search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "leaf production"

    • மல்பெரி செடிகளில் இருந்து ஆண்டுக்கு, 6 முறை தண்டு மற்றும் இலைகள் வெட்டி எடுக்கப்படுகிறது.
    • ஒரு செடியிலிருந்து ஆண்டுக்கு 10 கிலோ பறிக்கப்படுகிறது.

    உடுமலை :

    உடுமலை, பொள்ளாச்சி, சுல்தான்பேட்டை, பழநி உள்ளிட்ட பகுதிகளில் மல்பெரி சாகுபடி செய்து பட்டுக்கூடு வளர்ப்பில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.நிலைப்பயிராக பயிரிடப்படும் மல்பெரி செடிகளில் இருந்து ஆண்டுக்கு, 6 முறை தண்டு மற்றும் இலைகள் வெட்டி எடுக்கப்படுகிறது.சராசரியாக ஒரு செடியிலிருந்து ஆண்டுக்கு 10 கிலோ பறிக்கப்படுகிறது. இவ்வாறு அறுவடை செய்யப்படுவதால் செடிகளுக்கு அதிக அளவு நுண்Èட்டம் உள்ளிட்ட சத்துகள் தேவைப்படுகிறது.செடிகளுக்கு தேவையான உரங்களை அளிக்காவிட்டால் மண்ணின் வளம் பாதிக்கப்பட்டு இலைகளின் தரம் குறையும். தரமற்ற இலைகள் பட்டுப்புழுக்களுக்கு உணவாக அளிப்பதால், புழுக்களுக்கு நோய்த்தாக்குதல் ஏற்பட்டு உற்பத்தி பாதிக்கப்படுவதுடன், தரமற்ற கூடுகளும் உற்பத்தியாகிறது.

    எனவே மல்பெரி தோட்ட பராமரிப்பில் விவசாயிகள் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றனர். அவ்வகையில் வடகிழக்கு பருவமழை துவங்கும் முன் தொழு உரம் இடும் பணிகளை விவசாயிகள் துவக்கியுள்ளனர்.

    மல்பெரி தோட்டங்களை பராமரிக்கும் விவசாயிகள், மண் பரிசோதனை செய்வது அவசியம். பரிசோதனையில் மண்ணின் கார அமிலத்தன்மை, மின் கடத்து திறன், கரிம கார்பன் அளவு, பாஸ்பரஸ், பொட்டாஷ் ஆகிய தன்மைகளின் அளவுகள் கண்டறியலாம்.இதன் அடிப்படையில் நுண்Èட்டசத்து மற்றும் பேரூட்டச்சத்து குறைபாடுகளை கண்டறிந்து அதற்கேற்ப உரமிடலாம். மண்ணில் குறைபாடுள்ள சத்துகளை மேம்படுத்தினால் தரமான இலைகளை உற்பத்தி செய்ய முடியும் என கோவை வேளாண் பல்கலைக்கழகமும் பட்டுக்கூடு உற்பத்தி தொழிலில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கி வருகிறது.

    ×