என் மலர்
நீங்கள் தேடியது "Life Guard"
- உத்தரப் பிரதேசத்தில் நீச்சல் குளத்தில் மூழ்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- இந்த டால்பின் நீச்சல் குளத்தில் ஏற்கனவே ஒரு உயிரிழப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் நீச்சல் குளத்தில் மூழ்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் ரத்லம் பகுதியில் உள்ள டால்பின் நீச்சல் குளம் ஒன்றில் நேற்று (மே 20) ஏராளமானோர் குளித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது இளைஞன் ஒருவன் சாகசம் செய்யும் நோக்கில் நீச்சல் குளத்துக்குள் குதித்துள்ளார். இதனால் எதிர்பாராத விதமாகச் சாகசம் செய்யக் குதித்த இளைஞனின் முழங்கால் நீச்சல் குளத்தின் விளிம்பில் நின்றுகொண்டிருந்த மற்றொரு இளைஞனின் முகத்தில் தாக்கவே மயக்கமடைந்த இளைஞன் நிலைதடுமாறி நீருக்குள் விழுந்து மூழ்கி உயிரிழந்துள்ளார்.
சம்பவ நடந்த இடத்தில் அருகில் பலர் இருந்த போதும் இளைஞரைக் காப்பாற்ற முடியவில்லை. நீச்சல் குள லைப் கார்டும் ( உயிர்காப்பாளரும்) மிகவும் தாமதமாக அங்கு வந்து அலட்சியமாகச் செயல்பட்டுள்ளார். இதனால் அவரின் அலட்சியத்தையும் நீச்சல் குளத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் குறித்து அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர்.
இந்த டால்பின் நீச்சல் குளத்தில் ஏற்கனவே ஒரு உயிரிழப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. எனினும் பாதுகாப்பில் எந்த முன்னேற்றமும் செய்யப்படாமல் தொடர்ந்து நீச்சல் குளம் இயங்கி வந்ததே மற்றொரு உயிரிழப்புக்குக் காரணம் என்று கண்டனங்கள் எழுந்துள்ளது.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, நீச்சல் குளத்துக்கு போலீசார் சீல் வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர். நீச்சல் குளத்தை நிரந்தரமாக மூடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாக உறுதியளிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான பரபரப்பான வீடியோ வெளியாகி இதுபோன்ற பல நீச்சல் குளங்களின் பாதுகாப்பு பற்றிய கேள்விகளை எழுப்பியுள்ளது.