என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "loksabha"
- குழந்தைகளுக்கு உணவளிக்கும் திட்டத்திற்கு கூட தேவையான நிதி ஒதுக்கப்படவில்லை.
- நாங்கள் கோரிக்கை வைத்து கெஞ்சி, போராடி தான் தமிழ் கற்றுக்கொள்ள வேண்டும்.
மக்களவையில் இன்று நாடாளுமன்ற திமுக குழு தலைவரும் எம்.பியுமான கனிமொழி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
குழந்தைகளுக்கு உணவளிக்கும் திட்டத்திற்கு கூட தேவையான நிதி ஒதுக்கப்படவில்லை.
கேந்திரிய வித்யாலயாக்கள் உங்களுக்கு உதவுவதற்காக நீங்கள் மொழி கொள்கைகளை எப்படி நடந்து கொள்வீர்கள் என்று உங்களுக்கும் இங்கு இருக்கும் சிலருக்கு விளக்குவதார்காக நான் சொல்கிறேன்.
அங்கே இருக்கக் கூடிய மாநில மொழியே கற்றுத்தருவோம் என்று சொல்கிறீர்கள். தமிழ் நாட்டில் 45 கேந்திரிய வித்யாலயாக்கள் இருக்கிறது. ஆனால், அங்கு நீங்கள் எப்படி தமிழ் சொல்லி தருவீர்கள்.
அங்கே இருக்க கூடிய மாணவர்களே 20 பேர் ஒரு வகுப்பில் எல்லோரும் சேர்ந்து தலைமை ஆசிரியர்களிடம் வந்து கோரிக்கை வைக்க வேண்டுமாம்.
அப்படி கோரிக்கை வைத்தால்தான் அதற்காக ஆசிரியர் நியமிக்கப்படும் என்றும் ஆசிரியர் கிடைத்தால் தான் அவர்களை நியமிக்கப்பட்டு அங்கே தமிழ் சொல்லித் தரப்படும் என்று சொல்கிறார்கள். இது தமிழ்நாட்டிலேயே.
நாங்கள் கோரிக்கை வைத்து கெஞ்சி, போராடி தான் தமிழ் கற்றுக்கொள்ள வேண்டும்.
45 பள்ளிகளிலே 15 பள்ளிகளில்தான் தமிழ் சொல்லி தரப்படுகிறது. இப்படிப்பட்ட ஒரு நிலையில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் நடந்துக் கொண்டிருக்கிறது.
உங்கள நம்பி மொழி கொள்கைகளிலே நீங்கள் நியாயமாக நடந்து கொள்வீர்கள் என்று எப்படி நினைக்க முடியும்.
ரெயில் நிலையங்களில் கூட டிக்கெட் வாங்க முடியவில்லை. அங்கையும் ஹிந்தி திணிக்கப்பட்டு இருக்கிறது.
அப்படிபட்ட அரசாங்கம் எங்கள் மீது ஹிந்தியை மட்டும் இல்லாமல் சமஸ்கிருதத்தையும் திணிக்கின்றனர்.
அதுமட்டும் இல்லை எங்களுடைய தமிழ்நாட்டு முதலமைச்சர் அவர்கள் காலை உணவு திட்டத்தை கொண்டு வந்திருக்கிறார். கிட்டத்தட்ட ஒரு லட்சத்து 14 ஆயிரத்திற்கு மேல் காலை உணவுத் திட்டத்தால் பயன்பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
மதியம் உணவுத் திட்டத்தை கொண்டு வந்தது தமிழகம் என்ற பெருமையே நாங்கள் தலை நிமிர்ந்து சொல்லிக் கொள்வோம்.
ஆனால், பி.எம்.போஷன் என்ற திட்டம் நாடு முழுவதும் இருக்கக் கூடிய திட்டத்திற்கு இந்த அரசாங்கம் அந்த திட்டத்திற்காக மதிப்பீடு 11ஆயிரத்து 600 கோடி. அதில் குழந்தைகளுக்கு உணவு தரக்கூடிய திட்டத்திலே நீங்கள் ஒதுக்கீடு செய்திருப்பது 10 ஆயிரம் கோடி.
குழந்தைகளுக்கு உணவு தரக்கூடிய இந்த பி.எம்.போஷன் திட்டத்திற்கு கூட போதிய நிதியை ஒதுக்க முடியாத நீங்கள், எங்களுக்கு கல்வியை பற்றி சொல்லி தருகிறீர்கள். இதற்கு நாங்கள் தலைவணங்கி ஏற்றுக்கொள்ளவேண்டுமா ?
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- நேற்று மக்களவையில் ராகுல் காந்தி குழந்தை போல் அழுததை பார்க்க முடிந்தது.
- ராகுலின் குழந்தைத் தனம் தெரிந்துதான் மக்கள் அவரை ஏற்கவில்லை என்றார்.
புதுடெல்லி:
பாராளுமன்ற மக்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி பதிலளித்துப் பேசி வருகிறார். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:
மக்களவையில் ராகுலின் நேற்றைய செயல்பாடுகள் குழந்தைத்தனமாக இருந்தது.
ஏதோ பாதிக்கப்பட்டவர் போல் மக்களவையில் நாடகத்தை அரங்கேற்றினார் ராகுல்.
குழந்தை புத்தி உள்ளதால் ராகுலுக்கு எந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என தெரியவில்லை.
ராகுலின் குழந்தைத் தனம் தெரிந்துதான் மக்கள் அவரை ஏற்கவில்லை.
குழந்தை புத்தி உள்ள ஒருவரால் தான் மக்களவையில் கண்ணடிக்க முடியும்.
குழந்தை புத்தி உள்ள ஒருவர் தான் மக்களவையில் ஒருவரை திடீரென கட்டிப்பிடிக்க வைக்கும்.
நேற்று மக்களவையில் ராகுல் காந்தி குழந்தை போல் அழுததை பார்க்க முடிந்தது.
ஜாமினில் உள்ள ஒருவர் தன்னை நிரபராதி என நினைத்துக் கொள்ள முடியாது என தெரிவித்தார்.
- ராகுல் சொன்னது போல பயத்தில் இருந்து விடுதலை பெற்றேன்.
- மன்னர் ஆட்சியின் அடையாளம்தான் செங்கோல்.
எம்.பி பதவி பறிக்கப்பட்ட பின் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹூவா மொய்த்ரா மக்களவையில் இன்று பாஜகவுக்கு எதிராக அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தார்.
மக்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹூவா மொய்த்ரா கூறியதாவது:-
கடந்த வருடத்தில் பலர் என்னை பார்த்து மொய்த்ரா நீங்கள் நிறைய இழந்துவிட்டீர்கள் என்றனர். ஆம். நான் என்னுடைய பதவியை இழந்துவிட்டேன். வீட்டை இழந்துவிட்டேன். ஒரு அறுவை சிகிச்சையின்போது எனது கர்ப்பப்பையை இழந்துவிட்டேன்.
நான் எதை பெற்றேன் என தெரியுமா? ராகுல் சொன்னது போல பயத்தில் இருந்து விடுதலை பெற்றேன். உங்களை பார்த்து நான் பயப்பட மாட்டேன்.
இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் | குடியரசுத் தலைவர் செங்கோலுடன் அழைத்து வரப்பட்டார். மன்னர் ஆட்சியின் அடையாளம்தான் செங்கோல். ஜனநாயக நாட்டிற்கு செங்கோல் எதற்கு?"
மக்களவை தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமர் மோடி, Musalman, Mulla, Madrasa, Mutton 2 M-ல் தொடங்கும் அனைத்து வார்த்தைகளையும் பயன்படுத்தினார். ஆனால், ஒரு வார்த்தையை மட்டும் அவர் பயன்படுத்தவில்லை. அது MANIPUR".
இவ்வாறு அவர் கூறினார்.
- நீட் விவகாரத்தில் ஒரு நாள் விவாதம் நடைபெற வேண்டும்.
- நீட் தேர்வு பணக்கார குழந்தைகளுக்காக கொண்டு வரப்பட்டது.
மக்களவையில், குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசினார்.
அப்போது ராகுல் காந்தி பேசியதாவது:-
அயோத்தியாவில் வெற்றி பெற்ற சமாஜ்வாதி கட்சியின் உறுப்பினருக்கு எனது வாழ்த்து.
அயோத்தியா என்ற பெயரை சொன்ன உடனே என்னுடைய மைக் அணைக்கப்பட்டு விட்டது.
ராமர் பிறந்த மண்ணிலேயே பாஜகவிற்கு செய்தி வழங்கப்பட்டுவிட்டது. அந்த செய்தி நமது கண்முன்னே அமர்ந்திருக்கிறது. அயோத்தியாவில் என்ன நடந்தது. எப்படி நீங்கள் வெற்றி பெற்றீர்கள் என தெரிந்து கொண்டேன்.
சமாஜ்வாதி கட்சியின் உறுப்பினரிடம் நான் கேட்டு தெரிந்து கொண்டேன்.
அயோத்தியாவில் சிறு வியாபாரிகளை தெருவோரத்தில் வீசிவிட்டனர். அயோத்தி மக்களின் நிலத்தை பறித்து விட்டனர். வீடுகளை இடித்துவிட்டனர்.
ராமர் கோயில் திறந்து வைக்கப்பட்டபோது அதில் அம்பானி, அதானி மட்டும்தான் இருந்தனர். ராமர் கோயில் திறப்பில் அயோத்தியாவை சேர்ந்த மக்கள் இல்லை. அது அந்த மக்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது.
இதனால் தான் அயோத்தி மக்கள் பாஜகவிற்கு சரியான தீர்ப்பை வழங்கிவிட்டனர்.
அயோத்தி மக்கள் உங்களை தோற்கடித்துவிடுவார்கள் என்று முன்னரே பிரதமரிடம் ஆய்வாளர்கள் தெரிவித்துவிட்டனர்.
பிரதமர் அயோத்தி மக்களை மட்டும் அல்ல பாஜகவினரையே கூட அச்சமூட்டுகிறார்.
அக்னிவீர் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டவர்களை ராணுவ வீரர்கள் என்று நாம் கூற முடியாத நிலை உள்ளது. பண மதிப்பிழப்பை எப்படி கொண்டு வந்தாரோ, அதேபோல தன்னிச்சையாக கொண்டு வந்த திட்டம் தான் அக்னிவீர்.
அக்னிவீர் திட்டம் பிளவை ஏற்படுது்தும் திட்டம், எங்களுக்கு இந்த திட்டம் வேண்டாம்.
மணிப்பூரில் உள்நாட்டு போரை உருவாக்கி உள்ளீர்கள். ஆனால், இன்று வரை நாட்டின் பிரதமரான மோடி மணிப்பூருக்கு செல்லவில்லை. மணிப்பூர் இந்திய நாட்டின் ஒரு மாநிலம் இல்லையா ? நான் மணிப்பூருக்கு சென்று, குக்கி மற்றும் மைத்தேயி சமூகத்தினரை சந்தித்தேன்.
வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் சாலைகளில் திரண்டனர். போராடிய விவசாயிகளை நீங்கள் பயங்கரவாதிகள் என்று கூறுவீர்கள்.
குறைந்தபட்ட ஆதார விலைக்கு சட்டபூர்வ உத்தரவாதம் வழங்க வேண்டும் என்பதுதான் விவசாயிகளின் கோரிக்கை. ஆனால், அதனை நீங்கள் இதுவரை வழங்கவில்லை.
நீட் என்பது தொழில் முறை தேர்வு அல்ல. வணிக ரீதியிலான தேர்வு. நீட் தேர்வு மாணவர்களுக்கான போட்டித்தேர்வாக இல்லை.
தொழில் முறை தேர்வுகளை எல்லாம் நீங்கள் வணிக முறை தேர்வுகளாக மாற்றிவிட்டீர்கள்.
நீட் தேர்வில் ஒரு மாணவர் டாப்பராக வர முடியும். ஆனால் அவரிடம் பைசா இல்லை என்றால் மருத்துவ கல்லூரிக்கு செல்ல முடியாது.
நீட் பாஸ் மார்க் 10 சதவீதம் முதல் 25 சதவீதம். நீட் தேர்வு பணக்கார குழந்தைகளுக்காக கொண்டு வரப்பட்டது. நீட் உள்பட அனைத்து தேர்வுகளையும் நீங்கள் மத்திய மயமாக்கிவிட்டீர்கள்.
குடியரசுத் தலைவர் உரையில் நீட் தேர்வு குறித்தோ, அக்னிவீர் குறித்தோ, அக்னிவீர் குறித்தோ எதுவும் இடம்பெறவில்லை. நீட் விவகாரத்தில் ஒரு நாள் விவாதம் நடைபெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பாராளுமன்ற மக்களவையின் முதல் கூட்ட தொடர் வரும் 24-ம் தேதி தொடங்குகிறது.
- மக்களவை சபாநாயகர் தேர்தல் ஜூன் 26-ம் தேதி நடைபெறுகிறது.
பாட்னா:
பாராளுமன்ற மக்களவையின் முதல் கூட்ட தொடர் வரும் 24-ம் தேதி தொடங்கி ஜூலை 3-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, மக்களவை சபாநாயகர் தேர்தல் ஜூன் 26-ம் தேதி நடைபெறும் என மக்களவை செயலகம் நேற்று அறிவிப்பு வெளியிட்டது.
ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய
கூட்டணி கட்சிகள் சபாநாயகர் பதவியை எதிர்பார்ப்பதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், மக்களவை சபாநாயகர் தேர்தலில் பா.ஜ.க. சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளருக்கு ஐக்கிய ஜனதா தளம் தனது ஆதரவை அளிக்கும் என அக்கட்சியின் தலைவர் கே.சி.தியாகி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, கே.சி.தியாகி கூறுகையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் தெலுங்கு தேசம் கட்சிகள் அங்கம் வகித்து வருகின்றன. எனவே, சபாநாயகர் தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளருக்கு ஆதரவு அளிக்கும் என தெரிவித்தார்.
- நாட்டின் திறமை மீது காங்கிரஸ் எப்போதும் நம்பிக்கை வைத்தது இல்லை.
- நாங்கள் பணியாற்றும் வேகத்திற்கு இணையாக காங்கிரஸ் கட்சியால் பணியாற்றவே முடியாது.
மக்களவையில் பிரதமர் மோடி உரையாற்றியதாவது:-
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை உலகமே பாராட்டுகிறது. 10 ஆண்டுகால வலிமையான ஆட்சியின் மூலம் வலிமையான பொருளாதாரம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாங்கள் 3வது முறை ஆட்சிக்கு வரும்போது நாடு உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக மாறும். உலகின் 3வது பொருளாதார நாடாக இந்தியா மாறும் எனும்போது எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றனர்.
எதிர்க்கட்சிகள் விரைவில் பார்வையாளர் மாடத்தில் அமர்ந்திருப்பார்கள். 10 ஆண்டுகளுக்கு முன்பு 2014ல் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
இந்தியாவின் ஜிடிபி உலக பொருளாதாரத்தில் 11வது இடத்தில் இருந்து 5வது இடத்திற்கு வந்துள்ளது.
அடுத்த 30 ஆண்டுகளில் இருந்தியாவின் பொருளாதாரம் 3வது இடத்திற்கு முன்னேறும். 30 ஆண்டு காத்திருக்க வேண்டிய அவசியமில்லை, அடுத்த முறை ஆட்சிக்கு வரும்போது 3வது இடத்தில் இந்தியா இருக்கும்.
எனது மூன்றாவது முறை ஆட்சி காலத்தில் இந்தியா உலகிலேயே மூன்றாவது மிகப்பெரிய சக்தியாக உருவெடுக்கும்.
பாஜக அரசின் வேகத்தை காங்கிரஸ் கட்சியால் கற்பனை செய்து பார்க்க முடியாது. நகர்புறத்தில் வாழும் ஏழைகளுக்காக பாஜக அரசு 4 கோடி வீடுகளை கட்டிக் கொடுத்துள்ளது.
பாஜக செய்துள்ள சாதனைகளை காங்கிரஸ் செய்ய 100 ஆண்டுகள் ஆகும். நாட்டின் திறமை மீது காங்கிரஸ் எப்போதும் நம்பிக்கை வைத்தது இல்லை.
காங்கிரஸ் கொண்டுள்ள மனப்பான்மையால் நாட்டிற்கு பெரும் தீங்கு ஏற்படும். காங்கிரசுக்கு, கடுமையாக உழைக்கும் மனப்பான்மை இல்லை.
நாங்கள் 70 கோடிக்கும் அதிகமான எரிவாயு இணைப்புகளை கொடுத்துள்ளோம். இதையே காங்கிரஸ் ஆட்சி காலத்தில் செய்வதாக இருந்தால் 70 கோடி இணைப்புகளை வழங்க 60 ஆண்டுகள் ஆகி இருக்கும். நாங்கள் பணியாற்றும் வேகத்திற்கு இணையாக காங்கிரஸ் கட்சியால் பணியாற்றவே முடியாது. காங்கிரஸ் கட்சி ஒரு குறிப்பிட்ட பொருளை மீண்டும் மீண்டும் அறிமுகம் செய்ய நினைத்து தோல்வியடைந்தது.
இந்தியாவை பற்றி நேரு, இந்திரா காந்தி ஆகியோரின் எண்ணங்கள் மேன்மையாக இல்லை. மக்களை பற்றி சரியாக சொல்லாவிட்டாலும், இந்திரா காந்தி காங்கிரசை பற்றி சரியாக சொல்லி உள்ளார். ஒரு குடும்பத்தை தாண்டி காங்கிரஸ் கட்சியால் சிந்திக்கவும் முடியாது, பார்க்கவும் முடியாது.
காங்கிரஸ் கட்சியின் செயல்பாடு தற்போது அவர்களின் கூட்டணியை உடைத்துவிட்டது. எங்களுக்கு தேசத்தின் திறமையின் மீது நம்பிக்கை உள்ளது மக்களின் சக்தியின் மீதும் நம்பிக்கை உள்ளது.
3வது ஆட்சிக் காலத்தில் வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்குவோம். பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை கொண்டுவந்து, நாட்டை வளர்ச்சி பாதையில் வழிநடத்தினோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பாராளுமன்ற மக்களவைக்குள் புகுந்து வண்ண புகைக்குண்டுகளை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
- இது தொடர்பாக ஆறு பேர் கைது செய்யப்பட்டு, பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பாராளுமன்றத்தின் மக்களவையில் பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து இருவர்கள் திடீரென எம்.பி.க்கள் அமர்ந்திருந்த இடத்திற்குள் குதித்து புகைக்குண்டுகளை வீசினர். இதனால் மக்களவை அறை முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தன. பின்னர் எம்.பி.க்கள் மக்களவை பாதுகாவர்களுடன் சேர்ந்து அவர்களை மடக்கிப் பிடித்தனர். அதேநேரத்தில் மேலும் இருவர் பாராளுமன்ற வளாகத்திலும் இதேபோன்று தாக்குதலில் ஈடுபட்டனர்.
நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இவரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது உபா உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடர்ந்து டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட அனைவரும் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கூடுதல் செசன் நீதிமன்ற நீதிபதி ஹர்தீக் கவுர் முன் ஆஜர்படுத்தப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஐந்து பேர் (மனோரஞ்சன், சாகர் சர்மா, லலித் ஜா, அமோல் ஷிண்டே மகேஷ் குவாவாத் ஆகியோர் "தங்களிடம் வலுக்கட்டாயமாக 70 வெற்று பேப்பரில் கையெழுத்து வாங்கியதாகவும், எதிர்க்கட்சிகளுடன் தொடர்புள்ளதாக தொடர்புள்ளதா ஒத்துக்கொள்ளும்படி போலீசார் சித்ரவதை செய்தனர் என்றும் தெரிவித்தனர். இதற்காக தங்களுக்கு எலக்ட்ரிக் ஷாக் கொடுக்கப்பட்டதாகவும் நீதிபதியுடன் தெரிவித்தனர்.
இது தொடர்பாக போலீசார் பதில் அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை பிப்ரவரி 17-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இந்த வழக்கின் 6-வது குற்றவாளி நீலம் ஆசாத் ஆவார்.
- பாராளுமன்ற மக்களவையில் இருவர் வண்ண புகை குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தினர்.
- இது தொடர்பாக இதுவரை ஏழு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பாராளுமன்ற மக்களவை பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து மக்களவை எம்.பி.க்கள் அமர்ந்திருக்கும் இடத்திற்குள் இருவர் குதித்து வண்ண புகை குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தினர். அதேபோல் பாராளுமன்றத்திற்கு வெளியேயும் இருவர் புகை குண்டுகள் வீசினார்.
இந்த நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர். அதனைத்தொடர்ந்து இந்த சம்பவத்திற்கு மூளையாக செய்யப்பட்டவர் கைது செய்யப்பட்டார். மேலும் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து டெல்லி போலீசின் சிறப்பு பிரிவு விசாரணை நடத்தி வருகிறது. சதித்திட்டம் தீட்டியது குறித்து வாட்ஸ்அப், சமூக வலைத்தள உரையாடல்கள் உள்ளிட்டவைகளை சேகரித்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தின் முன்னாள் உயர் போலீஸ் அதிகாரியின் மகனை இந்த வழக்க தொடர்பாக போலீசார் பாகல்கோட்டில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட அவரை டெல்லி அழைத்துச் சென்று போலீசார் தீவிர விசாரணை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கைது செய்யப்பட்டவர் மக்களவையில் தாக்கப்பட்ட டி. மனோ ரஞ்சனின் நண்பர் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் பொறியியல் கல்லூரியில் ஒன்றாக படித்துள்ளனர்.
வீட்டில் இருந்து வேலைப் பார்த்துக் கொண்டிருந்த எனது சகோதரர் எந்த தவறும் செய்யவில்லை என அவரது சகோதரி தெரிவித்துள்ளார். மேலும், டெல்லி போலீசார் வீட்டிற்கு வந்தது உண்மை. எனது சகோதரரிடம் விசாரணை நடத்தினர். நாங்கள் அவர்களுக்கு ஒத்துழைப்ப வழங்கினோம். எனது சகோதரரும் மனோரஞ்சனும் ஒரே அறையில் தங்கியிருந்தனர். தற்போது எனது சகோதரர் வீட்டில் இருந்து வேலை செய்து வருகிறார்" என்றார்.
- நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பிரதமர் மோடி மக்களவையில் பேசினார்.
- மக்களவை நேற்று தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
புதுடெல்லி:
பாராளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த மாதம் 19-ம் தேதி தொடங்கியது. முதல் நாளில் இருந்தே மணிப்பூர் விவகாரம், எதிர்க்கட்சிகளின் முழக்கங்கள், பிரதமர் மோடி அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானங்கள் உள்ளிட்டவை காரணமாக பெரும்பாலான நாட்கள் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.
மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்திற்கு பதில் அளித்து பிரதமர் மோடி நேற்று முன்தினம் பேசினார். அமளிக்கு இடையே வன திருத்த சட்ட மசோதா, டெல்லி நிர்வாக மசோதா உள்பட சில முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இதையடுத்து, மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், பாராளுமன்றத்தின் மக்களவையில் ஆன்லைன் சூதாட்டம் மீது 28 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிப்புக்கான இரு மசோதாக்களை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதன்பின், ஆன்லைன் சூதாட்டம் மீது 28 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிப்புக்கான இரு மசோதாக்களுக்கு மக்களவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகள் மக்களவையைப் புறக்கணித்த நிலையில் குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
தமிழக அரசு விதித்துள்ள தடைக்கு பாதிப்பில்லாத வகையில் மசோதாவில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
- ராகுல் காந்தி உட்பட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கருத்துக்கள் தெரிவித்து பேசிய நிலையில் நேற்று பிரதமர் மோடி பதில் அளித்தார்.
- சுமார் இரண்டரை மணிநேரம் பிரதமர் மோடி பாராளுமன்றத்தில் பேசியதும், தொடர்ந்து நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி அடைந்ததும் இந்த கூட்டத்தொடரின் முக்கிய அம்சமாகும்.
பாராளுமன்ற மழைக்கால கூட்ட தொடர் கடந்த ஜூலை மாதம் 20-ந்தேதி தொடங்கியது. இந்த கூட்ட தொடரில் மணிப்பூர் கலவர பிரச்சினை முக்கிய அம்சமாக எதிரொலித்தது. கூட்டம் தொடங்கிய நாள் முதல் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவந்தது வரை எதிர்க்கட்சிகள் பாராளுமன்ற 2 அவைகளையுமே ஸ்தம்பிக்க செய்தன.
எதிர்க்கட்சிகள் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மத்திய அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தனர். அந்த தீர்மானம் மீதான விவாதம் கடந்த 8-ந்தேதி தொடங்கி நடைபெற்றது. ராகுல் காந்தி உட்பட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கருத்துக்கள் தெரிவித்து பேசிய நிலையில் நேற்று பிரதமர் மோடி பதில் அளித்தார். சுமார் இரண்டரை மணிநேரம் பிரதமர் மோடி பாராளுமன்றத்தில் பேசியதும், தொடர்ந்து நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி அடைந்ததும் இந்த கூட்டத்தொடரின் முக்கிய அம்சமாகும்.
நேற்றுடன் 16 நாள் நிறைவு பெற்று இன்று 17-வது நாளாக பாராளுமன்ற இரு அவைகளும் கூடின. இன்றும் மத்திய அரசை கண்டித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கங்கள் எழுப்பினர். அமளிக்கு மத்தியில் இந்திய தண்டனை சட்டம் தொடர்பான 3 முக்கிய சட்ட திருத்த மசோதாக்களை உள்துறை மந்திரி அமித்ஷா தாக்கல் செய்தார். அதன்பின்னர், மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இதேபோல் மாநிலங்களவையும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.
- மணிப்பூர் விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்விக்கு உள்துறை மந்திரி அமித்ஷா மக்களவையில் பதிலளித்தார்.
- நம்பிக்கை இல்லாத தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பிரதமர் மோடி நாளை மக்களவையில் பதில் உரை வழங்குவார்.
புதுடெல்லி:
மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பாராளுமன்ற இரு அவைகளிலும் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வந்தன. மேலும் , பாராளுமன்ற விதி 267இன் படி விரிவான விவாதம் நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்து வந்தனர்.
மேற்கண்ட கோரிக்கைகளுக்கு பாராளுமன்றத்தில் அனுமதி அளிக்கப்படாததால், மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தைக் கொண்டுவந்தனர். இதனை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஏற்றுக்கொண்டார்.
இதன் மீதான விவாதம் நேற்று நடைபெற்ற நிலையில், இன்றும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது காரசாரமான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் ராகுல்காந்தி பா.ஜ.க. அரசை விமர்சித்து காட்டமாகப் பேசியிருந்தார். அதனை தொடர்ந்து கனிமொழி எம்.பி உரையாற்றினார்.
இதற்கிடையே, மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மக்களவையில் பதிலளித்தார்.
மேலும், மணிப்பூரில் அனைத்துப் பிரிவினரும் இணைந்து பேச்சுவார்த்தையில் பங்கேற்க வேண்டும் என தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்ட நிலையில், தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் தெரிவித்தார். இதையடுத்து இரு அவைகளும் நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், நம்பிக்கை இல்லாத தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பிரதமர் மோடி நாளை பதில் உரை வழங்குவார் என மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மீதும் மத்திய அரசின் மீதும் எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் வைத்த குற்றச்சாட்டுகளுக்கு அவர் நாளை பதில் அளிப்பார். குறிப்பாக ராகுல் காந்தியின் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளுக்கு பிரதமர் மோடி நிச்சயம் பதிலடி கொடுப்பார் என பா.ஜ.க. வட்டாரங்கள் தெரிவித்தன.
- மணிப்பூர் விவகாரத்தில் அனைவரும் ஒன்றுபட்டு தீர்வு காண வேண்டும்.
- வன்முறைக்காக ஒருபோதும் நாங்கள் பாராளுன்றத்தை முடக்கியது இல்லை.
மக்களவையில் இன்று மணிப்பூர் வன்முறை தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்தார்.
அவர் பேசுகையில், " மணிப்பூரில் நிலைமை சீராகி வருவதால், யாரும் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்.
மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட இருதரப்பு மக்களிடையே பேசியுள்ளேன். மணிப்பூர் விவகாரத்தில் அனைவரும் ஒன்றுபட்டு தீர்வு காண வேண்டும். மணிப்பூரில் அமைதி திரும்ப தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
மணிப்பூரில் நடந்த சம்பவத்தால் உண்மையிலேயே எதிர்க்கட்சிகளை விட, எங்களுக்குத்தான் வலி அதிகம். எனினும், அந்த சம்பவம் அவமானமானது என்றால், எதிர்க்கட்சிகள் அதனை அரசியாக்குவது மேலும் அவமானமானது
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் அதிக வன்முறைகள் நடைபெற்றுள்ளன. வன்முறைக்காக ஒருபோதும் நாங்கள் பாராளுன்றத்தை முடக்கியது இல்லை.
மணிப்பூர் விவகாரத்தில் விவாதம் நடத்துவதற்கு முதல் நாளில் இருந்தே தயாராக இருந்தோம். மணிப்பூர் விவகாரத்தில் விவாதம் நடத்துவது தொடர்பாக சபாநாயகருக்கு கடிதம் கூடி எழுதியுள்ளேன்.
ஒரு முதலமைச்சர் சரியாக ஒத்துழைக்கவில்லை என்றால் மாற்றலாம். மணிப்பூர் முதலமைச்சர் ஒன்றிய அரசுடன் முழுவதும் ஒத்துழைக்கிறார்" என்றார்.
உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கோரிக்கையை ஏற்று மணிப்பூரில் அமைதி திரும்ப மக்களவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்