என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "lemon soda"
- ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
- அடிக்கிற வெயிலில் பாட்டிலில் இருந்த சோடா ஆவியாகி இருக்கும்.
சமீப காலமாக உணவு பொருட்கள் முதல் ஆடம்பர பொருட்கள் வரை அனைத்தையும் ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் ஸ்விக்கியில் எலுமிச்சை சோடா ஆர்டர் செய்த ஒரு பயனர், காலியான டப்பாவின் புகைப்படத்துடன் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு தற்போது வைரலாக பரவி வருகிறது.
அவரது பதிவில், ஸ்விக்கி இப்படி ஒரு காலியான கிளாசை எனக்கு அனுப்பி இருக்கிறீர்கள். அதற்கு நன்றி. நான் ஆர்டர் செய்த லைம் சோடா மற்றொரு ஆர்டரில் வந்து சேர்ந்து விடும் என்று நம்புகிறேன் என கிண்டலாக கூறியுள்ளார்.
இதற்கு ஸ்விக்கி அளித்த பதிலில், உங்களது ஆர்டர் ஐடியை பகிர்ந்தால் இதுகுறித்து என்ன செய்ய முடியும் என பார்ப்பதாக கூறியிருந்தது.
அவரது இந்த பதிவு ஆயிரக்கணக்கான பார்வைகளை பெற்றது. அதில் ஒரு பயனர், அடிக்கிற வெயிலில் பாட்டிலில் இருந்த சோடா ஆவியாகி இருக்கும் என கிண்டலாக கூறியுள்ளார்.
மற்றொரு பயனர், இது நீராவி வடிவத்தில் திரவத்தை அனுப்பி வைக்க கூடிய ஒரு தொழில்நுட்பம் என கூறியுள்ளார். இதே போன்று பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.