என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "liquor hoarding"

    • பாவளம் கிராமத்தில் கரும்பு தோட்டத்தில் லாரி டியூப்களில் சாராயம் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
    • 6 லாரி டியூப்பில் பதுக்கி வைத்திருந்த சுமார் 360 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி மற்றும் போலீசார் சங்கரா புரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பாவளம் கிராமத்தில் கரும்பு தோட்டத்தில் லாரி டியூப்களில் சாராயம் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் சேராப்பட்டு கிராமத்தை சேர்ந்த பொன்னுசாமி மகன் துரை மணிகண்டன் (29) என்பவர் சாராயம் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து துரைமணிகண்டனை கைது செய்த போலீசார், 6 லாரி டியூப்பில் பதுக்கி வைத்திருந்த சுமார் 360 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    ×