search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Leasing bribe"

    கட்டுமானப் பணிகளுக்கான ஒப்பந்தம் வழங்க லஞ்சம் வாங்கியதாக ராணுவ பொறியியல் துறை தலைமை பொறியாளர் உள்பட 6 பேரை சி.பி.ஐ. இன்று கைது செய்தது.
    புதுடெல்லி:

    கொச்சி கடற்படை தளத்தில் நடைபெற்றுவரும் கட்டுமானப் பணிகளுக்கான ஒப்பந்தம் வழங்க ஒப்பந்த பணிகளுக்கான மதிப்பீட்டில் ஒரு சதவீதம் தொகையை கமிஷனை வாங்கியதாக கொச்சி ராணுவ பொறியியல் துறை தலைமை பொறியாளர் ராகேஷ் குமார் கார்க் உள்ளிட்டவர்களுக்கு எதிராக சமீபத்தில் குற்றச்சாட்டு எழுந்தது.

    இதைதொடர்ந்து, டெல்லி, கொச்சி, அஜ்மீர், கொல்கத்தா உள்பட 20 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். ராகேஷ் குமார் கார்க் வீட்டில் நடைபெற்ற சோதனையின்போது அவர் பெற்றிருந்த லஞ்சப் பணம் 1.21 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதர சோதனைகளின்போது 3.97 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் ஆறு கிலோ தங்கம் பிடிபட்டது.

    இந்நிலையில், தலைமை பொறியாளர் ராகேஷ் குமார் கார்க் உள்பட ஆறுபேரை சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று கைது செய்துள்ளனர்.
    ×