என் மலர்
முகப்பு » Lokayukta legislation
நீங்கள் தேடியது "Lokayukta legislation"
தமிழக சட்டசபையில் தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் ஆதரவோடு லோக் ஆயுக்தா சட்டமசோதாவை அமைச்சர் சி.வி.சண்முகம் தாக்கல் செய்கிறார். #TNAssembly #Lokayukta
சென்னை:
இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் லோக் ஆயுக்தா என்ற விசாரணை அமைப்பை உருவாக்குவது தொடர்பான வழக்கை சுப்ரீம் கோர்ட்டு விசாரித்து வருகிறது.
தமிழகத்தில் லோக் ஆயுக்தாவை அமைப்பதற்கான நடவடிக்கை குறித்து இந்த மாதம் 10-ந்தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு கெடு விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
லோக் ஆயுக்தா, லோக்பால் தொடர்பாக மத்திய அரசு மேற்கொள்ள இருக்கும் சட்டத்திருத்தங்களுக்கு பின்னர் லோக் ஆயுக்தாவை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்தது. ஆனால் இந்த வாதத்தை ஏற்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது.
எனவே லோக் ஆயுக்தாவை தமிழகத்தில் அமைப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது.
தமிழக சட்டசபை கூட்ட தொடர் நாளையுடன் முடிவடைய இருப்பதால் நாளைய கூட்டத்தில் லோக் ஆயுக்தா சட்டமசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது.
இந்த மசோதாவை சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் தாக்கல் செய்கிறார். இந்த மசோதாவில் என்னென்ன விதிகள் சேர்க்கப்பட்டுள்ளது என்பது நாளை தெரிய வரும்.
மசோதாவை தாக்கல் செய்ததும் நாளை மதியம் இதன் மீதான விவாதம் நடைபெறும். அதன் பிறகு மசோதா நிறைவேற்றப்படும்
தமிழ்நாட்டில் லோக் ஆயுக்தா சட்டம் வர வேண்டும் என்று தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில் நாளை இந்த சட்டம் சட்டசபையில் தாக்கல் ஆகிறது.
எனவே தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் ஆதரவோடு லோக் ஆயுக்தா சட்டம் நாளை நிறைவேற உள்ளது. #TNAssembly #Lokayukta

×
X