search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "locked shop"

    • உடல் நிலை சரியில்லாத காரணத்தால் கடந்த 3 நாட்களாக ராஜ பாண்டி கடையை திறக்க வில்லை.
    • ஜெகதீசன், பேனை உடைத்து தனி தனி பகுதியாக மாற்றி மீண்டும் விற்பதற்காக சென்றதை பார்த்துள்ளார்.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த நெடுங்காடு நல்லாத்தூர் சாலை யைச்சேர்ந்தவர் ராஜபாண்டி. இவர், நல்லாத்தூர் சாலை யில் காய்கறி கடை நடத்தி வருகிறார். உடல் நிலை சரியில்லாத காரணத்தால் கடந்த 3 நாட்களாக ராஜ பாண்டி கடையை திறக்க வில்லை. இந்நிலையில், சம்பவத்தன்று காலை கடையை திறந்தபோது, கடையில் இருந்த ரூ.2 ஆயிரம் மதிப்பிலான டேபி ள்பேன் காணாமல் போயி ருந்தது. மேலும் கடையின் பின் வாசல் திறந்து கிடப்பது தெரியவந்தது.

    மேலும், அக்கம் பக்கத்தில் விசாரித்தபோது, நெடு ங்காடு பஞ்சாட்சபுரத்தை ச்சேர்ந்த ஜெகதீசன் என்பவர் ஒரு டேபிள் பேனை எடுத்து சென்றதாக தெரிவித்தனர். தொடர்ந்து, நெடுங்காட்டில் உள்ள பழைய இரும்பு கடைகளில் சென்று விசாரித்தபோது, ஜெகதீசன் என்பவர் பேனை விற்க வந்ததாகவும், தாங்கள் வாங்க வில்லை யென தெரிவித்துள்ளனர்.

    இதன் காரணமாக, ஜெகதீசன், பேனை உடைத்து தனி தனி பகுதியாக மாற்றி மீண்டும் விற்பதற்காக சென்றதை பார்த்துள்ளார். தொடர்ந்து, ராஜபாண்டி ஜெகதீசனை பிடுத்து, நெடுங்காடு போலீசாரிடம் ஒப்படைத்தார். ராஜ பாண்டி புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிந்து ஜெகதீசனை கைது செய்து, பேனின் உதிரி பாகங்களை பறிமுதல் செய்தனர்.

    ×