என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Lord order box"
- கந்தனின் பாதம் கனவிலும் காக்கும் என்பது சிவன்மலை முருகப்பெருமானின் அருள்வாக்கு.
- 7 கிலோ அரிசி, 5 லிட்டர் நல்லெண்ணெய் வைத்து பூஜை செய்யப்பட்டது.
காங்கயம் :
கொங்கு மண்டலத்தில் புகழ்மிக்க கோவில்கள் ஏராளமாக உள்ளன. அதில் சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவிலுக்கு தனிச்சிறப்பு உண்டு. கந்தனின் பாதம் கனவிலும் காக்கும் என்பது சிவன்மலை முருகப்பெருமானின் அருள்வாக்கு.
இந்த கோவிலில்தான் ஆண்டவன் உத்தரவு பெட்டி உள்ளது. முருகப்பெருமானே பக்தர்களின் கனவில் தோன்றி, ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைத்து பூஜை செய்யப்பட வேண்டிய பொருளை கூறி வருவதும், அதன்படி அந்த பெட்டியில் அப்பொருளை வைத்து பூஜை செய்யப்படுவதும் இன்று வரை கடைபிடிக்கப்பட்டு வரும் நடைமுறையாகும். கனவில் முருகப்பெருமானின் உத்தரவு கிடைக்கப்பெற்ற பக்தர் கோவில் நிர்வாகத்தை அணுகி விவரத்தை கூறுவார். கோவில் நிர்வாகிகள் சாமியிடம் பூ போட்டு கேட்டு அதன்பின்னர் கனவில் வந்த பொருளை உத்தரவு பெட்டியில் வைப்பார்கள். அதன்படி திண்டுக்கல் ரெயில் நிலைய பகுதியை சேர்ந்த முருக பக்தரான கற்பகம் (வயது 56) என்ற பெண் பக்தரின் கனவில் உத்தரவான நந்தியாவட்டம் பூ, அருகம்புல், துளசி ஆகியவை நேற்று முதல் உத்தரவு பெட்டியில் வைத்து பூஜிக்கப்பட்டு வருகிறது. இதற்கு முன்னதாக ஆண்டவன் உத்தரவு பெட்டியில் கடந்த 13-ந் தேதி முதல் 7 கிலோ அரிசி, 5 லிட்டர் நல்லெண்ணெய் வைத்து பூஜை செய்யப்பட்டது. தற்போது ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைத்து பூஜை செய்யப்படும் நந்தியாவட்டம் பூ, அருகம்புல், துளசி போன்றவை என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது போக போக தெரியும் என பக்தர்கள் கூறினர்.
- கற்தூணில் உள்ள கண்ணாடிப் பேழைக்குள் பக்தா்களின் பாா் வைக்கு வைப்பாா்கள்.
- பெட்டிக்குள்ளிருந்த நெற்கதிா் நீக்கப்பட்டு தற்போது வேல் வைக்கப்பட்டுள்ளது.
காங்கயம் :
திருப்பூா் மாவட்டம் காங்கயம் அருகே சிவன்மலையில் புகழ்பெற்ற சுப்பிரமணிய சுவாமி மலைக்கோவில் உள்ளது. மற்ற எந்தக் கோவிலிலும் இல்லாத சிறப்பு அம்சமாக, சிவன்மலை முருகன் கோவிலில் 'ஆண்டவன் உத்தரவு' என்ற பெயரில், ஏதாவது ஒரு பொருளை வைத்து சிறப்புப் பூஜை செய்வது வழக்கம். பின்னா் அந்தப் பொருளை கோவில் மூலவா் அறைக்கு முன்பாக, கற்தூணில் உள்ள கண்ணாடிப் பேழைக்குள் பக்தா்களின் பாா்வைக்கு வைப்பாா்கள்.
இந்த கண்ணாடி பெட்டிக்குள் என்ன பொருளை வைக்க வேண்டும் என்ற தோ்வு முறை வித்தியாசமானது. சிவன்மலை முருகன் ஏதாவது ஒரு பக்தரின் கனவில் வந்து, இன்ன பொருளை வைத்துப் பூஜை செய்ய உத்தரவிடுவதாகக் கூறப்படுகிறது. இதனால்தான் இது 'ஆண்டவன் உத்தரவு' என்று அழைக்கப்படுகிறது.
கடைசியாக கடந்த ஜனவரி 14 ந் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமை வரை நெற்கதிா் கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் சேலம் பகுதியை சோ்ந்த விஸ்வநாத சிவாச்சாரியாா் என்ற பக்தரின் கனவில் வந்ததாக நேற்று முதல் வேல் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. பின்னா் கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப்பட்டிருந்த நெற்கதிா் நீக்கப்பட்டு தற்போது வேல் வைக்கப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்