என் மலர்
நீங்கள் தேடியது "Lord Shiva"
- ராமன், லட்சுமணன், பரதன், சத்ருக்ணன் என்ற நான்கு புதல்வர்களுக்குத் தந்தையானான்.
- இவர்கள் பூஜித்த லிங்கங்கள் உட்பிரகாரத்தில் உள்ளன.
திருவாரூர் தியாகராஜர் கோவில்-ராமர் வழிபட்ட தலம்
பிள்ளைப்பேறு இல்லாத தசரதன் பல தலங்களையும் தரிசித்து வழிபட்டு தெற்கு நோக்கி வந்தான்.
ஆவூர்ப் பசுபதீஸ்வரம் முதலிய தலங்களை வழிபட்ட பின்னர் திருவாரூரை அடைந்தான்.
ஆரூர் நாயகனை வழிபட்ட பின் லிங்கப் பிரதிஷ்டை செய்து பூஜித்தான்.
தந்தையாகவும் தாயாகவும் சேயாகவும் திகழும் தியாகராஜப் பெருமானின் திருவருளால் திருமாலை மகனாக அடையும்பேறு பெற்றான்.
ராமன், லட்சுமணன், பரதன், சத்ருக்ணன் என்ற நான்கு புதல்வர்களுக்குத் தந்தையானான்.
தசரதன் மட்டுமன்று அவன் தந்தையான அஜன், தசரதன் மகன் ராமன், அவனுடைய புதல்வர்கள் லவன் குசன் எனத் தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து ரகு வம்சத்தினர் திருவாரூர் பெருமானை பூஜித்து லிங்க பிரதிட்டை செய்து வழிபட்டு நலம் அடைந்துள்ளனர்.
இவர்கள் பூஜித்த லிங்கங்கள் உட்பிரகாரத்தில் உள்ளன.
- அனுமானது வால் ராவணனால் தீக்கிரையாக்கப்பட்டுப் புண்ணாகி ரணமாயிற்று.
- அனுமன் பூஜித்த லிங்கம் அனுமந்தேஸ்வரர் என்ற பெயருடன் தனி சந்நிதியில் உள்ளது.
அனுமனுக்கு புதுவால் கொடுத்த தியாகேசர்
அனுமானது வால் ராவணனால் தீக்கிரையாக்கப்பட்டுப் புண்ணாகி ரணமாயிற்று.
பல தலங்களை தரிசித்து திருவாரூரை அடைந்த ஆஞ்சநேயன் திருவாரூர் பராபரனை வழிபட்டான்.
லிங்கப் பிரதிட்டை செய்து பூஜித்தான்.
அனுமன் பூஜித்த லிங்கம் அனுமந்தேஸ்வரர் என்ற பெயருடன் வெளிப்பிரகாரத்தில் தனி சந்நிதியில் உள்ளது.
ஈசன் திருவருளால் மீண்டும் பழையபடி அழகிய வால் பெற்ற ஆஞ்சநேயன் நோய் தீர்த்த வைத்திய லிங்கத்தைப் பூஜித்து மகிழ்ந்தான்.
- ரவுத்திர துர்க்கை என்பதற்கு பெயர் காரணம் அவளுடைய ருத்ராம்சம்.
- திருவாரூர் ஆலயத்தில் எட்டு துர்க்கைகள்.
திருவாரூர் தியாகராஜர் கோவில்-ரவுத்திர துர்க்கை
தியாகேசர் ஆலயத்தில் தெற்கு பிரகாரத்தில் ரவுத்திர துர்க்கைக்கு தனி ஆலயம் உள்ளது.
மண பருவத்தில் உள்ள ஆண்களும், பெண்களும் ராகுகால பூஜையின்போது இவளுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால் திருமண தடை நீங்கப் பெறலாம்.
ரவுத்திர துர்க்கை என்பதற்கு பெயர் காரணம் அவளுடைய ருத்ராம்சம்.
ராகு தோஷ நிவர்த்திக்கும் இந்த துர்க்கையை லட்சார்ச்சனை செய்து வழிபடலாம்.
திருவாரூர் ஆலயத்தில் எட்டு துர்க்கைகள்.
முதல் பிரகாரத்தில் உள்ள மகிடாசுரமர்த்தினி பிரதான துர்க்கை.
இரண்டாம் பிரகாரத்தில் அதற்கு அங்கமாக முதல் பிரகாரத்தில் மூன்றும், இரண்டாம் பிரகாரத்தில் நான்கும், கமலாம்பாள் சந்நிதியில் ஒன்றும் என எட்டு துர்க்கைகள் உள்ளன.
- இக்கருவறைச் சுவர்கள் முழுவதும் கல்வெட்டுகளால் நிரம்பியுள்ளன.
- திருவாரூர் தலத்துக்கு செல்லும்போது இந்த வண்ண சித்திரங்களை பார்த்து ரசித்து வாருங்கள்.
திருவாரூர் தியாகராஜர் கோவில் கருவறை சிறப்பு
திருவாரூர் தியாகராஜப் பெருமான் கோவிலில் கருவறைச் சுவற்றில் தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மன் ஆகிய உருவங்கள் கல் திருமேனிகளாக உள்ளன.
இக்கருவறைச் சுவர்கள் முழுவதும் கல்வெட்டுகளால் நிரம்பியுள்ளன.
புற்றிடங் கொண்ட பரம்பொருள் கருவறை சுவர்கள் தூண்களால் சூழப்பட்டு அத்தூண்களுக்கு இடையே தட்சிணாமூர்த்தி, லிங்கோற்பவர் ஆகிய உருவங்கள் சுதைச் சிற்பங்களாக உள்ளன.
லிங்கோற்பவரின் இருபுறமும் அன்னமூர்த்தியான பிரம்மனும் வராகமூர்த்தியான விஷ்ணுவும் நின்றுள்ளனர்.
இது மட்டுமின்றி கருவறை சுவர்களும் கூரைகளும் முழுவதம் ஊசிமுனை இடைவெளியின்றி வண்ண வண்ண ஓவியங்களால் நிரம்பியுள்ளன.
திரிபுரதகனம், காம தகனம், காலசம்காரம், கஜசம்காரம், ஜலந்தர வதம், தட்சயாக நாசம், அந்தகாசுரவதம், பிரம்ம சிரச்சேதம் ஆகிய அஷ்ட வீரட்ட வரலாறுகளும் நடராஜப் பெருமானின் ஆனந்தக் கூத்து தரிசனமும் மற்றும்
புஜங்க லலித மூர்த்தி, ஜதியோ நந்தமூர்த்தி, ஊர்த்துவத்தாண்டவர் போன்ற பல்வேறு வகையான நடனமூர்த்திகளும் வண்ண சித்திரங்களாக உள்ளன.
சட்டைநாதர், பிட்சாடணர், திரிசங்கு ரட்சக மூர்த்தி, ஆயதோத்தார மூர்த்தி, நீலகண்டர், அகோர வீரபத்திரர், மான் மழு தாங்கி கைகூப்பி நின்ற நிலையில் உள்ள நந்தி தேவர்,
அமர்ந்த நிலையில் உள்ள அதிகார நந்தி, கால பைரவர், தண்டாயுதபாணி, நிருதி, யமன், வருணன், இந்திரன், அக்கினி, முதலிய எண் திசை பாலர்கள்,
அடியார்கள் வணங்கும் சிவலிங்கம், கங்காளர், கங்காதரர், மகிஷாசுரமர்தனி, ராசிச் சக்கரம் போன்ற பலப் பல புராண வரலாறுகளும்
சிவ வடிவங்களும் தெய்வங்களும் தேவர்களும் வண்ணச் சித்திரங்களாகச் சுவர்கள், கூரைகள் முழுவதும் காணப்படுவது கண்கொள்ளாக் காட்சியாகும்.
ஆகையால் திருவாரூர் தலத்துக்கு செல்லும்போது நின்று, நிதானமாக இந்த வண்ண சித்திரங்களை பார்த்து ரசித்து வாருங்கள்.
- அருள்மிகு அசலேஸ்வரர் (இது தனியாக பாடல் பெற்ற தலம்)
- அருள்மிகு தேவேந்திரன் பூஜித்த லிங்கம்
திருவாரூர் ஆலயத்தின் உள்ளே அமைந்துள்ள முக்கிய புறக்கோவில்கள்
1. அருள்மிகு அசலேஸ்வரர் (இது தனியாக பாடல் பெற்ற தலம்)
2. அருள்மிகு கமலாம்பாள்
3. அருள்மிகு நீலோத்பலாம்பாள்
4. அருள்மிகு ராகுகால ரவுத்திர துர்க்கை
5. அருள்மிகு ருணவிமோசனர்
6. அருள்மிகு விஸ்வகர்மேஸ்வரர்
7. அருள்மிகு தெட்சிணாமூர்த்தி சுவாமி
8. அருள்மிகு ஆனந்தீஸ்வரர் கோவில்
9. அருள்மிகு சித்திஸ்வரர் கோவில்
10. அருள்மிகு ஹயக்ரீஸ்வரர் கோவில்
11. அருள்மிகு தட்சனேஸ்வரர் கோவில்
12. அருள்மிகு அண்ணாமலேஸ்வரர் கோவில்
13. அருள்மிகு வருணேஸ்வரர்
14. அருள்மிகு ஓட்டு தியாகேசர்
15. அருள்மிகு துளசிராஜா பூஜித்த கோவில்
16. அருள்மிகு தேவேந்திரன் பூஜித்த லிங்கம்
17. அருள்மிகு சேரநாதர்
18. அருள்மிகு பாண்டியநாதர்
19. அருள்மிகு ஆடகேஸ்வரம்
20. அருள்மிகு புலஸ்தியரட்சேஸ்வரர் கோவில்
21. அருள்மிகு புலஸ்திய பிரம்மேஸ்வரர் கோவில்
22. அருள்மிகு பக்தேஸ்வரர் கோவில்
23. அருள்மிகு வில்வாதீஸ்வரர் கோவில்
24. அருள்மிகு பாதாளேஸ்வரர்
- ஆடிப்பூர விழா அம்பாளுக்கு மிகுந்த சிறப்புடன் கொண்டாடப்பட்டு வருகிறது.
- 54 நாட்கள் 17 முறை ஒன்றிய மனதுடன் வலம் வந்தால் வேண்டியது கிடைக்கும்.
திருவாரூர் தியாகராஜர் கோவில்-கமலாம்பாள் கோவில்
திருவாரூர் திருக்கோவிலில் மூன்றாவது பிரகாரத்தில் வடமேற்கு திசையில் ஈசான்யத்தை நோக்கி அருள்மிகு கமலாம்பிகை திருக்கோவில் அமைந்துள்ளது.
இங்கு எழுந்துள்ள அம்பிகை சிரசில் சர்வேஸ்வரனைப் போன்று கங்கையையும், பிறையையும் சூடிக் கொண்டு யோக வடிவில் அமர்ந்திருக்கின்றாள்.
இவள் க-கலைமகள், ம-மலைமகள், ல-அலைமகள், ஆகிய மூன்று தேவியரின் ஒருங்கிணைந்த ஒருமித்த சங்கமமாக கருதப்படுகிறாள்.
ஆதலால் புனித பாரத தேசத்தில் புகழ்பெற்ற 64 சக்தி பீடங்களுள் அன்னை ஆட்சி புரியும் ஐந்து பீடங்களில் முதன்மையானதாகவும் (காசி&விசாலாட்சி, காஞ்சி&காமாட்சி, மதுரை&மீனாட்சி,
ஆரூர்&கமலாலயதாட்சி, நாகை & நீலாயதாட்சி) ஆகிய ஐந்து தலங்களில் சக்தி பீடமாகவும் சிவசக்தி சொரூபிணியாகவும் அருள்மிகு கமலாம்பாள் திகழ்கிறாள்.
மூன்று தேவியரும் ஒன்றாய் நிற்கும் அன்னையை துர்வாச முனிவர் வழிபட்டுள்ளார்.
அன்னை வலது கரத்தில் மலரினை ஏந்தியும், இடது கரத்தினை இடையில் இருத்தியும், கால்களை யோகாசன நிலையில் அமைத்து மகாராணியைப் போல் காட்சி அளிக்கிறாள்.
இவளின் அருளை வியந்து திருவாரூர் பிறந்த இசை மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் "நவாவர்ண கீர்த்தனை" பாடியுள்ளார்.
அன்னையின் தவத்தினால் தான் வன்மீகநாதரே (புற்றிடங் கொண்ட பெருமான்) இத்தலத்திற்கு எழுந்தருளினார் என்பார்கள்.
இத்திருத்தலத்தில் அருள்மிகு கமலாம்பாள் திருக்கோவில் தனிக்கொடி மரம், தனித்திருமதில் கொண்டு தனிக்கோவிலாக உள்ளது மிகவும் சிறப்புடையதாகும்.
ஆடிப்பூர விழா அம்பாளுக்கு மிகுந்த சிறப்புடன் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆடி வெள்ளி, தை வெள்ளிக் கிழமைகளும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
54 நாட்கள் 17 முறை ஒன்றிய மனதுடன் அன்னையை வலம் வந்தால் வேண்டியவருக்கு வேண்டுவனவற்றைத் தந்து அருள்பாலிப்பாள் அன்னை கமலாம்பிகை என்பது ஐதீகம்.
- ஆயிரங்கால் மண்டபத்திற்கு அருகேயுள்ள கொடிக்கம்பத்து நந்தி சிறப்பு வாய்ந்தவர்.
- சோழர்கள், பாண்டியர்கள், ஆகியோரின் கல்வெட்டுகள் மொத்தம் 65 உள்ளன.
திருவாரூர் கோவில் சிறப்புகள்
*அறுபத்து மூவருள் நமிநந்தி அடிகள், செருத்துணை நாயனார், கழற்சிங்கர், விறன்மிண்டர் ஆகியோரின் முக்தித் தலம்.
*சுந்தரமூர்த்தி நாயனாரின் தாயாரான இசைஞானியார் அவதரித்த (கமலாபுரம்) தலம்; இது திருவாரூரிலிருந்து மன்னார்குடி பாதையில் 7-கி.மீ. தொலைவில் உள்ளது. இத்தலத்தில் சிவன் கோவில் ஏதுமில்லை.
*திருவாரூர் தெற்குக் கோபுரத்திற்கு வெளியே, பரவையார் வாழ்ந்த கிழக்கு நோக்கிய மாளிகை வளாகத்தில் இசைஞானியாருக்குத் திருவுருவச் சிலை உள்ளது.
*திருவாரூர் - கோவில், குளம், வீதி, தேர்த்திருவிழா ஆகியவற்றைப் பற்றிய தேவாரத் திருப்பாடல்களைக் கொண்டத் திருத்தலம்.
*திருவாரூர்க் கோவில் - தியாகராஜர் திருக்கோவில், திருமூலட்டானம், பூங்கோவில் என்றெல்லாம் சிறப்பிக்கப்படுகிறது..
*சோழர்கள், பாண்டியர்கள், விசயநகர வேந்தர்கள் ஆகியோரின் கல்வெட்டுகள் மொத்தம் 65 உள்ளன.
*திருவாரூர் கோவிலில் புற்றிடங் கொண்ட பெருமானுக்கு எதிராக இரண்டு கொடிக்கம்பங்கள் உள்ளன.
*ஆயிரங்கால் மண்டபத்திற்கு அருகேயுள்ள கொடிக்கம்பத்து நந்தி சிறப்பு வாய்ந்தவர்.
*மழை இல்லாத நாட்களில் இவரை வழிபட்டு அறுகம்புல் மாலை சாத்திப் பூஜைகள் செய்து அந்த அறுகம்புல்லை பசுக்களுக்கு கொடுத்தால் பசுக்கள் நன்கு பால் சுரக்கும்.
*மழை பொழிந்து நீர்வளம் பெருகும்.
- இத்தலத்திற்கு பல பெயர்கள் உள்ளன.
- இந்த கோவிலுக்கு கமலாலயபுரம் என்ற பெயரும் உள்ளது.
திருவாரூர் தியாகராஜர் கோவில்-10 விதமான பெயர்கள்
இத்தலத்திற்கு பல பெயர்கள் உள்ளன. அவையாவன:
1.சேத்ரவாரபுரம்
2.ஆடகேசுரபுரம்
3.தேவயாகபுரம்
4.முசுகுந்தபுரம்
5.கலிசெலாநகரம்
6.அந்தரகேசுபுரம்
7.வன்மீகனாதபுரம்
8.மூலாதாரபுரம்
9.கமலாலயபுரம்
10.சமற்காரபுரம்
- இங்கு முப்பெரும் தேவியரின் அம்சமாக அம்பிகை விளங்குகிறாள்.
- இத்தலத்துக்கு சென்று தியாகேசரை வணங்கினால் திருமண வரம் கைகூடும்.
திருமண வரம் தரும் தியாகராஜர்
திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவிலை சுற்றிப் பார்க்க முழுமையாக ஒருநாள் ஆகும்.
அவ்வளவு பெரிய கோவில்.
திருவாரூர் கோவிலின் உள்ளே இருக்கும் சன்னதிகள், கிட்டத்தட்ட தெருவோர கோவில்களின் அளவுக்கு பெரிய அளவில் இருக்கிறது.
திருவாரூரில் கமலாம்பிகை, அல்லியங்கோதை, நீலோத்பலாம்பாள் என முப்பெருந்தேவியர்கள் திருவருள் புரிகிறார்கள்.
மூலவர் வன்மீகநாதர் தலையில் பிறைச்சந்திரனை சூடியுள்ளதைப் போல, இத்தலத்து நாயகி கமலாம்பிகையும் சந்திரனை நெற்றியில் சூடியிருக்கிறாள்.
கலைமகள், மலைமகள், அலைமகள் ஆகிய முப்பெரும் தேவியரின் அம்சமாக அம்பிகை விளங்குகிறாள்.
இத்தலத்துக்கு சென்று தியாகேசரை வணங்கினால் திருமண வரம், குழந்தை வரம், கல்வி மேன்மை, வேலை வாய்ப்பு, தொழில் விருத்தி, உத்தியோக உயர்வு ஆகியன நிறைவேறும்.
அம்மன் சந்நதியில் உள்ள அட்சர பீடத்தை வணங்கினால் கல்வியறிவு பெருகும்.
இத்தலத்தில் உள்ள பக்தர்கள் ராகு கால துர்க்கையை வழிபட்டு பதவி உயர்வு பணிமாற்றம் உள்ளிட்ட பல காரியங்கள் வெற்றியடையப் பெறுகிறார்கள்.
இத்தலத்து சண்முகரை வழிபட்டால் பகை விலகும்.
நீலோத்பலாம்பாளை வழிபட்டு அர்த்த ஜாமத்தில் நைவேத்தியம் செய்து பால் சாப்பிட்டால் குழந்தை வரம் கிடைக்கிறது.
ருண விமோசனப் பெருமானை வழிபட்டால் கடன் தொல்லை, உடற்பிணிகள் ஆகியன விட்டு விலகும்.
மூலவர் வன்மீகி நாதரை வழிபட்டால் எண்ணற்ற வரங்களும், செல்வ செழிப்பும் கிடைக்கும், பாவங்கள் நீங்கும், ஆணவம் மறையும்.
அம்மன் சன்னதியில் உள்ள அட்சர பீடத்தை வணங்கினால் கல்வியறிவு பெருகும்.
ஆடிப் பூரம், ஆடி வெள்ளி, தை வெள்ளி ஆகிய தினங்களில் இங்குள்ள அம்பாளை வழிபட்டால் அருள் பெறலாம்.
பங்குனி உத்திரத்தில் இங்கு நீராடினால், கும்பகோணத்தில் 12 மகாமகம் நீராடிய பலன் உண்டு என்பது ஐதீகம்.
நாகதோஷம் உள்ளவர்கள் குளத்தின் நடுவே நாகநாதர் சன்னதியில் வழிபடுகின்றனர்.
- சிதம்பர ரகசியம் போல இங்குள்ள மூலஸ்தானத்தில் ரகசியம் உள்ளதாக கூறப்படுகிறது.
- தமிழகத்திலுள்ள தேர்களிலேயே திருவாரூர் தேர் தான் மிகவும் பெரியதாகும்.
திருவாரூர் தேர்
கமலாம்பிகை திருக்கோவில் மூன்றாவது பிரகாரத்தில் எழுந்துள்ள அம்பிகை சிரசில் சர்வேஸ்வரனைப் போன்று கங்கையையும்,பிறையையும் சூடிக்கொண்டு யோக வடிவில் அமர்ந்திருக்கின்றாள்.
அம்பாள் கோவிலின் மேற்கு மூலையில் அட்சர பீடமுள்ளது.
இதில் பீடமும் ஐம்பத்தோரு எழுத்துக்கள் எழுதப்பெற்ற திருவாசியுமே உள்ளன.
நின்று தியானித்துச் செல்லவேண்டும்.
தமிழகத்திலுள்ள தேர்களிலேயே திருவாரூர் தேர் தான் மிகவும் பெரியதாகும்.
சிவபெருமான் இத்தலத்தில் மட்டும் 364 திருவிளையாடல்கள் நிகழ்த்தியுள்ளார்.
திருவாரூரில் பிறந்தால் முக்தி என்பதால், எமனுக்கு வேலை இல்லாமல் போனது.
எனவே இங்கு எமனே, சண்டிகேஸ்வரராக இருந்து இறைவனை வேண்டிதன் வேலையை காப்பாற்றிக் கொண்டார்.
எமபயம் உள்ளவர்கள் இங்கு வழிபடுவது சிறப்பு.
திருவாரூரில் தியாகராஜரின் முக தரிசனம் காண்பவர்கள், 3 கி.மீ. தொலைவிலுள்ள விளமல் சிவாலயத்தில் பாத தரிசனம் காண்பது நல்லது.
சிதம்பர ரகசியம் போல தியாகராஜருக்கு பின்னுள்ள மூலஸ்தானத்தில் ரகசியம் உள்ளதாக கூறப்படுகிறது.
பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை தான் சிவாலயங்களில் பிரதோஷ பூஜை நடத்தப்படும்.
ஆனால், திருவாரூர் தியாகராஜர் கோவிலில் தினமும் மாலை 4.30 முதல் 6 மணி வரை நித்ய பிரதோஷ பூஜை நடத்தப்படுகிறது.
இந்த நேரத்தில் தியாகராஜரை முப்பத்து முக்கோடி தேவர்களும் தரிசிப்பதாக ஐதீகம்.
எனவே, இந்தக் கோவிலுக்கு மாலை வேளையில் சென்றால், எல்லா தேவர்களின் அருளையும் பெற்ற புண்ணியம் கிடைக்கும்.
- தேவர்கள் பூஜிக்கத்தக்க அந்த லிங்கத்தை மானிடனுக்கு தர இந்திரனுக்கு மனம் வரவில்லை.
- முசுகுந்தன் அவை போலியானவை என்பதைக் கண்டு பிடித்து விட்டார்.
திருநள்ளாறு சென்றாலும்...
திருவாரூர் செல்ல வேண்டும்!
ஒருமுறை இந்திரனுக்கு அசுரர்களால் ஆபத்து ஏற்பட்டது.
அதை முசுகுந்த சக்கரவர்த்தி என்பவரின் உதவியுடன் இந்திரன் சமாளித்தான்.
அதற்கு கைமாறாக முசுகுந்த சக்கரவர்த்தியிடம் "என்ன வேண்டும்?" எனக் கேட்க, திருமால் தன் நெஞ்சில் வைத்து பூஜித்த விடங்க லிங்கத்தை கேட்டார்.
தேவர்கள் மட்டுமே பூஜிக்கத்தக்க அந்த லிங்கத்தை ஒரு மானிடனுக்குத் தர இந்திரனுக்கு மனம் வரவில்லை.
தேவ சிற்பியான மயனை வரவழைத்து, தான் வைத்திருப்பதைப்போலவே 6 லிங்கங்களை செய்து அவற்றைக் கொடுத்தான்.
முசுகுந்தன் அவை போலியானவை என்பதைக் கண்டு பிடித்து விட்டார்.
வேறு வழியின்றி, இந்திரன் நிஜ லிங்கத்துடன், மயன் செய்த லிங்கங்களையும் முசுகுந்தனிடம் கொடுத்து விட்டான்.
அவற்றில், நிஜ லிங்கமே திருவாரூரில் உள்ளது. மற்ற லிங்கங்கள் சுற்றியுள்ள கோவில்களில் உள்ளன.
இவை "சப்தவிடங்கத்தலங்கள்" எனப்படுகின்றன. "சப்தம்" என்றால் ஏழு.
திருவாரூரில் "வீதி விடங்கர்," திருநள்ளாறில் "நகர விடங்கர்," நாகப்பட்டினத்தில் "சுந்தர விடங்கர்," திருக்குவளையில் "அவனி விடங்கர்," திருவாய்மூரில் "நீலவிடங்கர்," வேதாரண்யத்தில் "புவனி விடங்கர்," திருக் காரவாசலில் "ஆதி விடங்கர்" என்ற பெயர்களில் விடங்க லிங்கங்கள் அழைக்கப்படுகின்றன.
இந்த லிங்கங்கள் கையடக்க அளவே இருக்கும். சப்தவிடங்கத்தலங்கள் உள்ள கோவில்களில் சுவாமியை "தியாகராஜர்" என்பர்.
சதயகுப்தன் என்ற அசுரன், தேவர்களுக்கு தொந்தரவு கொடுத்தான். இவனை சனிதோஷம் பிடித்தது. எனவே நவக்கிரகங்களை எதிர்த்து போரிட்டான்.
பயந்து போன கிரகங்கள் திருவாரூர் சிவனிடம் முறையிட்டனர்.
சிவன், "என்னை நாடி வரும் பக்தர்களுக்கு எந்த தொந்தரவும் கொடுக்கக்கூடாது" என்ற நிபந்தனையின்படி நவக்கிரகங்களைக் காப்பாற்றினார்.
எனவே, நவக்கிரகங்கள் இங்கு நேர்கோட்டில் சிவனை நோக்கியபடி அமைந்துள்ளன.
கிரகங்கள் பக்தர்களுக்குத் தொல்லை கொடுக்கிறதா என்பதைக் கண்காணிக்க விநாயகர் சிலை, கிரகங்களின் சன்னதியில் உள்ளது.
எனவே தான் "திருநள்ளாறு சென்றாலும் திருவாரூர் செல்ல வேண்டும்" என்பார்கள்.
- சுவாமி சன்னதியின் முதல் பிரகாரத்தில் அருள்பாலிக்கிறார் வாதாபி கணபதி.
- திருவாரூரில் மூலவரை "வன்மீகநாதர்" என்ற திருப்பெயரிட்டு அழைக்கின்றனர்.
திருவாரூர் கோவில்-முக்கியமான விநாயகர்கள்
தியாகராஜர் கோயிலில் 84 விநாயகர்கள் உள்ளனர்.
இவர்களில் நால்வருக்கு தனி சிறப்பு உண்டு.
அம்மன் சன்னதி பிரகாரத்திலுள்ள, நடுக்கம் தீர்த்த விநாயகரை, நரம்புத்தளர்ச்சி உள்ளவர்கள், டென்ஷனாக இருப்பவர்கள் வழிபடுகிறார்கள்.
மேற்கு கோபுரத்தின் அருகில், சுந்தரருக்கு சிவனால் தரப்பட்ட பொன், நிஜத்தங்கம்தானா என்பதை சோதித்துப் பார்த்து தந்த, "மாற்றுரைத்த விநாயகர்" அருள்பாலிக்கிறார்.
நகை வாங்கும் முன் பெண்கள் இவரை வழிபடுகின்றனர்.
சிவன் சன்னதியின் முதல் பிரகாரத்திலுள்ள மூலாதார கணபதி, சுருண்டு படுத்த ஐந்து தலை நாகத்தின் நடுவில் விரிந்த தாமரைப்பூ மீது நர்த்தனம் ஆடும் நிலையில் உள்ளார்.
யோகா பழகுபவர்கள் இவரை வணங்குவது சிறப்பு.
சுவாமி சன்னதியின் முதல் பிரகாரத்தில் அருள்பாலிக்கிறார் வாதாபி கணபதி.
இந்த விநாயகர் முன்பு நின்றுதான், திருவாரூர் முத்துசுவாமி தீட்சிதர் "வாதாபி கணபதிம்" எனத் தொடங்கும் பாடலைப் பாடினார்.
திருவாரூரில் மூலவரை "வன்மீகநாதர்" என்ற திருப்பெயரிட்டு அழைக்கின்றனர்.
இவர் தலையில் பிறைச்சந்திரனை சூடியுள்ளதைப் போல, இத்தலத்து நாயகி "கமலாம்பிகையும்" சந்திரனை நெற்றியில் சூடியிருக்கிறாள்.
க-கலைமகள், ம-மலைமகள், ல-அலைமகள் ஆகிய முப்பெரும் தேவியரின் அம்சமாக விளங்குகிறாள்.
வலக்கரத்தில் மலர் ஏந்தியும், இடது கரத்தை இடையில் வைத்தும், கால்களை யோகாசன நிலையில் அமைத்தும் ராணி போல் காட்சி தருகிறாள்.
இத்தலத்தின் வடபால் சுக்கனாறும், தென்பால் ஓடம்போக்கியாறும் ஒடுகின்றன.
பஞ்ச பூதத்தலங்களுள் பிருதிவித் தலம். எல்லா சிவாலயங்களின் சான்னித்யமும் மாலை நேரத்தில் இத்தலத்தில் விளங்குவதாக ஐதீகம்.