என் மலர்
நீங்கள் தேடியது "Live in together"
- இதுபோல பலமுறை அவர் தன்னை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த பெண் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
- லிவ் இன் டுகெதர் உறவை 11 மாதங்களுக்கு அதாவது ஆகஸ்ட் 1 2024 முதல் ஜூன் 30 ,2025 வரை தொடர பெண்ணுடன் ஒப்பந்தம் [MOU]
பாலியல் பலாத்கார வழக்கில் லிவ் இன் டுகெதர் சாக்கை பயன்படுத்தி குற்றவாளி முன் ஜாமீன் பெற்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றியும் அந்தரங்க வீடியோக்களை காட்டி மிரட்டியும் பல முறை தன்னை 46 வயது நபர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக மும்பையை சேர்ந்த 29 வயது பெண் ஒருவர் கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி போலீசில் புகார் அளித்திருந்தார்.
கடந்த வருடம் அக்டோபர் மாதம் குற்றம்சாட்டப்பட்ட நபருடன் பெண்ணுக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தங்களது உறவு வளர்ந்த நிலையில் அந்த நபர் மற்றொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதும் அவர் ஏற்கனவே திருமணம் செய்து விவாகரத்து பெற்றவர் என்பதும் தெரியவந்துள்ளது. இதனால் தங்களது உறவை முறித்துக்கொள்ள பாதிக்கப்பட்ட பெண் முற்பட்டுள்ளார். ஆனால் அந்த பெண்ணின் அந்தரங்க வீடியோக்களை வைத்து தங்களது உறவைத் தொடர அந்த நபர் மிரட்டியதாகத் தெரிகிறது. மேலும் இதுபோல பலமுறை அவர் தன்னை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த பெண் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கைது செய்யப்படாமல் இருக்க அந்த நபர் முன் ஜாமீன் கோரி நீதிமன்றத்தை நாடியுள்ளார். இருவருக்கு மிடையிலான லிவ் இன் டுகெதர் உறவை 11 மாதங்களுக்கு அதாவது ஆகஸ்ட் 1 2024 முதல் ஜூன் 30 ,2025 வரை தொடர அந்த பெண்ணுடன் தான் ஒப்பந்தம் [MOU] செய்துள்ள ஆதாரத்தை அந்த நபர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.

அந்த அக்ரிமென்டில் பெண்ணின் கையெழுத்தும் இடம்பெற்றுள்ளதாக அந்த நபரின் வக்கீல் நீதிமன்றத்தில் வாதாடினார். எனவே இதை ஆதாரமாக ஏற்றும், அந்தரங்க வீடியோக்களுக்கான ஆதாரங்களை அந்த பெண் சமர்ப்பிக்காததாலும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது. ஆனால் அந்தரங்க வீடியோகக்ளை வைத்து மிரட்டி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்யத் தெரிந்த நபருக்கு லின் இன் அக்ரீமெண்ட்டில் கையெழுத்து வாங்க அதிக நேரமானது என்ற கருத்தையும் சிலர் முன்வைக்கின்றனர்.
- உத்தரகாண்டில் லிவ்-இன் முறையில் சேர்ந்து வாழ்வதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
- 21 வயதுக்கு உள்பட்டவர்கள் லிவ் இன் உறவில் வாழ்ந்தால் அவர்கள் தங்களது பெற்றோரிடம் இதற்கு ஒப்புதல் பெறவேண்டும்.
இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்திய முதல் மாநிலம் என்ற பெருமையை உத்தரகாண்ட் பெற்றுள்ளது.
திருமணம், விவகாரத்து உள்ளிட்டவை அனைத்து மதத்தினருக்கும் பொது என்பதே இந்த சட்டத்தின் நோக்கம் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
அதனபடி பலதார மணம், குழந்தை திருமணம், முத்தலாக் போன்ற முறைகள் முற்றிலுமாக நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது சிவில் சட்டத்தின்படி திருமணம், விவாகரத்து, லிவ்-இன் முறையில் சேர்ந்து வாழ்தல் போன்றவற்றிற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
லிவ்-இன் முறையில் சேர்ந்து வாழ்பவர்கள் இது தொடர்பாக பதிவு செய்யவில்லை என்றால் 6 மாத சிறைத் தண்டனையும் 25 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும் என்று பொது சிவில் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 21 வயதுக்கு உள்பட்டவர்கள் லிவ் இன் உறவில் வாழ்ந்தால் அவர்கள் தங்களது பெற்றோரிடம் இதற்கு ஒப்புதல் பெறவேண்டும்.
இந்நிலையில், உத்தராகண்டில் பொது சிவில் சட்டத்தின்படி ஒருவரின் லிவ்-இன் உறவு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
இதுவரை இது தொடர்பாக 5 விண்ணப்பங்கள் வந்துள்ளது என்றும் 1 மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மற்ற 4 விண்ணப்பங்களும் சரிபார்க்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.