search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "laundering case"

    • குற்றவாளிகளைக் காப்பாற்ற அரசே சதி செய்வது கண்டிக்கத்தக்கதாகும்.
    • சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கள்ளக்குறிச்சி நகரம் கருணாபுரத்தில் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழக்கக் காரணமான கள்ளச்சாராய வணிகர்கள் மற்றும் அவர்களுக்கு பின்னணியில் இருப்பவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி, கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்ற குரல்கள் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ள நிலையில், இந்த வழக்கின் குற்றவாளிகளை தப்ப வைக்க முயற்சிகள் நடக்கின்றன. ஏராளமான குடும்பங்கள் வீதிக்கு வருவதற்கு காரணமான குற்றவாளிகளைக் காப்பாற்ற அரசே சதி செய்வது கண்டிக்கத்தக்கதாகும்.

    கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுகள் குறித்த அனைத்து உண்மைகளும் வெளிக்கொண்டு வரப்பட வேண்டும். கள்ளச்சாராய வணிகர்களுக்கு காவலர்களாக இருப்பவர்கள் எவ்வளவு உயர்பதவியில் இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். எனவே, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுகள் குறித்த விசாரணையை சி.பி.ஐ.யிடம் தமிழக அரசு ஒப்படைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    போலி வங்கி கணக்குகள் தொடங்கி 3500 கோடி ரூபாய் முதலீடு செய்த ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரி இன்று விசாரணைக்கு ஆஜரானார். #Zardariarrestwarrant #Fakeaccountscase #ZardariappearsFIA
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் மக்கள் கட்சி இணைத் தலைவரும் அந்நாட்டின் முன்னாள் அதிபருமான ஆசிப் அலி சர்தாரி மற்றும் அவரது சகோதரி ஃபர்யால் தல்புர், பாகிஸ்தான் பங்குச்சந்தை முன்னாள் தலைவர் ஹுசைன் லவாய்  உள்பட மொத்தம் 32 பேர் 19 பேர் வங்கிகளில் பினாமி பெயரில் 29 கணக்குகளை தொடங்கி, அவற்றின் மூலமாக சுமார் 3500 கோடி ரூபாய் பணத்தை கள்ளத்தனமாக இடம்மாற்றியதாக கடந்த 2015-ம் ஆண்டு அந்நாட்டின் மத்திய புலனாய்வுதுறை கண்டுபிடித்தது.

    இதன் அடிப்படையில், இவர்கள் மீது வங்கியியல் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு, இடைக்கால குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரும் தலைமறைவாக இருந்து வருவதாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டது.

    இந்த வழக்கு கடந்த 17-ம் தேதி விசாரணைக்கு  வந்தபோது குற்றம்சாட்டப்பட்டுள்ள அதிபர் ஆசிப் அலி சர்தாரியை கைது செய்து வரும் செப்டம்பர் மாதம் 8-ம் தேதி ஆஜர்படுத்துமாறு கோர்ட் உத்தரவிட்டது.

    இந்த உத்தரவுக்கு எதிராகவும் முன் ஜாமின் கோரியும் இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் ஆசிப் அலி சர்தாரி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் அவரை கைது செய்ய முடியாதவாறு பாதுகாப்பு ஜாமின் வழங்கி நீதிபதி மியான்குல் ஹசன் அவுரங்கசிப்  உத்தரவிட்டார்.

    இந்நிலையில், இவ்வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு குழு அலுவலகத்தில் ஆசிப் அலி சர்தாரி இன்று விசாரணைக்கு ஆஜரானார். 

    கோர்ட்டின் வெளியே காத்திருந்த செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சர்தாரி, ‘துரதிர்ஷ்டவசமாக என் மீது போடப்பட்டுள்ள இந்த வழக்கு முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப் ஆட்சிக்காலத்தில் தொடரப்பட்ட பொய் வழக்காகும். அதிகாரிகள் என்னிடம் என்ன வேண்டுமானாலும் விசாரித்து கொள்ளட்டும். எனது தரப்பிலான உண்மைகள் மூலம் இந்த வழக்கில் இருந்து விடுபட்டு வெளியேறுவேன்’ என தெரிவித்தார். #Zardariarrestwarrant #Fakeaccountscase #ZardariappearsFIA
    ×