search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "LED Bulb"

    • குழந்தை தொடர் இருமல் மற்றும் மூச்சுத்திணறலால் அவதிப்பட்டது.
    • குழந்தைகள் விளையாடும் போது பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோட்ட யம் பகுதியை சேர்ந்த 7 மாத குழந்தைக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. அந்த குழந்தை தொடர் இருமல் மற்றும் மூச்சுத்திணறலால் அவதிப்பட்டது. இதையடுத்து அந்த குழந்தையை கோட்டயத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு பெற்றோர் கொண்டு சென்றனர்.

    அங்கு குழந்தையை டாக்டர்கள் பரிசோதித்ததில், குழந்தையின் நுரையீரலின் கீழ் பகுதியில் ஏதோ ஒரு பொருள் சிக்கியிருப்பதை கண்டறிந்தனர். அதனால் தான் குழந்தைக்கு தொடர் இருமல் ஏற்பட்டது மட்டுமின்றி, மூச்சுத்திணறலும் ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து குழந்தைக்கு மூச்சுக்குழாய் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் குழந்தையின் வலது நுரையீரலில் சிவப்பு நிற சிறிய எல்.இ.டி.பல்ப் சிக்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்து உடனடியாக அகற்றினர்.

    இதன்மூலம் அந்த குழந்தையை டாக்டர்கள் காப்பாற்றினர். குழந்தை விளையாடிய பொம்மை யில் இருந்து எல்.இ.டி. பல்ப் தெரியாமல் வாய் வழியாக உடலுக்குள் சென்றிருக்கலாம் என்றும், இதுபோன்ற நிகழ்வு மிகவும் அரிதாக நடக்கக்கூடியது எனவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.

    குழந்தைகள் விளையாடும் போது பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும். உயிருக்கு ஆபத்தில்லாத விளையாட்டு பொருட்களையே குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    ×