கா கூறுகையில் ‘‘கிரிக்கெட் போட்டி பேட்ஸ்மேன்களை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ஆனால், பந்து வீச்சாளர்களால் ‘கேம் சேஞ்சர்ஸ்’ ஆக இருக்க முடியும். அவர்கள் விக்கெட்டுக்களை வீழ்த்தும்போது, போட்டியில் வெற்றி பெற முடியும்.



    திறமை வாய்ந்த பந்து வீச்சாளர்களை  எந்த அணியில் இடம் பிடித்திருந்தாலும், எந்தவொரு ஆடுகளத்திலும் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருப்பார்கள். போட்டியை எப்படி ஆராய வேண்டும் என்பது பற்றி அவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பது அவசியம்.

    நான் கடந்த சில வருடங்களாக விதவிதமான பந்து வீச்சுக்கள் (variations) மீது கவனம் செலுத்தி வருகிறேன். இது எனக்கு உறுதியை அதிக அளவில் கொடுத்துள்ளது. ஆனால், போட்டியில் சூழ்நிலையை நன்கு அறிவது மிக மிக முக்கியம்’’ என்றார்.
    இலங்கை கிரிக்கெட் அணியின் கேப்டன் மலிங்காவின் மனைவி தன்யாவுக்கும், ஆல்-ரவுண்டர் திசரா பெரேராவுக்கும் இடையே திடீரென மோதல் ஏற்பட்டுள்ளது. #ThisaraPerera
    கொழும்பு:

    இலங்கை கிரிக்கெட் அணியில் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக விளங்குபவர், லசித் மலிங்கா. அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட மலிங்கா ஓராண்டு இடைவெளிக்கு பிறகு கடந்த செப்டம்பர் மாதம் அணிக்கு திரும்பினார். அத்துடன் அவருக்கு ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டி அணிக்கான கேப்டன் பதவியும் வழங்கப்பட்டது. அவருக்கு முன்பாக சன்டிமால் ஒரு நாள் அணிக்கும், ஆல்-ரவுண்டர் திசரா பெரேரா 20 ஓவர் போட்டி அணிக்கும் கேப்டனாக செயல்பட்டனர். திசரா பெரேரா, சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் 74 பந்துகளில் 13 சிக்சருடன் 140 ரன்கள் விளாசி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில் திசரா பெரேராவுக்கும், மலிங்காவின் மனைவி தன்யாவுக்கும் திடீரென மோதல் வெடித்துள்ளது. சமூக வலைதளமான பேஸ்புக்கில் தன்யா வெளியிட்ட ஒரு பதிவில், ‘நாட்டின் புதிய விளையாட்டுத்துறை மந்திரியை திசரா பெரேரா சந்தித்து, உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அணியில் தனது இடத்தை உறுதி செய்ய முயற்சிக்கிறார்’ என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார்.



    அவரது குற்றச்சாட்டு இலங்கை கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து திசரா பெரேரா, இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி ஆஷ்லே டி சில்வாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ‘கேப்டன் பதவியில் இருப்பவரின் மனைவி இது போன்று சமூக வலைதளத்தில் குற்றம் சாட்டுவது மக்களிடம் என்னை பற்றி தவறான எண்ணத்தை உருவாக்கி விடும். அவரது ‘பேஸ்புக்’ பதிவுக்கு பிறகு வீரர்களின் ஓய்வறையில் அசவுகரியமான சூழல் நிலவுகிறது. உண்மையை சொல்ல வேண்டும் என்றால், இரு மூத்த வீரர்கள் கருத்து வேறுபாடுகளை கொண்டிருக்கும்போது, இளம் வீரர்களுக்கு அது நல்ல அனுபவமாக இருப்பதில்லை. தலைமை பண்பு என்பது, அணிக்குள் நிலைத்தன்மை மற்றும் ஒற்றுமையை உருவாக்குவது ஆகும்.

    இது போன்ற தேவையற்ற சமூக வலைதள சர்ச்சைகளை தவிர்த்து, விரைவில் தொடங்க இருக்க இருக்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி மீதே இப்போது நமது கவனம் இருக்க வேண்டும். ஒருங்கிணைந்து வலுவான கேப்டன்ஷிப்பின் கீழ் அணி பயணிக்க வேண்டியது அவசியம். கேப்டனும், மூத்த வீரர்களும் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக விளங்க வேண்டும்.

    தனிப்பட்ட நபரின் பழிவாங்கும் நடவடிக்கையால் ஒட்டுமொத்த தேசமும் கேலிக்கூத்தாகியுள்ளது. தற்போதைய சூழலில் இதை எளிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது. இலங்கை கிரிக்கெட் வாரியம் தலையிட்டு இந்த பிரச்சினையை சரி செய்து அணிக்குள் ஒற்றுமையையும், நம்பிக்கையையும் கொண்டு வர வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

    மேலும், கடந்த ஆண்டில் ஒரு நாள் கிரிக்கெட்டில் தனது செயல்பாடு சிறப்பாக இருந்தது என்றும் 29 வயதான திசரா பெரேரா குறிப்பிட்டுள்ளார். #ThisaraPerera

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ள இலங்கை அணியில் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா மீண்டும் இடம் பிடித்துள்ளார். #AsianCup2018 #LasithMalinga
    14-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகிற 15-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

    இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் உள்பட 6 அணிகள் கலந்து கொள்கின்றன. 

    இந்நிலையில், ஆசிய கோப்பைக்கான 16 பேர் கொண்ட அணியில் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா மீண்டும் இடம் பிடித்துள்ளார்.

    ஆசிய கோப்பைக்கான இலங்கை அணியில் இடம்பிடித்துள்ள வீரர்களின் விவரம்:

    ஏஞ்சலோ மேத்யூஸ் (கேப்டன்), குசால் பெராரா, குசால் மெண்டிஸ், உபுல் தரங்கா, தினேஷ் சண்டிமால், தனுஷ்கா குணதிலகா, திசாரா பெராரா, டாசன் ஷனகா, தனஞ்ஜயா டி சில்வா, அகிலா தனஞ்ஜயா, தில்ருவான் பெராரா, அமிலா அபோன்சோ, காசன் ரஜிதா, சுரங்கா லக்மல், துஷ்மந்த சமீரா, லசித் மலிங்கா #AsianCup2018 #LasithMalinga
    யார்க்கர் மன்னன் என்று அழைக்கப்படும் மலிங்காவிற்கு தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான டி20 போட்டிக்கான அணியில் இடம் கிடைக்கவில்லை. #Malinga
    இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா. யார்க்கர் மன்னன் என்று அழைக்கப்படும் இவருக்கு சமீப காலமாக டி20 அணியில் இடம் கிடைக்கவில்லை. கடைசியாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியாவிற்கு எதிரான டி20 போடடியில் விளையாடினார்.

    கனடாவில் நடைபெற்ற குளோபல் டி20 லீக் தொடரில் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தினார். இதனால் இலங்கை தேசிய அணியில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். ஆனால் இலங்கை அணி அவருக்கு வாய்ப்பு வழங்கவில்லை.



    மலிங்காவிற்குப் பதிலாக இடது கை வேகப்பந்து வீச்சாளரான பினுரா பெர்னாண்டோவிற்கு வாய்ப்பு வழங்கியுள்ளது. இவர் பாகிஸ்தானுக்கு எதிராக கடந்த 2015-ல் இரண்டு டி20 போட்டியில் விளையாடியுள்ளார். அதன்பின் தற்போதுதான் அணியில் இடம்பிடித்துள்ளார்.
    ×