search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "local train"

    • காட்கோபரில் இருந்து கல்யாண் செல்லும் ரெயிலில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பயணம் செய்தார்.
    • அப்போது சக பயணிகளுடன் கலந்துரையாடிய அவர் செல்பி எடுத்து மகிழ்ந்தார்.

    மும்பை:

    மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் மும்பையின் காட்கோபரில் இருந்து கல்யாண் செல்லும் மின்சார ரெயிலில் இன்று பயணம் செய்தார். அப்போது மகாராஷ்டிர மாநில முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே, துணை முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் உடனிருந்தனர்.

    சக பயணிகளுடன் கலந்துரையாடிய நிர்மலா சீதாராமன் அவர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டார். சக பயணிகள் போல் நிதி மந்திரி பயணம் செய்ததை கண்டு மக்கள் ஆச்சரியம் அடைந்தனர்.

    மும்பையின் காட்கோபரில் இருந்து கல்யாண் செல்லும் மின்சார ரெயிலில் ஒவ்வொரு நாளும் 60 லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் பயணம் செய்து வருகின்றனர்.

    ஓடும் ரெயிலில் ஏறுவதை தடுக்க ரெயில் புறப்பட்டு விட்டதை பயணிகளுக்கு உணர்த்தும் வகையில் ஊதா நிறத்தில் எரியும் எச்சரிக்கை விளக்கை பொருத்த திட்டமிட்டு உள்ளது. #Mumbai #LocalTrain #BlueLight
    மும்பை:

    மும்பையில், மின்சார ரெயில்கள் புறப்பட்ட பின்னர் ஏற முயன்று பிளாட்பார இடைவெளியில் தண்டவாளத்தில் விழுந்து பயணிகள் உயிரிழக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. இதை தடுக்க மத்திய ரெயில்வே, மின்சார ரெயில் பெட்டிகளின் வாசற்படிகளின் மேல், ரெயில் புறப்பட்டு விட்டதை பயணிகளுக்கு உணர்த்தும் வகையில் ஊதா நிறத்தில் எரியும் எச்சரிக்கை விளக்கை பொருத்த திட்டமிட்டு உள்ளது.

    சோதனை முயற்சியாக ஒரு மின்சார ரெயிலில் உள்ள ஒரு பெட்டியில் இந்த விளக்கு பொருத்தப்பட்டு இருக்கிறது. ரெயில் பிளாட்பாரத்தில் நின்றுவிட்டு கிளம்பியதும், இனி ஏறக்கூடாது என பயணிகளை எச்சரிக்கும் வகையில் இந்த விளக்கு எரியும்.

    இது தொடர்பாக பயணிகளின் கருத்துகளை கேட்ட பின்னர் அனைத்து ரெயில்களிலும் இந்த விளக்குகளை பொருத்த வேண்டுமா? என்பது குறித்து முடிவு செய்யப்படும் என மத்திய ரெயில்வே கூறியுள்ளது. இந்த திட்டத்தால் எந்த பயனும் ஏற்பட போவதில்லை என்று சில பயணிகள் தெரிவித்தனர்.
    ×